மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு-கல்முனை நவற்குடா பிரதான வீதியில்நேற்று பிற்பகல் வீதி வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடலை வண்டி மீது வீதியில் வேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.மேற்படி விபத்தினால் கடலை வண்டி தடம்புரண்டதுடன், கடலை வண்டியும்,அதிலிருந்த உணவுப் பொருட்களும் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளதுடன், கடலை வண்டி மீது மோதிய மோட்டார் சைக்கிளும் சேதமாகியுள்ளது.கடலை வண்டி மீது மோதிய மோட்டார் சைக்கிள் ஓட்டியவர் மது...
வவுனியா வைரவப்புளியங்குளத்தில் திருட்டில் ஈடுபட்ட மூன்று திருடர்களை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் நேற்று மாலை 6.00 மணிக்கு இடம்பெற்றது.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வீடு ஒன்றில் திருட்டில் ஈடுபட்ட திருடர்கள் அங்கிருந்த முச்சக்கர வண்டி ஒன்றில் வீட்டில் திருடிய பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
ஒருவர் மாத்திரம் குறித்த வீட்டில் தொடர்ச்சியாக திருட்டில் ஈடுபட்டிருந்த நிலையில் வீட்டிற்கு வந்த வீட்டு உரிமையாளர் திருடனைப் பார்த்து கூக்குரலிட்டு...
உலகின் பார்வைமுழுவதும் சில நாட்களாய் இலங்கையின் மீதுதான்.
காரணம், நிகழ்ந்திருக்கும் பாராளுமன்றக் குழப்பங்கள்.
பாராளுமன்றம் கூடப்போகிறது என்றும்,
யார் உண்மைப்பிரதமர்? யார் பொய்ப்பிரதமர் என்ற கேள்விக்கான விடை,
பெரும்பாலும் கிடைத்துவிடும் என்றும்,
பாராளுமன்றைக் கூட்டாமல் ஜனநாயகத்தைப் புறந்தள்ளி,
ஜனாதிபதி செய்த ஆள்பிடிக்கும் வேலை,
வெற்றியில் முடிந்ததா? தோல்வியில் முடிந்ததா? என்பதற்காம் பதில் தெரிந்துவிடும் என்றும்,
ஆவலோடு அனைவரும் எதிர்பார்த்திருக்க,
விட்ட பிழையைச் சரிசெய்வதாய்ச் சொல்லி,
மீண்டும் ஒரு பிழையை விட்டார் ஜனாதிபதி.
தான் அமைத்த மஹிந்த ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்பது,
பெரும்பாலும் தெரிந்துபோய்விட,
திடீரென 09...
வவுனியா நகரசபையின் ‘எழு நீ’ விருது தொடர்பாக இதுவரை மெளனம் காத்து வந்திருந்தேன்-சிரேஸ்ட ஊடகவியளாலர் வெட்டு ஒன்று துண்டு இரண்டு
Thinappuyal News -
வவுனியா நகரசபையின் ‘எழு நீ’ விருது தொடர்பாக இதுவரை மெளனம் காத்து வந்திருந்தேன். ஏனெனில் ஒரு நகரசபை முடிந்ததைதான் செய்யும். அதிலும் ஒரு இளம் தவிசாளர் உள்ளார் அவரது முயற்சிக்கும் பயணத்திற்கும் தடை ஏற்படுத்த கூடாது என்பதற்காக.
எனினும் விருது தெரிவுக்குழுவில் உள்ள ஒருவர் ஊடகங்களை விமர்சித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த விருது வழங்கும் நிகழ்வானது நகரசபை தலைவரின் விருப்பமா? அவரது அலுவலக அறைக்கு முன்பாக மக்கள் வரிப்பணத்தில் புதிய அறை...
மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க அனுமதி கோரி பாராளுமன்றத்தில் MP சுமந்திரன் ஆங்கிலத்தில் அதிரடிப்பேச்சு
Thinappuyal News -
மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க அனுமதி கோரி பாராளுமன்றத்தில் MP சுமந்திரன் ஆங்கிலத்தில் அதிரடிப்பேச்சு.
https://www.facebook.com/thinappuyalengnews.engnews/videos/355505328549860/
விஜய் நடித்து கடந்த தீபாவளிக்கு வெளியான சர்கார் படம் இன்னும் அனைத்து தியேட்டர்களிலும் திரையிடப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. உலகம் முழுவதும் வெளியான இந்த படம் இதுவரை மட்டுமே 250 கோடிகளை வசூலித்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால் சில விநியோகஸ்தர்கள் போட்ட பணத்தை எடுக்க முடியவில்லை என கூறி வருகின்றனர். இந்நிலையில் செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் பிரபல திரையரங்கு ஒன்றின் உரிமையாளர் இப்படத்தின் வசூலை பற்றி சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.
அதில், சர்கார் படத்தின்...
தமிழகத்தில் எப்படி பிரமாண்ட ரசிகர்கள் கூட்டத்தை விஜய் வைத்திருப்பது போல் தெலுங்கில் பவன் கல்யாண். இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் என்பது வேற லெவல் தான்.
இந்நிலையில் இவர் சென்னையில் தன் கட்சி குறித்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டார், அது முடிந்து சில யு-டியுப் சேனலுக்கு பேட்டியளித்தார்.
அப்போது சர்கார் பிரச்சனை குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு அவர் ‘சினிமா என்பது எளிதில் எல்லோரும்...
தமிழ் சினிமாவின் பெருமையை இந்தியளவில் எடுத்து சென்றவர்களில் ரஜினியும், ஷங்கரும் முக்கியமானவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படம் செய்தால் எப்படியிருக்கும் என்பது நீண்ட நாள் விருப்பம்.
அதற்கு பலனாக சிவாஜி, எந்திரன் என இரண்டு மெகா ஹிட் படங்கள் திரைக்கு வந்து அசத்தியது, தற்போது அதை தொடர்ந்து 2.0 படம் அடுத்த வாரம் திரைக்கு வரவுள்ளது.
இப்படம் முதல் நாள் இந்தியாவில் மட்டுமே ரூ 100 கோடி வசூல் செய்யும்...
சர்கார் தமிழ் சினிமாவில் பல வசூல் சாதனைகளை அடித்து நொறுக்கிய படம். ஆனால், இப்படம் தற்போது வரை வெற்றியா, தோல்வியா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ஏனெனில் படத்தை உலகம் முழுவதும் பல இடங்களில் அதிக தொகை கொடுத்து வாங்கியுள்ளனர், இந்நிலையில் படம் வெளிவந்த 16 நாட்களில் எந்த ஏரியாவில் எவ்வளவு வசூல் சர்கார் என்பதை முழுமையாக இதில் பார்ப்போம். இதோ...
TamilNadu
Chennai City ரூ 13.75Cr
Chengalpat ரூ 25.60Cr
...
க. பொ.சாதாரண தர பரீட்சைக்கு ஆறு இலட்சத்து ஐம்பத்தாராயிரத்து அறுநூற்றி நாற்பத்தொரு(6,56 641)பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக பரீட்சை திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எஸ்.பிரகாசன் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 3 ஆம் திகதி நடைபெறவுள்ள க.பொ.சாதரணப் பரீட்சைக்கு (2018) நாடாளவிய ரீதியில் ஆறு இலட்சத்து ஐம்பத்தாராயிரத்து அறுநூற்றி நாற்பத்தொரு(6,56 641)பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எஸ்.பிரகாசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் க.பொ.சாதாரணப் பரீட்சைக்கு பரீட்சை மேற்பார்வையாளர்களாக கடமையாற்றுபவர்களுக்கான 'பரீட்சை...