-மன்னார் நகர் நிருபர்-   எதிர் வரும் நத்தார், புதுவருட பண்டிகைக்கால வியாபாராங்களை மேற்கொள்ள இம்முறை மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் 298 தற்காலிக வியாபார நிலையங்கள்  அமைக்க இடம் அடையாளப் படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், நத்தார் , புது வருட பண்டிகைக்கால வியாபாராங்களை மேற்கொள்ள ஒவ்வெரு வருடமும் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் 31...
இதுவரை கண்டறியப்படாதிருந்த மூளையிலுள்ள மறைவிடம் ஒன்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதனை நரம்பியல் நிபுணரான George Paxinos மற்றும் அவரது குழுவினர் Neuroscience Research Australia (NeuRA) இல் மேற்கொண்ட பரிசோதனைகளின்போது கண்டுபிடித்துள்ளனர். இப் பகுதியானது உணர்வு மற்றும் இயக்கங்கள் தொடர்பான தகவல்களை வாங்கிக்கொள்ளும் பகுதியாக காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது உடலின் அமைப்பு (நிலை), சமநிலை மற்றும் அசைவு என்பவற்றினால் உண்டாக்கப்படும் தகவல்களை இப் பகுதி வாங்கிக்கொள்கின்றது. வெறும் 2 மில்லி மீற்றர் அளவே...
விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பிளாப்பி டிஸ்க்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கணினிகள் பயன்படுத்தும் தொடக்க காலத்தில் பிளாப்பி டிஸ்க்குகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்த டிஸ்க்குகள் பயன்பாட்டில் இல்லை. இந்நிலையில், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆன விடயம், கடந்த ஒரு வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, Space Station-யில் இருக்கும் பழைய பொருட்களை...
முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும், பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான அஜய் பிராமலின் மகன் ஆனந்துக்கும் அடுத்த மாதம் திருமணம்  நடக்கவுள்ளது. இவர்களது நிச்சயதார்த்தம் இத்தாலியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. அரண்மனை செட்டப்பில் வடிவமைக்கப்பட்டு நடந்த இந்த நிச்சயதார்த்ததின் செலவு மட்டும் 26 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் தாண்டி, இஷா - பிரமோலின் திருமண பத்திரிகை 1 லட்சம் ஆகும். திருமண அழைப்பிதழை வைத்து வழிபடுவதற்காக குடும்பத்தினருடன் அம்பானி கேதார்நாத் கோயிலுக்கும் சென்றார். அக்டோபர்...
>அதிகாலை விழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, காலை எழுந்ததும் முதலில் நமது உள்ளங்கைகள் அல்லது கண்ணாடியில் முகத்தை பார்க்க வேண்டும். காலை கடன்களை முடித்து குளித்து முடித்து விட்டு, முதலில் முகத்தை துடைக்காமல், முதுகுப் பகுதியை துணியால் துடைக்க வேண்டும். உடலை தூய்மை படுத்திய பின் ஈரமான துண்டு அல்லது வேஷ்டியை உடுத்திக் கொண்டு பூஜை அறைக்குள் சென்று, கடவுளை வணங்க வேண்டும். பூஜை அறையானது வடகிழக்கு திசையில்...
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா தோல்வியடைந்த காரணம் குறித்து வீரேந்திர சேவாக் கிண்டலாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இந்தியா - அவுஸ்திரேலிய அணிகள் இடையில் இரு தினங்களுக்கு முன்னர் நடந்த முதல் டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 16.1 ஓவர்கள் ஆடி முடித்த போது மழை குறுக்கிட்டதால் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 17 ஓவர்களில் 158 ரன்கள் எடுத்தது அந்த அணி. டக்வொர்த் - லெவிஸ்...
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி, தன்னுடைய மனைவி சாக்சியை திருமணம் செய்துகொள்ள ராபின் உத்தப்பா தான் காரணம் என செய்தி வெளியாகியுள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி, தன்னுடைய மனைவி சாக்சியை கடந்த 2010ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு தற்போது ஷிவா என்ற மகள் உள்ளார். இவர்கள் இருவரும் எப்படி காதலித்து திருமணம் செய்துகொண்டனர் என்பது பற்றி டோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தை பார்த்த அனைவருக்குமே...
நம் உடலில் சாதாரணமாக ஏற்படும் அறிகுறிகள் அலட்சியமாக நாம் தவிர்க்கக்கூடாது. ஆண்களை தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயினை சில அறிகுறிகளை வைத்தே நாம் கண்டறிய இயலும். புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகள் சிறுநீர் கழித்தலில் ஏற்படும் சிரமம் புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படவுள்ளதை குறிக்கும் முக்கியமான அறிகுறியாகும். இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் கூட புரோஸ்டேட் புற்றுநோய்க்கான அறிகுறியாகும். அடிக்கடி சிறுநீர் கழித்தல் மட்டுமல்லாது சிறுநீர் சரியாக வெளியேறாமல் இருப்பதும் புற்றுநோய்க்கான அறிகுறியாகும். முழுமையாக...
நடிகைகள் என்றாலே எப்போதும் ட்ரெண்டியாக உடை அணிந்துதான் வெளியே வருவார்கள். அவை சில சமயங்களில் மோசமாக இருந்தால் சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்துவிடுவார்கள். அதுபோலத்தான் தற்போது விமரிசனத்திற்கு உள்ளாகியுள்ளார் பிரபல நடிகை மலைக்கா அரோரா. இவர் சமீபத்தில் அணிந்து வந்த ஜீன்ஸ் அதிகம் கிழிந்திருந்தது. அதை இணையவாசிகள் மீம்கள் போட்டு மிக மோசமாக ட்ரோல் செய்துவிட்டனர். அவர் அணிந்துவந்த ஜீன்ஸ் இதுதான்.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த பெண்ணுடன் கடந்த ஆண்டில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்காக தன் சொத்தை விற்று அழகான மனைவிக்காக கிரேண்டாக செலவு செய்திருக்கிறார். திருமணத்திற்குப் பின் சில நாட்கள் கழித்து தனது மனைவியிடம் செலவுக்கான தொகையை வரதட்சனையாக கேட்டு தினமும் நச்சரித்துள்ளார். ஒரு கட்டத்தில் கைஓங்கி மனைவியை கொடூரமாக தாக்கியுள்ளார். பலமாக காயப்பட்ட அந்த பெண், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை...