கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அனுமதிப் பத்திரங்களில், ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பில் விரைவில் அறிவிக்குமாறு,  பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து இப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களைத்  தபாலிடும் பணிகள்  ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக,  பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இந் நிலையில் இது தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள்  இருப்பின், 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும்,  பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(மன்னார் நகர் நிருபர்) 2018 ஆண்டுக்கான மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஆரம்ப கட்ட செயற்பாடுகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மும்மூரமாக இடம் பெற்று வருகின்றது. அரசியல் மாற்றங்களாலும் அரசியல் குழப்ப நிலை மற்றும் சில அரசியல்வாதிகளின் விளம்பரம் தேடும் முயற்சியாலும் சில இடங்களில் மாவீரர் நிகழ்வு செயற்பாடுகள் மந்த கதியில் நகர்கின்றது. அந்த வகையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள துயிலும் இல்லங்கள் ஆன ஆட்காட்டிவெளி பண்டிவிரிச்சான் துயிலும் இல்லங்கள் தற்போது மாவீரர் குடும்பதினராலும்...
இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற திடீர் சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பெண்கள் நேற்று  இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு 15 ஹேனமுல்ல முகாம் பகுதியில் வைத்து போதைப்பொருள் விற்பனை முகவராக செயற்பட்டு வந்த பெண்ணொருவர் மோதரை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை கைதுசெய்த வேளையில் அவரிடமிருந்து 5 கிராம் 700 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. ஹேணமுல்ல ரந்திய உயன முகாமில் வசித்துவரும் 29 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்....
மஸ்கொலியா காட்மோரிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணிக்கும்  இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் தற்போது அதன் சாரதி  விடுமுறையில் சென்றால் மீண்டும் சேவைக்கு திரும்பும் வரை அதற்கு மாறாக யாரும் பணிக்காக வருவதில்லை என்று பாதிக்கப்பட்ட மக்களும் மாணவர்களும் புகார் தெரிவிக்கின்றனர். குறித்த பஸ்ஸானது காலை 6:30 மணியளவில் காடமோரிலிருந்து மஸ்கெலியா, நோர்வூட்  ஊடக ஹட்டன் சென்றடையும். இந்நிலையில் குறித்த பஸ்ஸானது கடந்த ஒரு வாரமாகச் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது இதனால் பாடசாலைக்கு...
மட்டக்களப்பு களுதாவளை ஸ்ரீ சுயம்புலிங்கப் பிள்ளையார் அருளாசியுடன் ஸ்ரீ ஏகாதச ருத்ர வேள்வி கடந்த 19ஆந்திகதி முதல் நடைபெற்று வருகிறது. 22.11.2018 வியாழக்கிழமை நிறைவு நாள். அதிகாலையில் ஏகாதச ருத்ர ஜெபத்துடன் சிவபூஜைகள் ஆரம்பமாகி தென்னிந்திய பிரபல கர்நாடக இசைப்பாடகி கானவிநோதினி கலைமாமணி டாக்டர் நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் சிவபுராணம் பாடி அனைத்து வரங்களையும் நல்கக்கூடிய ஸ்ரீ ஏகாதச ருத்ர வேள்வியைத் துவக்கி வைக்க பிரமாண்டமான ருத்ர வேள்வி...
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைப்படி அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் படி அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு விலை 179.04 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இறுதியாக வெளியிடப்பட்ட அறிக்கையின்படி அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி 178.10 ரூபாவாக ...
யாழ்ப்பாணத்தில், இணுவில் பகுதியில் தந்தையினால் மகனுக்கு நடந்த கொடூரம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. போதை தலைக் கேறிய தந்தையொருவர், தனது ஐந்து வயது மகனை பற்பல இடங்களில் கொடூரமாக கடித்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளான். மேலும் சிறுவன் கை, முதுகு , முகம் எனப் பல இடங்களிலும் கடி காயங்களுக்கு இலக்காகியுள்ளான். சிறுவனின் உடல்களில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதோடு, தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம்...
மஸ்கெலியா நகர 4ஆம் வீதியில் இன்று மதியம் 12மணியளவில் காருடன் முச்சக்கர வண்டி ஒன்று நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்நிலையில் குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர்  காயங்களுடன் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தோடு முச்சக்கர வண்டியும் காரும் பலத்த சேதமடைந்துள்ளதாக  தெரிவித்துள்ள  மஸ்கெலியா பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. .
வவுனியா தாலிக்குளம் பகுதியில் நேற்று (20) மதியம் 1.00 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாலிக்குளம் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற கருத்து முரண்பாடு வாள்வெட்டு தாக்குதலாக மாறியதில் வாரிக்குட்டியூர் பகுதியினை சேர்ந்த அருணாசலம் தனுசன் (வயது 20) , ராஜரட்ணம் (வயது 20) ஆகிய இரு இளைஞர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்...
இன்ஸ்டன்ட் மெசேஜ் சேவையான வாட்ஸ் ஆப் ஆனது உலகளாவிய ரீதியில் பிரபல்யமாக விளங்குவதுடன் பல மில்லியன் கணக்கான பயனர்களையும் கொண்டுள்ளது. அண்மையில் அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப் அபிளிக்கேஷில் புதிய ஸ்டிக்கர்களை பயன்படுத்தக்கூடிய மற்றுமொரு செயலியான வாட்ஸ் ஆப் ஸ்டிக்கர் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. எனினும் இச் செயலி சில தினங்களிலேயே ஆப்பிளின் ஆப்ஸ் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்வரும் காரணங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவது காரணமாக இதேபோன்ற பல்வேறு அப்பிளிக்கேஷன்கள்...