கொழும்பு, எஸ்எஸ்சி மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இலங்கை டெஸ்ட் அணியில் சுழல் பந்துவீச்சாளர் நிஷான் பீரிஸை தேர்வுக் குழு இணைத்திருப்பதாக இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது பந்துவீச்சு முறை குறித்து சோதிப்பதற்காக அகில தனஞ்சய பிரிஸ்பேர்ன் நோக்கி பயணித்துள்ளதால் அவர் அடுத்த டெஸ்ட் போட்டியில் இடம்பெறாத நிலையிலேயே அவரது இடத்திற்கு நீர்கொழும்பைச்...
பியூச்சர் மைண்ட் (Future Mind) அமைப்பின் ஏற்பாட்டில் “துளிர்” மர நடுகை செயற்றிட்டம் முன்னெடுப்பு
Thinappuyal News -
வருடா வருடம் பியூச்சர் மைண்ட் Future Mind அமைப்பினரால் துளிர் எனும் மர நடுகை செயற்றிட்டம் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் 2018 ஆண்டிற்கான மர நடுகை செயற்றிட்டம் இன்று 20 ஆம் திகதி செங்கலடி, கொம்மாதுறை மற்றும் கொண்டயண்கேணி ஆகிய இடங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்த பியூச்சர் மைண்ட் (Future Mind) அமைப்பின் இயக்குனர் ம.ரஞ்ஜன், இச் செயற்றிட்டமானது கடந்த வருடங்களை விட சற்று சிறப்பாக...
பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடுவானில் பசியால் கதறி அழுதுகொண்டிருந்த குழந்தைக்கு, தாயின் கண்முன்னே தாய்ப்பால் கொடுத்த விமான பணிப்பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
பிலிப்பைன்ஸ் நாட்டில் மனிலாவை சேர்ந்தவர் 20 வயதான பாத்ரிஷா ஆர்கோ.
இவர் பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். இளம் தாயான பாத்ரிஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியில் இருந்த போது, பிஞ்சுக்குழந்தை ஒன்று கதறி அழுவதை பார்த்துள்ளார்.
அப்போது விமானம் தரையிலிருந்து 10...
மாவீரர்களுக்காக நினைவு கூறப்படுகின்ற நாளில் அரசியல் மேடைப்பேச்சுற்கு இடமில்லை – நாகமணி கிருஸ்ணபிள்ளை
Thinappuyal News -
மாவீரர்களுக்காக நினைவு கூறப்படுகின்ற நாளில் அரசியல் மேடைப்பேச்சுற்கு இடமில்லை என்கின்றனர் அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லப் பணிக்குழுவின் தலைவர் நாகமணி கிருஸ்ணபிள்ளை.
(டினேஸ்)
எதிர்வரும் கார்த்திகை 27 ஆம் திகதி வட கிழக்கு பகுதிகளில் மாவீரர் துயிலுமில்லங்களில் மிக விமர்சையாக நடைபெற ஏற்பாடுகள் பரவலாக இடம்பெற்றுவருகின்றன.
அந்தவகையில் அம்பாறை மாவட்டத்தில் பெயர் போன கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலுமில்லங்களில் முன்னேற்பாடுகள் மற்றும் நிகழ்வுகள் தொடர்பாக அதன் பணிக்குழுவினரின் கலந்துரையாடல் இன்று 20 திருக்கோவில் 01...
உடலில் ஏற்படும் ஒருசில அறிகுறிகளை வைத்து, நம் உடலில் நீர்ச்சத்து குறைந்துள்ளது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
உடலில் நீர்ச்சத்து குறைவாக உள்ளதை காட்டும் அறிகுறிகள்
நீர்ச்சத்து குறைவினால், ரத்த ஓட்டம் தடைப்பட்டு, உடல் உறுப்புகளின் செயல்பாடு குறைந்து, செரிமானத்தில் பல சிக்கல்கள் ஏற்படும்.
நம் உடலில் நீர் வறட்சி உள்ளது அல்லது போதியளவு நீர்ச்சத்து இல்லை எனில், முகப்பரு அதிகரிக்க ஆரம்பிக்கும். இதற்கு போதியளவு நீர் குடிப்பது மிகவும் அவசியமாகும்.
...
இலங்கை முன்னொருபோதும் சந்திக்காத பாரிய பொருளாதார குழப்பத்தை எதிர்கொள்ளும் நிலையிலுள்ளது என மங்களசமரவீர கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கையொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 26 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பொறுப்பற்ற நடவடிக்கைகள் இலங்கை உடனடியாக செலுத்தவேண்டிய கடனை கூட செலுத்த முடியாத ஆபத்தை எதிர்கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2014 ஜனவரியில் ராஜபக்ச பெற்ற கடனிற்காக 2019 ஜனவரியில் நாங்கள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்தவேண்டும்...
நடிகை ஸ்ரத்தா கபூர் பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். ஹிந்தி, தெலுங்கு என அடுத்தடுத்து படங்களில் இவர் கமிட்டாகி வருகிறார்.
அவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு டெங்கு காய்ச்சல் வந்தது. இதனால் கடும் அவதிக்குள்ளானவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தீவிர சிகிச்சைக்கு பின் அவர் வீட்டில் இரண்டு வாரங்கள் கட்டாய ஓய்வில் இருந்தார். தற்போது பூரணமாக குணமடைந்து படப்பிடிப்பிற்கு மீண்டும் திரும்பியுள்ளாராம்.
மேல் மாகாண சபையின் வரவு செலவுத் திட்டம் மேல் மாகாண சபையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் சில உறுப்பினர்கள் சபையில் இருந்த கணனியில் ஆபாசக் காட்சிகளை பார்வையிட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாகாணத்தின் பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார்.
நவீன வசதிகளுடன் கூடிய இந்த கட்டடத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் இணையத்தள வசதிகளுடன் நவீன கணிணிகள் வழங்கப்பட்டுள்ளன.
தலா 6 இலட்சத்து 40 ஆயிரம் பெறுமதியான 150 கதிரைகளை இந்த கட்டடத்திற்கே கொள்வனவு செய்ய...
அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி போட்டிக்கு முன்னதாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று 20 ஓவர் போட்டிகள், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இதில் 20 ஓவர் போட்டியின் முதல் ஆட்டம் பிரிஸ்பன் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி செய்தியாளர்களை...
வங்காள விரிகுடாவின் தென் பகுதியின் மத்தியில் காணப்படும் தாழமுக்க பிரதேசமானது அடுத்து வரும் 24 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து தாழமுக்கமாக மாற்றமடைவதுடன், மேற்கு திசை நோக்கி நகர்வடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் காரணமாக நாடு முழுவதும் அதிகரித்த மழை பெய்வதோடு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டவியல் திணைக்கள வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹின் இது தொடர்பில் தெரிவிக்கையில்,
வட...