கனடாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்காக வழங்கவுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார்.
கஜா புயல் பாதிப்பால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்
இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் நிவாரண உதவியை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில், கனடாவின் டொரண்டோவில்...
தேசிய மீனவர் தினமான இன்று வடகிழக்கு மற்றும் இலங்கை முழுவதும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்ட பேரணி தற்போது பொலன்னறுவை றொயல் ஆரம்ப பாடசாலை அருகாமையிலிருந்து ஆரம்பமாகியுள்ளது.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் குறித்த போராட்டத்தில் இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இது தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் கேமன் குமார தலைமையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.
4 கிராம் ஹெரோயினுடன் இரு பெண்களை அம்பலாங்கொடை பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆறு வயது சிறுமியொருவரின் காற்சட்டையில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே 4 கிராம் நிறையடங்கிய 8 ஹெரோயின் பக்கெட்டுக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்
இந்த சம்பவத்தின்போது இரு பெண்களை கைதுசெய்த பொலிஸார், இது தொடர்பான விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதித் ரயிலுடன், கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியது.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அண்மையில் கந்தர்மடம் ரயில் கடவையில் இன்று மதியம் குறித்த விபத்து நடந்துள்ளது.
இந்நிலையில் குறித்த விபத்தில் காரில் பயணித்த நபர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை, கிரிந்த கடற்பகுதியில் கப்பலுடன் மீனவர்கள் பயணித்த படகொன்று மோதியதி விபத்திற்குள்ளாகியுள்ளது.இவ்வாறு காணாமல்போன மீனவர்களை மீட்க கடற்படை விரைந்துள்ளனர்.
இந் நிலையில் தற்போது காணாமல்போன 5 மீனவர்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டு மற்றுமொரு படகில் ஏற்றப்பட்டு கரைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நிவித்திகல தொலஸ்வல பாரதி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவன் மகேஸ்வரன் சுஜீவன் (வயது 11) நேற்று(19) தொலஸ்வல பிரதேசத்தில் கற்பாறை ஓடை ஒன்றைக் கடந்து செல்லும்போது அதில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
மேற்படி சம்பவம் குறித்துத் தெரியவருகையில், நேற்று பாடசாலை விட்டு தமது நண்பர்களுடன் வீட்டுக்குச் சென்ற போது தொலஸ்வல கற்பாறை ஓடை ஒன்றில் தவறி விழுந்து நீரில் அடித்துச் சென்றுள்ளார். இதைக் கண்டு...
நாட்டில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது ஹைஸ், கேரள கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
19 ஆம் திகதி அதிகாலை 12 மணி முதல் இன்று நள்ளிரவு 12 மணி வரையான 24 மணிநேர காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவு, மினுவங்கொட பொலிஸார் மற்றும் மாத்தறை...
யாழ். குடாநாட்டில் கடந்த ஒன்றரை மாத காலப்பகுதிக்குள் 271 பேர் டெங்கு நோய்தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர் என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரவுவதற்க்குரிய சாதகமான நிலை ஏற்ப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாத காலப்பகுயில் 271 பேர் டெங்கு நோய்த் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 60 போர் வரையில் டெங்கு...
முல்லைத்தீவு, துணுக்காய் கோட்டைகட்டியகுளம் வான்பகுதிக்கு மேம்பாலம் ஒன்றினை அமைத்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேசத்திற்குட்பட்ட உயிலங்குளம், தென்னியன்குளம், கோட்டைகட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம், போன்ற விவசாயக் கிராமங்களுக்கான பிரதான வீதியாகக் காணப்படுகின்ற துணுக்காயிலிருந்து அக்கராயன் அம்பலப்பெருமாள் சந்திக்கு வரைக்குமான பிரதான வீதியாகக் காணப்படுகின்றது.
இவ் வீதியில் கோட்கட்டியகுளத்தின் வான்பகுதியின் 100 மீற்றர் வரையான இவ்வீதியில் காணப்படுகின்றது.
கோட்டை கட்டியகுளம் நீர்நிரம்பி வான்பாய ஆரம்பிக்கும் போது, வீதியின் ஊடாக போக்குவரத்துக்கள் பாதிக்கப்படுவதுடன்,...
நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து ஹட்டன் அரச பஸ் நிலையத்திற்குச் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பலர் புதிதாக கடமைக்காக முகாமையாளரின் அதிகாரத்தின் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் ஹட்டன் பஸ் சபையால் மேற்கொள்ளப்பட்ட பல சேவைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அங்குப் பணியாற்றும் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். தினமும் 90 பஸ்கள் சேவையில் இருந்தமையால் கடந்த மாதம் 20 இலட்சம் ரூபாய் ஆதாயம் கிடைத்தது.
ஆனால் தற்போது 10 பஸ்களில் சாரதிகள்...