*சபாநாயகர் முறையாக நடந்திருந்தால் குழப்பங்கள் ஏற்பட்டிருக்காது *கட்சித் தலைவர்களின் இணக்கத்திற்கமைய தெரிவுக்குழுவை நியமிக்க தீர்மானம் *பரபரப்பான எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமைதியாகக் கூடிக்கலைந்த சபை நவம்பர் 23ஆம் திகதி வரை ஒத்திவைப்பு பரபரப்புக்கு மத்தியில் பாராளுமன்றம் நேற்று கூடியபோதும் ஐந்து நிமிடத்தில் சபை நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன. சபை கூடி ஐந்து நிமிடத்தில் எதிர்வரும் 23ஆம் திகதிக்கு பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றம் முடியும்போது 19ஆம் திகதி திங்கட்கிழமை 1 மணிக்கு சபை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கமைய...
அலரிமாளிகையிலிருந்து ரணில் வெளியேறவேண்டும் ரணில் விக்ரமசிங்கவோ அல்லது மஹிந்த ராஜபக்‌ஷவோ தற்பொழுது பிரதமர்கள் இல்லையென்பதால் அவர்களுக்கான சிறப்புரிமைகள் யாவும் மீளப்பெறப்பட வேண்டும். ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையிலிருந்து வெளியேற வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதால் தற்பொழுது நாட்டில் அமைச்சரவையோ அல்லது பிரதமர் பதவியோ ஏற்புடையது அல்ல. முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையிலிருந்து...
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஜெக் லீச், மொயீன் அலி, ஆடில் ரஷித் ஆகியோர் 18 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்து அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றி இலங்கை மண்ணில் சாதித்து காட்டியது. இந்நிலையில்...
>வாழ்வா சாவா என்ற போட்டியில், முழுத்திறனுடன் ஆடிய சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி, முன்கள வீரர்களின் சிறப்பான நகர்வுகள் மூலம் கோல் மழை பொழிந்து காலிறுதிக்குள் நுழைந்தது. இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் அனுமதியுடன், பப்பரே நிறுவனத்தால் இலங்கை பாடசாலைகளின் 19 வயதுப் பிரிவு கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் பப்பரே சம்பியன்சிப் சுற்றுப்போட்டியொன்று நடத்தப்பட்டு வருகின்றது. தேசிய ரீதியில் 20 அணிகள் பங்குபற்றும் இந்தச் சுற்றுப்போட்டியில் அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் உள்ளடங்கியுள்ள...
உலகத்தை குழப்பத்திலிருந்து காப்பாற்ற ஐரோப்பாவை ஒன்றிணைப்பது நமது கடமை என்று பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். சமீப காலமாகவே ஐரோப்பா தன்னை அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளிலிருந்து தனித்து நிற்க வைக்கும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியுள்ளதுபோல் தோன்றுகிறது. இது தொடர்பாக பல சம்பவங்கள் தொடர்ச்சியாக உலக அரங்கில் அரங்கேறி வருகின்றன. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள ஒரு தனி ஐரோப்பிய ராணுவம் வேண்டும் என இமானுவல்...
பிரித்தானியாவில் அரசு உதவித்தொகைக்காக காத்திருந்து ஏமாற்றமடைந்த பிரித்தானிய தாயார் ஒருவர் தமது பிள்ளைகளின் பசியை போக்க பாலியல் தொழிலில் ஈடுபட நிர்பந்தித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வட மேற்கு இங்கிலாந்தில் உள்ள மெர்ஸெசைட் கவுண்டியை சேர்ந்தவர் ஜூலி, இவரே Universal Credit எனப்படும் அரசு உதவித்தொகைக்காக 8 வாரங்கள் காத்திருந்து கடைசியில் ஏமாற்றமடைந்துள்ளார். இதனையடுத்து தமது ஒரே ஒரு பிள்ளைக்காக அவர் பாலியல் தொழிலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். செய்தி ஊடகம் ஒன்றிற்கு...
இணையதளம் வாயிலாக இரு இதயங்கள் சந்தித்துக்கொள்வது தற்போது அதிகரித்துவிட்டது. தங்களுடைய வாழ்க்கை துணையை இணையதளம் வாயிலாக சந்தித்து திருமண பந்தத்தில் இணையும் இந்த காலத்தில், அப்படியொரு இணையதளமே சில சமயங்களில் பல ஏமாற்றங்களையும் அளித்துவிடுகிறது. 66 வயதான முதியவர் தனது பணி ஓய்வு பெற்றபின் கிடைத்த பணத்தில் சந்தோஷமாய் வாழ்வதை விட்டுவிட்டு காதல் என்று நம்பி தன்னிடம் உள்ள லட்சக்கணக்கான பணத்தினை இழந்துள்ளார். Roy Twiggs என்ற 66 வயது நபர் கடந்த...
ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்சை விழ்த்தி ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் சுவேரேவ் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். டென்னிஸ் தரவரிசையில் முதல் எட்டு இடங்களை பிடித்துள்ள வீரர்கள் மாத்திரம் பங்கேற்றுள்ள ஏ.டி.பி - 2018 இறுதிச் சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டி கடந்த 11 ஆம் திகதி லண்டனில் ஆரம்பமாகி இடம்பெற்று வந்தது. இந் நிலையில் இதன் இறுதிப் போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டனர் சுவரேவ் 6-4, 6-3 என்ற...
திருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் ஒன்றை சுற்றிவளைத்த போது அதில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உப்புவெளி பொலிஸ் பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக உதவி பொலிஸ் பரிசோதகர் தலைமையில் சென்ற குழுவினர் அலஸ் தோட்டம் பகுதியில் உள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையத்தை சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது, மசாஜ் நிலையம் நடத்துவதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டிருந்த போதிலும் அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை...