மட்டக்களப்பு, ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நீண்ட நாட்களாக தேடப்பட்டுவந்த இருவரை ஏறாவூர்ப் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஏறாவூர்ப் பொலிஸாருக்கு நேற்று மாலை கிடைத்த இரகசிய தகவலொன்றினையடுத்து ஐயன்கேணி பகுதியில் வைத்து இச் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஐயன்கேணிப் பகுதியில் சமீப காலமாக வாள் வெட்டு மற்றும் வழிப்பறி போன்ற செயற்படுகள் இடம்பெறுவதாக ஏறாவூர்ப் பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன....
தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த இன்னொரு ஹீரோ சர்வானந்த். தெலுங்கு சினிமாவில் பிரபலமான இவர் நடிகர் ராம்சரணின் நெருங்கிய உறவினர். தற்போது சபரிமலை சீசன் தொடங்கி விட்டதால் அவரும் அவரது நெருங்கிய வட்டாரங்களும் மாலை அணிந்து விரதம் இருக்கின்றனராம். ஒவ்வொரு வருடமும் சபரிமலை யாத்திரை செல்வார்களாம். இதற்காக பிரபலம் என நினைத்துக்கொள்ளாமல் அவர் சாதாரண பக்தனை போல படி பூஜைகள் செய்து வந்தவர்களுக்கு அன்னதானம் செய்து முறைப்படி விரதம் இருந்துள்ளாராம்.
அபுதாபியில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில், பாகிஸ்தான் அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் கடந்த 16ஆம் திகதி அபுதாபியில் தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 153 ஓட்டங்களுக்கு சுருண்டது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 227 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் 74 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. அதனைத்...
நடிகை அமலா பால் தமிழ், மலையாளம் என படங்களில் பிசியாக இருக்கிறார். அவரின் நடிப்பில் அண்மையில் ராட்சஸன் படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில் அவர் ஆடை என்னும் படம் மிரட்டலான வேடத்தில் நடித்து வருகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக்கும் அண்மையில் வெளியாகி சர்ச்சைகளை சந்தித்தது. இந்நிலையில் அவர் அடுத்ததாக பாலிவுட் படத்தில் அறிமுகமாகப்போகிறாராம். இதில் அவர் பஞ்சாபி பெண்ணாக நடிக்கிறாராம். இதன் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1ன் மூலம் போட்டியாளராக பங்கேற்றவர் நடிகை நமீதா. இதன் மூலம் அவரும் சில காலங்கள் ட்ரெண்டில் இருந்தார். அதை விட்டு வெளியே வந்த பின் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் வீர் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கடந்த சில வருடங்களாகவே நமீதாவுக்கு பட வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் வாய்ப்பு வந்துள்ளது. இது அவரின் ரீஎண்ட்ரி...
ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன மகிந்த ராஜபக்ச தரப்பிற்கு பெரும்பான்மையை பெற்றுக்கொடுப்பதற்கான பொறுப்பினை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைத்துள்ளார். மகிந்த ராஜபக்ச தரப்பிற்கு பெரும்பான்மையை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் கடந்த சில வாரங்களாக பசில் ராஜபக்ச ஈடுபட்டுவந்த நிலையில் தற்போது அந்த பொறுப்பினை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் திலங்கா சுமதிபால எஸ்பி திசநாயக்க லக்ஸ்மன் வசந்த பெரேரா ஆகியோரிடம் சிறிசேன வழங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியின் உத்தரவை தொடர்ந்து திலங்க சுமதிபால ஐக்கியதேசிய...
அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மூளை அறுவை சிகிச்சையின் போது பாடல் பாடிக்கொண்டிருந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 19 வயதான கிரா ஐகானெட்டியின் இசைப்பயணமானது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாகா ஏற்பட்ட கை-கால் வலிப்பு காரணமாக தடைபட்டது. இதனால் பெரிதும் கவலையில் இருந்த கிராவிற்கு சமீபத்தில் மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மூளை அறுவை சிகிச்சையின் போது உறங்கக்கூடாது என்பதால், கிரா தனக்கு பிடித்தமான ‘Island in the...
அட்டன் நகர பஸ் தரிப்பிடத்தில் காணப்படும் பொது மலசலகூடத்தில் அதிகளவு கட்டணம் அறிவிடுவதாக பயணிகள், சாரதிகள் மற்றும் மாணவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அட்டன் டிக்கோயா நகர சபையின் கீழ் இயங்கிவரும் இந்த மலசலகூடத்தில் நேரத்துக்கு நேரம் கட்டணம் வேறுபடுவதாக தெரிவிக்கின்றனர். இதனால் பலர் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பஸ்களின் பின்புறம் சென்று சிறுநீர் கழிப்பதாகவும் அதனால் பஸ் தரிப்பிடத்தில் துர்நாற்றம் வீசுவதாக இதனால் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் முதியோர் பெரும் அசௌகரியத்தை...
முப்படைகளின் பிரதானியையும் வெள்ளை வான் மூலம் மரணத்தை ஏற்படுத்துபவர்களையும் பாதுகாப்பதற்காக நீங்கள் சத்தியப்பிரமாணம் செய்யவில்லை  என  படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க ஜனாதிபதி சிறிசேனவிற்கு கடிதமொன்றை  எழுதியுள்ளார். லசந்த விக்கிரமதுங்க படுகொலை உட்பட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்களை விசாரணை செய்து வந்த சிஐடி அதிகாரி நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து  ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை...