வியட்நாமில் ஏற்பட்டுள்ள கடும் மழை காரணமாக  ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 13 பேர் பலியாகியுள்ளதோடு பலர் மாயமாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியட்நாமில் கடந்த சில வாரமாகக் கடுமையான மழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாகப் பல பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் ரிசார்ட் நகரமான நா தாராங் நகரில் உள்ள கிராமங்களில் மண்சரிவில் சிக்கி 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் மாயமாகி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆபத்தான...
விஜய் தமிழ் சினிமாவில் என்றுமே தவிர்க்க முடியாத ஒரு பெயர். எப்போதும் இவரை பற்றி பரபரப்பான செய்திகள் வந்துக்கொண்டே தான் இருக்கும். ஆனால், இந்த செய்திகள் கிசுகிசு என்றில்லாமல், அவர் படங்களை பற்றிய அப்டேட் மற்றும் அரசியல் களம் பற்றியதாக தான் இருக்கும். இந்நிலையில் விஜய் சர்கார் படத்தில் சிகரெட் பிடிப்பது போல் காட்சிகள் இருக்க, இதற்கு கேரளா அரசு விஜய் மற்றும் படக்குழு மீது வழக்கு தொடர்ந்துள்ளது. இதுக்குறித்து சீமானிடம் கேட்டபோது...
மன்னார் மாவட்டத்தில் கனடியத் தமிழர் தேசிய அவையின் மண் வாசனை நிதியினூடாக ஒரு தொகுதி உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் அந்தோனி சகாயத்தின் ஏற்பாட்டில் குறித்த உலர் உணவு பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 50 வறிய குடும்பங்களுக்கு குறித்த உணவுப் பொதிகள் மற்றும் தென்னங்கன்றுகள் வழக்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ...
திருகோணமலை - கிண்ணியா, பைசல் நகர் நபவி பள்ளிவாசல் பின் வீதிக்கான குழாய் நீர் அமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றுள்ளது. குறித்த பகுதியில் பிரதான குடிநீர் குழாய் இணைப்பை பெற்றுக் கொடுக்கும் முகமாக இன்று குழாய் நீர் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மக்களின் நீண்ட நாள் குடிநீர் பிரச்சினை அப்பகுதியில் நிலவி வந்ததையடுத்து இவ்வேலைத் திட்டத்தை நகர சபை உறுப்பினர் எம்.எம்.நிவாஸ் ஆரம்பித்து வைத்துள்ளார். இக் குழாய் குடிநீர் திட்டத்தால் 100க்கும் மேற்பட்ட...
வவுனியா பாடசாலைகளில் மாணவர்களின் சிகை அலங்காரம் தொடர்பில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனம் செலுத்துவதில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் பிரபல பாடசாலைகளில் ஆண் மாணவர்களின் சிகை அலங்காரம் மற்றும் தாடி வளர்த்து வருதல் தொடர்பாக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனம் செலுத்துவதில்லை. இதன் காரணமாக மாணவர்கள் பொருத்தமற்ற சிகை அலங்காரங்களுடன் பாடசாலைகளுக்கு வருவதனை அவதானிக்க முடிகின்றது. வட மாகாண கல்வி அமைச்சு மாணவர்களின் சிகை...
மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் யாமீனை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையர் விரைவில் விடுவிக்கப்படுவார் என இலங்கை அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அமைச்சர் பைசர் முஸ்தபா இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார். மாலைத்தீவின் புதிய ஜனாதிபதி இப்ஹாராஹிம் மொஹமட் சொலிஹ்ஹின் பதவிப்பிரமாண நிகழ்வில் பங்கேற்க சென்றிருந்த அமைச்சர், குற்றவாளியாக கருதப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ள லஹிரு மதுஷங்கவை சந்தித்துள்ளார். இது குறித்த கருத்து தெரிவிக்கும் போதே மதுஷங்க விரைவில் விடுதலையாவார் என அமைச்சர் பைசர்...
திருகோணமலை பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட சித்த மருத்துவ பிரிவின் ஏற்பாட்டில் நீரிழிவு நோய் தொடர்பான கண்காட்சி, விழிப்புணர்வு செயலமர்வு மற்றும் நீரிழிவு தொடர்பிலான பரிசோதனைகள் என்பன நடைபெற்றுள்ளன. இந்த செயற்திட்டங்கள் இன்று கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில், கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக முதல்வர் வீ.கனகசிங்கம் தலைமையில் நடைபெற்றுள்ளன. இதில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் அருட்தந்தை ஜீ.எப்.ராஜேந்திரம் கலந்து கொண்டிருந்ததுடன் சித்த மருத்துவ பீடத்தின் பகுதித்...
எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி விரிவான கூட்டணியாக போட்டியிட தீர்மானித்துள்ளது. இதன்படி, வைரம் என்ற சின்னத்துடன் ஐக்கிய தேசிய முன்னணி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்துக்காக வைரம் என்ற சின்னத்தை ஏற்றுக்கொள்வதில் பங்காளி கட்சிகளின் மத்தியில் இருந்து முரண்பட்ட கருத்துக்கள் வெளியாகின. எனினும் இறுதியில் வைரம் என்ற சின்னம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள்...
எலிக்காய்ச்சல் காரணமாக குருநாகல் மாவட்டத்தில் மாத்திரம் தற்போதுவரை 19 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக வடமேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் எம். சரீட் தெரிவித்துள்ளார். இக்காய்ச்சலானது, பொல்பிட்டிகம, ரிதீகம மற்றும் மஹவ முதலான பகுதிகளில் 187 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் . மேலும், இலேசான காய்ச்சல் தொடர்ந்தும் நீடித்தால் கண்டிப்பாக வைத்தியரை நாடி, உரியவகையில் மருந்துகளை உட்கொள்வதன் மூலம் எலிக்காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் இருவர் பொகவந்தலாவை தேரேசியா தோட்டத்தில் வைத்து பொகவந்தலாவை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிலாணி தோட்டம் மற்றும் தேரேசியா தோட்டத்தைச் சேர்ந்த 33 மற்றும் 32 வயதுடைய இரண்டு ஆண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலின் அடிப்படையில் குறித்த நபர்கள் இருவரும் மாணிக்கக் கல் அகழ்விற்கு பயன்படுத்திய பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரையும் இன்றைய தினம்...