வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் கடந்த சில தினங்களாக வீதியிலுள்ள கால்நடைகள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அவற்றை பிரதேச சபையில் அடைத்து, கட்டி வைக்கப்படாமல் வளவில் கைவிடப்பட்டுள்ளது.
இதனால் அலுவலகத்திற்குள் மாடுகள் செல்வதன் காரணமாக அங்கு செல்லும் மக்களுக்கும் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இடையூறுகள் ஏற்படுகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய காலங்களில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தவிசாளரினால் வீதிகளில் கைவிடப்பட்ட கால்நடைகள் பிடிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றன....
முந்தல் பொலிஸார் நேற்று இருவேறு இடங்களில் மேற்கொண்ட நடவடிக்கையின்போது அனுமதிப்பத்திரமின்றி வேப்ப மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற லொறிஒன்றுடன் மணல் ஏற்றப்பட்ட டிப்பர் லொறியையும் கைப்பற்றியதுடன் இருவரைக் கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்தனர்.
முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாராவில்லு பிரதேசத்தில் கெண்டர் லொறியில் அனுமதிப்பத்திரம் இன்றி ஏற்றிச்செல்லப்பட்ட 25 வேப்ப மரக்குற்றிகளுடன்ஒருவரையும், முந்தல் பரலங்கட்டு பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி 3 கியுப் மணல்ஏற்றிச்சென்ற டிப்பர்லொறியுடன்ஒருவரையுமே இவ்வாறுகைதுசெய்துள்ளதாகபொலிஸார்தெரிவித்தனர்.
முந்தல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சன்ஏக்கநாயக்க தலைமையிலான பொலிஸ்...
வாட்ஸ்அப் செயலியில் இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் செயலியில் வழங்கப்பட்டு இருப்பதை போன்ற அம்சம் சோதனை செய்யப்படுகிறது.
வாட்ஸ்ப் செயலியில் சமீபத்தில் ஸ்டிக்கர் அம்சம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து செயலியில் புதிய அம்சங்களை சோதனை செய்யப்படுகிறது. அந்த வகையில் பயனர்கள் கான்டாக்ட் ஷேர் செய்ய புது வசதி சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. புதிய வசதியின் மூலம் விரைவில் பயனர்கள் தங்களது கான்டாக்ட் விவரங்களை கியூ.ஆர். கோடு (QR Code) மூலம் பகிர்ந்து...
iPhone X கைப்பேசியில் முற்றாக அழிக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் ஹேக் செய்து மீட்டெடுக்கப்பட்டமை ஐபோன் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஐபோன்கள் பொதுவாக பாதுகாப்பு கூடியவை எனும் கருத்து கைப்பேசி பாவனையாளர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.
ஆனால் இக் கருத்தினை இருவர் சேர்ந்து பொய்ப்பித்து இருக்கிறார்கள்.
டோக்கியோவில் இடம்பெற்ற Mobile Pwn2Own எனும் போட்டியின்போதே Richard Zhu மற்றும் Amat Cama ஆகியோர் இந்த அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளனர்.
https://twitter.com/thezdi/status/1062523571120074752
ஐபோனில் காணப்படும் சபாரி இணைய உலாவியின் ஊடாகவே கைப்பேசியில்...
சமூக சேவை நோக்குடன் பேஸ்புக் நிறுவனத்தினால் நிதி திரட்டும் சேவை கடந்த 2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இச் சேவையின் ஊடாக தற்போது வரை சுமார் 1 பில்லியன் டொலர் நிதி சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலுமிருந்து 19 வரையான நாடுகளில் வசிக்கம் 20 மில்லியன் வரையானவர்கள் இச் சேவைக்கு நிதி உதவி செய்துள்ளனர்.
இச் சேவையானது நண்பர்களுக்கு நிதி உதவி தேவைப்படும்போதும் வேறெந்த ஒரு இணையத் தளத்திற்கு விஜயம் செய்யாமல் பேஸ்புக்கில் இருந்தவாறே...
பிரபல்யமான சமூகவலைத்தளங்கள் வரிசையில் Tumblr உம் காணப்படுகின்றது.
இச் சேவைக்கான அன்ரோயிட் மற்றும் iOS அப்பிளிக்கேஷன்களும் வெளியிடப்பட்ள்ளன.
எனினும் தற்போது iOS சாதனங்களுக்காக அப்ஸ் ஸ்டோரில் தரப்பட்டுள்ள அப்பிளிக்கேஷன் தற்காலிகமாக நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அப்பிளிக்கேஷனில் காணப்படும் குறைபாடு ஒன்றினை நிவர்த்தி செய்யும் முகமாகவே இவ்வாறு நீக்கப்படுவதாக Tumblr நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த வார ஆரம்பத்தில் பயனர்கள் குறித்த செயலியில் குறைபாடு இருப்பதனை சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும் Tumblr நிறுவனம் குறித்த அப்பிளிக்கேஷனை நீக்கியதா அல்லது...
மன அழுத்தமும் முதுகுவலியை ஏற்படுத்தும். மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது முதுகு தசைகள் இறுக்கமடைய ஆரம்பித்துவிடும்.
முதுகில் மேல்பகுதி, நடுப்பகுதி, கீழ்பகுதி என மூன்று வகையான கட்டமைப்புகளில் வலி ஏற்படுகிறது.
புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் முதுகுவலி பாதிப்புக்கு அதிகம் ஆளாவார்கள். தொடர்ந்து புகை பிடிப்பதன் மூலம் முதுகெலும்பில் சிதைவு ஏற்படக்கூடும். சிகரெட்டில் இருக்கும் நிகோடின் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி முதுகெலும்பை பலவீனப்படுத்தும். முதுமை பருவத்தை எட்டும்போது அதன் பாதிப்பு அதிகமாகும். கடும்...
இருப்பதைக் கொண்டு இல்லத்தை அழகுபடுத்தும் இல்லத்தரசிகள் நிஜ தேவதைகளாவர். கைவண்ணத்தில் கலைப்பொருட்களை உருவாக்கி அலங்கரிக்கும் பெண்களும் நிறைய இருக்கிறார்கள்.
* வீட்டின் வரவேற்பறையைக் கண்டு உங்கள் உறவினர், தோழிகள் வியக்கிறார்களா? அல்லது முகம் சுழிக்கிறார்களா?
* மின்சாரம் துண்டிக்கப்பட்டதும் மெழுகுவர்த்தி அல்லது டார்ச் விளக்கைத்தேட உங்களுக்கு எத்தனை நிமிடம் பிடிக்கிறது?
* தேவையான பொருளை உடனே தேடி எடுக்க முடியவில்லையா? வைத்த இடம் தெரியவில்லையா?
* வீட்டில் நிம்மதியும், செல்வமும் நிரம்பவில்லை என்று வருத்தம்...
மன்னார் நகர் நிருபர்
பாடசாலைக்கு உரிய காரணம் இன்றி சமூகம் அழிக்காத மாணவர்களை வீடு தேடி சென்று அழைத்து வரும் அதிபரின் செயற்பாடு தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் பின்தங்கிய பல கிராமங்கள் காணப்படுகின்றது. மக்கள் தொகை அதிகமாக காணப்பட்டாலும் அபிவிருத்தியிலும், கல்வித் தரத்திலும் குறித்த கிராமங்கள் இன்னமும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.
வறுமை காரணமாக அனேக குடும்பங்களை சேர்ந்த சிறுவர்கள் பாடசாலை செல்வதில்லை. அனேகமானவர்கள் பாடசாலை கல்வியை இடை...
காலி, பத்துவ பகுதியில் தாய், தந்தையை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் மகன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 31 வயதுடையவர் எனவும் இவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
61 வயதுடைய தந்தையும் 56 வயதுடைய தாயுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.