கொட்டகலையில் வீட்டு வளவுக்குள் நிறுத்தி வைத்திருந்த முச்சக்கரவண்டியை இனந்தெரியாத நபர்கள் தீயிட்டு கொளுத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக முச்சக்கரவண்டி உரிமையாளர் தெரிவிக்கின்றார். இந்தச் சம்பவம் திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை யதன்சைட் தோட்ட பகுதியில் இன்று அதிகாலை நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொட்டகலை யதன்சைட் பகுதியில் வசிக்கும் தர்மராஜ் என்பவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரின் முச்சக்கரவண்டியே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது. எனினும் இன்று காலையில் பார்த்த போது, முச்சக்கரவண்டி எரிந்த நிலையில்...
பியகம – மல்வானை பிரதேசத்தில் வீதியோரக் குப்பை மேடொன்றில் இருந்து ஆறு மாதங்கள் மதிக்கத்தக்கதான குழந்தை ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு பொலிஸாருக்குக்  கிடைத்த தகவலுக்கு அமையவே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. குழந்தையின் பெற்றோர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மெற்கொண்டு வருகின்றனர்.
டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்திருந்த பெண்ணொருவர் உட்பட இரண்டு நபர்கள் 2.7 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் கடத்த முயற்சித்த சந்தேகத்தின் பேரில் சுங்க போதைத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தின் போது மதுரங்குளியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண்ணொருவரும் நாத்தாண்டியைச் சேர்ந்த 32 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். மதுரங்குளியவைச் சேர்ந்த பெண் தனது பயணப்பொதியில் 9...
-மன்னார் நகர் நிருபர்-   மன்னார் நறுவிலிக்குளம் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த மாதம் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தொல்பொருள் அகழ்வு ஆராட்சி பணிகள் கடும் மழைக்கு மத்தியில் இடம் பெற்று வருகின்றது. குறித்த மைதானத்தில் தொல் பொருள் அகழ்வு ஆராட்சிக்கு என  பத்து இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் இன்றைய தினம் (19) நான்காவது இடத்தில் அகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது. குறித்த அகழ்வு பணிகளின் போது இரண்டு அடி  ஆழத்தின் கீழ்...
தமிழில் வெளியாகும் புதிய படங்கள் இணையதளங்களிலும் உடனேயே வந்து விடுகின்றன. சமீபத்தில் திரைக்கு வந்த ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விஷால், கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் அனைத்து படங்களும் இணையதளத்தில் வெளியானது. இதனால் வசூல் பாதிக்கப்பட்டன. இதை தடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் முன் எச்சரிக்கை எடுத்தது. தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் ஏற்பாடு செய்தது. அதையும் மீறி இப்போது ஜோதிகா நடித்து கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த காற்றின் மொழி...
எதிர்வரும் மார்ச் மாதம் நடக்கவிருக்கிற கூட்டத்தொடரில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு  பரிந்துரை செய்யக்கோரி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றது. அந்த வகையில் Barking தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் Dame Margaret Hodge MP அவர்களுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்களுக்கும் இடையில் நவம்பர் 02ம் திகதி சந்திப்பொன்று நடைபெற்றது. நாடு கடந்த தமிழீழ அரசின் மனித உரிமைகள் அமைச்சர் பத்மநாபன் மணிவண்ணன்...
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார் நயன்தாரா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும் நடிக்கிறார். இப்போது 7 படங்கள் அவர் கைவசம் உள்ளன. அஜித்குமார் ஜோடியாக நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படம் பொங்கலுக்கு வருகிறது. தமிழ், தெலுங்கு இந்தியில் தயாராகும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். கர்ணூலை சேர்ந்த உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. சிப்பாய்...
காதல் சுகம் தரும் என்றும், வலி தரும் என்றுப் பட்டிமன்றம் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, காதல் ஒரு அஞ்சறைப் பெட்டி என தெரிவதில்லை. அது அனைத்தும் கலந்த ஒரு கலவை என அவர்கள் அறிவதில்லை. ஒருவேளை அப்படி ஒரு உறவு உங்களுக்கு கிடைக்கிறது என்றால் அது காதலாக இருக்காது. காதலில் பிரிவுகள் சகஜம் தான், ஆனால், அந்த பிரிவிற்கு பின் உங்கள் காதலில் ஏற்படும் மாற்றங்கள் வேறு விதமாக இருக்கும். ஒருவேளை அப்படி...
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் பிரபலமான வீடியோ கேம் ஒன்றை தொடர்ந்து விளையாடி வருவது தெரியவந்துள்ளது. இந்திய அணி அவுஸ்திரேலியாவில் நீண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்க சென்றுள்ளது. இந்த பயணத்தின் இடையே விமான நிலையத்தில் காத்திருந்த போது இந்திய அணி வீரர்கள் பலர் தங்கள் மொபைல் போனில் விளையாடிக் கொண்டு இருந்தனர். பிசிசிஐ இதை படம் பிடித்து டுவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளது. அதில் மகிழ்ச்சியான முகத்துடன் இந்திய...
நவீன் இயக்கத்தில் உருவாகவுள்ள அக்னிச் சிறகுகள் படம், நடிகர் விஜய் ஆண்டனிக்கு வித்தியாசமான டைட்டிலாக அமையவுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடையும் வரை வேறு படங்களில் நடிக்க வேண்டாமெனவும் விஜய் ஆண்டனியின் நடை, பேச்சு ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாகவும் நவீன் தெரிவித்துள்ளதாக படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். அக்னிச் சிறகுகள் படத்தில் புதிய விஜய் ஆண்டனினை தான் ரசிகர்கள் காண்பார்களென நவீன் கூறியுள்ளார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், அருண் விஜய், ஷாலினி பாண்டே மற்றும்...