திருமணத்திற்க்கு பிறகு பெரிய இடைவெளி விட்டு மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்து சினிமாவில் கலக்கிவருகிறார் ஜோதிகா. அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது அவர் நடித்துள்ள காற்றின் மொழி படமும் வெளியாகி சூப்பர் ரெஸ்பான்ஸ் பெற்று வருகிறது. இந்த படத்திற்காக ஜோதிகா 1.25 கோடி சம்பளம் வாங்கினாராம். தற்போது அடுத்து அவர் அறிமுக இயக்குனர் S.ராஜ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ட்ரீம் வாரியர்...
முல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் 5 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை மற்றும் மகன் ஆகியோரை முள்ளியவளை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.இச் சம்பவம் பற்றி தெரியவருகையில், முள்ளியவளை பூதன் வயல் பகுதியில் வசித்துவரும் பெண் ஒருவர் தனது 5 வயதுடைய சிறுமியை அயல் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அயல் வீட்டில் இருந்த 13 வயதுடைய சிறுவனும் 74 வயதுடைய சிறுவனின் தந்தையும் குறித்த சிறுமி மீது...
வவுனியா ஈச்சங்குளம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் உடல் நலம் பற்றிய விழிப்புணர்வு எச்சரிக்கை இன்றியும், உற்பத்தித் திகதி குறிப்பிடாமலும் சுருட்டு தயாரித்த உற்பத்தியாளருக்கும் அதனை விற்பனை செய்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கும் எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்போது நேற்று நீதிமன்றம் இருவருக்கும்  6 ஆயிரம் வீதம் 12ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா ஈச்சங்குளம் பகுதியிலுள்ள வியாபார நிலையத்தில் ஓமந்தை பொது சுகாதாரப்பரிசோதகர்கள் க....
பல்கலைக்கழகத்தில் உரியவசதி வாய்புக்களை உருவாக்கிதருமாறு நிர்வாகத்திடம் வேண்டுகோள் முன்வைத்த ராஜரட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 16 பேருக்கு விதிக்கபட்டுள்ள வகுப்புதடையை ரத்துசெய்யகோரியும்,பல்கலைக்கழகத்திற்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதர கோரியுமே இப் போராட்டம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு வவுனியா பொதுசந்தைக்கு முன்பாக ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள் கையெழுத்துபோராட்டம் ஒன்றை மேற்கொண்டதுடன் மாலை ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்துதெரிவிக்கும் போது. ராஜரட்ட பல்கலைகழகத்தில் நாம் கல்விமற்றும் அடிப்படை வசதிப்பிரச்சினைகளிற்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளது. அனைத்துமாணவர்களிற்கும் போதியளவு விரிவுரைசெய்வதற்கான கட்டடங்கள்...
  இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவிற்கு சர்வதேசம் தண்டனை கொடுத்திருந்தால்கூட இப்படியொரு அவமானத்தை சிங்கள இனத்தால் மகிந்த பெற்றிருக்கமாட்டார். மகிந்தவின் சிந்தனைகள் அனைத்தையும் இன்று அவரது சொந்த சிங்கள இனமே கிழித்தெறிந்து அவரது உருவப்பொம்மையையும் பாடைகட்டி எரிக்கும் மிக மோசமான அவமதிப்பை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது. வரலாறு மகிந்தவுக்கான தீர்ப்பை சரிவரவே எழுதியுள்ளது.ஆனாலும் தமிழினம் இவையெதனையும் எண்ணி திருப்திப்படப்போவதில்லை. எம்மினத்தின் வலிகளுக்கும் வேதனைகளுக்கும் ஒட்டுமொத்த சிங்கள இனமும் பதில் சொல்லும் காலத்தையே தமிழினம் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறது. https://www.facebook.com/antany.anbu/videos/2026894767367594/
இரத்தினபுரி நிவித்திகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் மற்றும் ஒரு குழந்தையும் உயிரிழந்ததோடு மேலும் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டி ஒன்றும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் 26 வயதுடைய பெண் ஒருவரும் குழந்தை ஒன்றும் உயிரிழந்ததோடு மேலும் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நிவித்திகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார். https://www.facebook.com/1014769965324580/videos/276509556333571/
  அண்மைக்காலமாக வட-கிழக்கில் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் பூதாகரமாக இடம்பெற்று வருகின்றது. இதற்கிடையில் வட-கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நெருங்கியுள்ள தருணத்தில் ஆயுதக்கட்சிகளை எவ்வாறு கட்டுக்கோப்புக்குள் கொண்டுவருவது என்பதுபற்றிய கலந்துரையாடல்களை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்தியாவின் ரோவின் ஆலோசனையுடன் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் மிக முக்கியமாக சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சரவணபவான் போன்றோர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக புலனாய்வுச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழின விடுதலைக்காக ஒரே கோட்டில் பயணித்த இவ்வாயுதக்கட்சிகளின் செயற்பாடுகளை...
  பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது மஹிந்த ராஜபக்ஸவின் ஜனநாயகக் கடமை. இருப்பினும், பெரும்பான்மையை அவர் பாராளுமன்றத்தில் நிரூபிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டார். பணம் வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களை வாங்க பெருமுயற்சி இடம்பெற்ற விடயம் அனைவருக்கும் தெரியும். இருந்தும், அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என இரா. சம்பந்தன் சுட்டிக்காட்டினார். கடந்த 14 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முதலில் குரல் வாக்கெடுப்பு மூலம்...
-மன்னார் நகர் நிருபர்-   எண்ணெய் விலையேற்றம் தென்பகுதி மீனவர்களின் அத்துமீறல்கள்  இவற்றுக்கிடையில் மிகவும் கஸ்டப்பட்டு பிடித்து வரும் மீன்களை கொள்வனவு செய்யும் முதலாளிகள் ஆகக் குறைந்த விலைக்கே தமது கடல் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதாக பாதீக்கப்பட்ட  முத்தரிப்புத்துறை மீனவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக முத்தரிப்புத்துறை மீனவர்கள் தெரிவிக்கையில், சில முதலாளி மார்கள் தொழிலாளிகளுக்கு கடன் கொடுத்துள்ளார்கள். படகு, இயந்திரம், வலைகள் எடுத்து கொடுத்துள்ளார்கள். நாங்கள் பிடிக்கும் மீன்களை அவர்களுக்கே கொடுக்க...