இந்தி நடிகை தீபிகா படுகோனேவும், நடிகர் ரன்வீர்சிங்கும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
தீபிகா படுகோனேவும், ரன்வீர்சிங்கும் தங்கள் திருமண திகதியையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். அதில் எங்கள் திருமணம் நவம்பர் 14 மற்றும் 15–ந் தேதிகளில் இத்தாலியில் நடக்கிறது. எங்கள் வாழ்க்கை அன்பாகவும் ஒற்றுமையாகவும் செல்ல உங்கள் ஆசியை வேண்டுகிறோம் என்று குறிப்பிட்டு இருந்தனர்.
கடந்த 2 வாரமாக திருமண ஏற்பாடுகள்...
நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பிறகு சினிமாவை விட்டு சில வருடங்கள் ஒதுங்கி இருந்த ஜோதிகா ‘36 வயதினிலே’ படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார்.
‘36 வயதினிலே’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு மகளிர் மட்டும், பாலா இயக்கிய நாச்சியார், மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களிலும் நடித்தார்.
ராதாமோகன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘காற்றின் மொழி’ படம் இப்போது திரைக்கு வருகிறது. அடுத்து மீண்டும்...
அரியாலை - நெளுக்குளம் பகுதியில் புகையிரதத்துடன் காரொன்று மோதியதில் காரில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதத்துடனேயே குறித்த கார் மோதியுள்ளது.
இதன்போது காரில் பயணித்த நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அரியாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உடலில் 70 சதவீத தண்ணீர் தசைகளிலும், 90 சதவீத தண்ணீர் மூளையிலும் மற்றும் 83 சதவீத தண்ணீர் இரத்தத்திலும் கலந்து உள்ளது.
இந்த தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதின் மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.
ஆனால் அத்தகைய தண்ணீரை எந்தெந்த நேரங்களில் குடிக்க கூடாது எனவும் குடித்தால் என்ன ஆகும் எனவும் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.
காரமான உணவிற்கு பின்பு
சிலர் காரமான உணவுகளை உண்ட பின்பு உடனே நீர்...
சவுதி அரேபியாவில் இருந்து விமானத்தில் இந்தியாவுக்கு திரும்பி கொண்டிருந்த 4 வயது சிறுவன நடுவழியிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த யாழ்யா புதியபுரையில் (4) என்ற சிறுவன் தனது குடும்பத்தாருடன் புனித பயணமாக சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு சென்றுள்ளார்.
பின்னர் குடும்பத்தாருடன் விமானத்தில் இந்தியாவுக்கு திரும்பி கொண்டிருந்தான்.
விமானம் கிளம்பிய 45 நிமிடத்தில் சிறுவனுக்கு வலிப்பு ஏற்பட்டது. பின்னர் உடல்நிலை மோசமாக தாயின் மடியிலேயே உயிரிழந்தான்.
இதையடுத்து விமானமானது அவசர...
சிறைக்குள் சிறைக் கைதி ஒருவருக்கு மிக சூட்சுமமான முறையில் 50 மில்லிகிரேம் ஹெரோயின் போதை பொருளை கொண்டு சென்ற குறித்த கைதியின் மகன் உட்பட மூவரை பதுளை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
குறித்த சிறை கைதி போதை பொருள் விற்பனை குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பதுளை பிரதான சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறைக்குள்ளிருந்தவாரே போதை பொருளை ஏனைய சிறைக் கைதிகளுக்கு விற்பனை செய்யும் முகமாகவே சிறைக் கைதியின் மகன் மிக ...
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற தன்மை மற்றும் அரசியல்வாதிகளின் அக்கறையின்மை என்பவற்றை காரணம் காண்பித்து தோட்டத் தொழிலாளர்களின் சம்பள கோரிக்கை புறம் தள்ளி விடப்படக் கூடாது என பெருந்தோட்ட தொழிலாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்திற்கு குறித்த தொழிற்சங்கத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடித்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர் கூட்டமைப்பு செயளாலர் நாயகமும் லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் பொதுச் செயளாலருமான எஸ்.இராமநாதனால் முதலாளிமார் சம்மேளனத்திற்கு குறித்த கடிதம்...
அஜித் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் பொங்கலுக்கு விஸ்வாசம் படம் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் விஸ்வாசம் படப்பிடிப்பு முடிந்து குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ள அஜித்தை விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர் பார்த்துள்ளார்.
அவர் அஜித்தை பார்த்தவுடன் கண்ணீர் விட்டு அழ, அஜித் அவர் கையை பிடித்து அழவேண்டாம் என்று கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, நேற்று குழந்தைகள் தினத்தை கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் திகதி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதே போல் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, சிறுவர்களுடன் இந்த தினத்தை கொண்டாடியுள்ளார்.
மைதானம் ஒன்றில் சிறுவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்...
முன்னாள் உலக செஸ் சாம்பியனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தை 14 வயது சிறுவன் சமனில் பூட்டிய சம்பவம் வெளியாகியுள்ளது.
கேரளாவின் திரிச்சூர் பகுதியை சேர்ந்த 14 வயது நிஹால் சரின் என்ற சிறுவனே முன்னாள் உலக செஸ் சாம்பியன் ஆனந்தை திக்குமுக்காட வைத்துள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய விரைவு செஸ் போட்டிகளின் 8-வது சுற்றில் ஆனந்துடன் நிஹால் சமனில் பூட்டியுள்ளார்.
மட்டுமின்றி செஸ் தொடர்பில் பல்வேறு சூட்சுமங்களையும் ஆனந்த் கற்றுத்தந்ததாக நிஹால் தெரிவித்துள்ளார்.
இளையோருக்கான...