ஐ.சி.சி.யின் சர்வதேச தொடரொன்றில் ஒன்றாக துடுப்பெடுத்தாடிய முதல் ஒரேபால் திருமணம் செய்த ஜோடி என்ற பெருமை தென்னாபிரிக்க அணியின் மகளிர் அணித்தலைவர் டேன் வேன் நிகேக்கும் மரிசேன் கப்பிற்கும் கிடைத்துள்ளது. மேற்கிந்திய தீவுகளில் இடம்பெறும்  மகளிருக்கான ஐ.சி.சி. இருபதுக்கு -  20 உலக கிண்ணப்போட்டிகளில் இன்று இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக தென்னாபிரிக்க அணியின் மகளிர் அணித்தலைவர் டேன் வேன் நிகேக்கும் மரிசேன் கப்பிற்கும் களமிறங்கியுள்ளனர். இவர்கள் இருவரும்...
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று காலை மஹிந்தவுக்கு எதிராக ஜே.வி.பியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை இவர் உறுதி செய்துள்ளார். ஜே.வி.பியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் 122 பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் அஜித் பெரேரா மற்றும் லக்ஸ்மன் கிரியெல்லவும் இதனை உறுதிசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   நாடாளுமன்றை விட்டு வெளிநடப்பு செய்த பிரதமர் மஹிந்த. பிரதமர் மஹிந்த...
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜான் ஹேஸ்டிங்ஸ், மனவேதனையுடன் அனைத்துக் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஜான் ஹேஸ்டிங்ஸ் பந்துவீசும்போது, நுரையீரலில் ரத்தக் கசிவு பிரச்சனை இருந்ததால் ரத்த வாந்தி எடுத்தார். அதனைத் தொடர்ந்து, மருத்துவர்களை அவர் அணுகியபோது மீண்டும் ரத்தக் கசிவு ஏற்படாது என்பதற்கு அவர்கள் உத்தரவாதம் அளிக்கவில்லை என்றும், இது தனக்கு பெருத்த ஏமாற்றமளிப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஹேஸ்டிங்ஸ் 29...
ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் அதிகளவு ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி முதலிடத்தில் உள்ளார். ரோகித் சர்மா இரண்டாம் இடத்தில் உள்ளார். ராஸ் டெய்லர் மூன்றாம் இடத்தில் உள்ளார். முதல் பத்து இடங்களுக்கான பட்டியலில் இன்னொரு இந்திய வீரரான ஷிகர் தவான் இடம்பிடித்துள்ளார். இவர் எட்டாவது இடத்தில் உள்ளார். பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் மூன்று இந்திய வீரர்கள் இடம்...
தெற்கு சூடானில் 17 வயது மகளை தந்தை திருமணத்திற்காக ஏலத்தில் விட்ட சம்பவம் தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தெற்கு சூடானில் பெரும்பாலும் Dinka என்ற கலாச்சாரம் பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது பெற்றோர் தங்கள் பெண்களை ஏலத்தில் விடுவார்களாம், அதில் இறுதியாக யார் அதிகமாக பொருட்களோ, பணமோ கொடுக்கிறார்களோ அவர்களுக்கு அந்த பெண் திருமணம் செய்து வைக்கப்படும். அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய 17 வயது மகளை அங்கிருக்கும் தந்தை ஒருவர்...
இந்தோனேசியாவில் கடலில் மூழ்கிய விமானத்தில் தனது வருங்கால கணவரை பறிகொடுத்த பெண் அவரின் இறுதி ஆசையை நிறைவேற்றியுள்ளார். ஜகர்டா நகரிலிருந்து கடந்த மாதம் 29-ஆம் திகதி 189 பயணிகளுடன் கிளம்பிய விமானம் கடலில் விழுந்தது. இதில் உள்ளிருந்த அனைவரும் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. விமானத்தில் ரியோ நந்தா என்ற மருத்துவர் பயணித்துள்ளார். ரியோவுக்கும் சயாரி (26) என்ற பெண்ணுக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டு நவம்பர் 11-ஆம் திகதி திருமணம் நடக்கவிருந்தது. ஆனால் அதற்குள் துரதிஷ்டவசமாக ரியோ...
திருகோணமலை சிறிமாபுர விகாரைக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான பெண்ணொருவரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம். எச். எம். ஹம்ஸா முன்னிலையில் இன்று மாலை ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண் திருகோணமலை, மகாமாயபுர பகுதியைச் சேர்ந்த பி.எச்.இனோகா நில்மினி (40 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம்...
கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று ஐந்து இலட்சம் ரூபா பணத்தினை கப்பமாக பெற்றுக்கொண்ட சம்பவத்துடன் தொடர்பு பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் எதிர் வரும் 19ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதி மன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கிளிநொச்சி பொன்னகர் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு கடந்த 6ஆம் தகதி பொலனறுவையை சேர்ந்த சில நபர்களால் கடத்தப்பட்டார். பின்னர் இளைஞனின் உறவினர்களிடம்...
சீனாவில் விபத்தில் பலியானவர் திரும்பி வருவார் என எதிர்பார்த்து அவர் வளர்த்த நாய் 80 நாட்களாக ஒரே இடத்தில் காத்திருக்கிறது. சீனாவின் ஹோட் நகரில் வசிக்கும் பெண் ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். அவர் இறந்த பின் அவர் வளர்த்த நாய் சாலை விபத்து நடந்த இடத்திலேயே தன்னை வளர்த்த பெண் திரும்பி வருவார் என்று எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது. அந்தப் பெண் இறந்து 80...
  அதிவிசேட செய்தி: மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு பேரிடியாய் வீழ்ந்த மற்றுமோர் தகவல்! சிறிலங்காவின் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை இன்று கொண்டுவருவோம் என சில நிமிடங்களுக்கு முன்னர் நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி அறிவித்துள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்ததையடுத்து உயர் நீதிமன்றில் பலதரப்பினராலும் அதற்கு எதிரான மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் நேற்று...