அளவுக்கு அதிகமான சட்டவிரோத போதைப்பொருள் பாவனையினால் கடந்த இரண்டு ஆண்டுகளில், சராசரியாக நாளொன்றுக்கு 10 பேர் உயிரிழப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவின் பொது சுகாதார நிறுவனமொன்றினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றுக்கு அமைய இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அளவுக்கு அதிகமான சட்டவிரோத போதைப்பொருள் பாவனை காரணமாக உயிரிழந்தவர்களின் சமூக மற்றும் பொருளாதார பின்னணி தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது.
அதற்கமைய இந்த நெருக்கடி நிலையானது மிகவும் மிகவும் கடுமையாக காணப்படுவதாகவும் குறித்த ஆய்வு நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, பிரிட்டிஷ்...
இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலஸ்தீனத்திற்கான ஐ.நா. தூதுவர் றியாத் மன்சூர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, காஸா மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காஸா எல்லையில் பலஸ்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நிலையிலேயே அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு செயற்பாடுகளை நாம் வலுவாக கண்டிக்கின்றோம்.
சர்வதேச...
தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக ஒன்றரை மாத ஆண் சிசுவொன்று மரணித்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் 5ஆம் குறிச்சியைச் சேர்ந்த வெற்றிவேல் ஹபினேஸ் எனற பிறந்து 70 நாட்களான குழந்தையே நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த செப்டெம்பெர் மாதம் 05 ஆம் திகதி லதா – வெற்றிவேல் என்ற தம்பதிக்கு 5 வது பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.
அந்த இரட்டையர்களில் ஒருவரான ஹபினேஸ் எனும் குழந்தைக்கு...
சபாநாயகர் அலுவலகத்தின் அழைப்பின் பேரில் இன்று பாராளுமன்றம் கூட்டப்படவுள்ளது.
இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூட்டப்படவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்திருந்தது.சபை நடவடிக்கைகளுக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வருகை தந்துள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க வருகை தந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, பாராளுமன்ற அமர்வுகளை அவதானிக்க வெளிநாட்டு இராஜதந்திரிகள் பாராளுமன்றத்தில் குழுமியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, மக்கள் விடுதலை முன்னணி அகிய...
ஜாதகத்தில் ஒருவருக்கு, வியாழன் பத்தில் வந்தால், பதியை விட்டுக் கிளப்புமாம். வியாழேந்திரனுக்கும் பதியை (வீட்டுச் சின்னம்) விட்டுக் கிளப்பி விட்டது, அரசியலை விட்டு?
Thinappuyal News -
கிழக்கில் தமிழர் பகுதிகளில், அபிவிருத்திப் பணிகள், பின்னடைவுகளைக் கண்டுள்ளன. அங்குள்ள ஏனைய இனங்கள், தம்மிடம் உள்ள அமைச்சுப் பதவிகளைப் பயன்படுத்திக் கொண்டு, தாங்கள் சார்ந்த சமூகங்களுக்குப் பல அபிவிருத்தித் திட்டங்களைச் செய்துகொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், “ஒட்டுமொத்த கிழக்குத் தமிழ் மக்களது நலன் கருதியே, அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டதே அன்றி, எனது குடும்பத்துக்காக அல்ல” என, தனது கட்சித் தாவல் குறித்துப் பல விளக்கங்களை, பிரதியமைச்சர் பதவியைப் பெற்றுக்கொள்ள வியாழேந்திரன்...
பொரளை, கொட்டா புகையிர பாதையில் ரயிலொன்று இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
அத்துடன் இதன் காரணமாக களனிவெளி வீதியூடான புகையிரத சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு அறை மேலும் குறிப்பிட்டுள்ளது.
முக்கியமான தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் உச்ச நீதிமன்றிலிருந்து நேரடியாக...
https://www.facebook.com/NewsfirstSL/videos/603167870101395/
https://www.facebook.com/dailyceylon/videos/2230967360483523/
சர்கார் படம் திரைக்கு வந்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. முதல் வாரம் இதனால் படத்திற்கு நல்ல வசூலும் இருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் பேனரை கிழித்ததற்கு ரஜினிகாந்த் ட்வீட்டரிலேயே கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.
அதை தொடர்ந்து இன்று பத்திரிகையாளர்களை சந்திக்கையில் இவர் 'பேனரை கிழித்தது தவறு தான், வன்முறை எந்த ரூபத்திலும் இருக்க கூடாது.
மேலும், இலவசங்கள் தேவை தான், ஆனால், அது வாக்குக்காக இல்லாமல், மக்களின் தரத்தை உயர்த்துவதாக இருக்க...
வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக எடுத்து வருபவர். இவர் இயக்கத்தில் வந்த வடசென்னை பிரமாண்ட வெற்றியை பெற்றது.
இந்நிலையில் இப்படம் குறித்த கலந்தாய்வு கூட்டம் ஒன்றில் ரசிகர் ஒருவர் தளபதி விஜய்யுடன் இணைந்து படம் செய்வீர்களா என்று கேட்டார்.
அதற்கு வெற்றி 'நீங்கள் உதவி இயக்குனரா? இது தான் மிகவும் துயரமான கேள்வி, தயவு செய்து கேமராவை ஆப் செய்யுங்கள்' என்று டென்ஷனுடன் கூறினார்.
என்ன ஒரு அற்புதமான பந்து வீச்சாளர்! வெளிநாட்டு வீரரை புகழ்ந்து தள்ளிய குமார் சங்ககாரா
Thinappuyal News -
தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினை இலங்கை அணியின் ஜாம்பவான் சங்ககாரா புகழ்ந்துள்ளார்.
டுவிட்டரில் கிரிக்கெட் விடயமான கருத்துகளை பகிர்வதை குமார் சங்ககாரா வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் டுவிட்டரில் தென் ஆப்பிரிக்க வீரர் கிரையம் ஸ்மித் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.
அதில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அபாரமாக பந்துவீசி விக்கெட்களை வீழ்த்திய தொகுப்பு இடம்பெற்றிருந்தது.
அந்த பதிவை டேக் செய்து குமார் சங்ககாரா ஒரு பதிவை...