இந்திய கிரிக்கெட் வீரர் டோனி திருமணத்திற்கு வரன் பார்த்துத் தரும் ஒரு இணைய நிறுவனத்துடன் விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். இந்திய நட்சத்திர வீரர் டோனி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கிண்ண தொடர் தான், அவருக்கு கடைசி கிரிக்கெட் தொடர் என்று கூறப்படுகிறது. எனினும் டோனிக்கு விளம்பர வாய்ப்புகள் பெருகி வருகின்றன. அதன் ஒரு படியாக தற்போது பாரத்...
மகளிர் டி20 உலகக் கிண்ண தொடரின் நேற்றைய போட்டியில், வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் பெண்களுக்கான டி20 உலகக் கிண்ண தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து-வங்கதேச அணிகள் மோதின. முதலில் ஆடிய வங்கதேச மகளிர் அணி, இங்கிலாந்து வீராங்கனைகளின் அபார பந்துவீச்சினால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 76 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை அயஷா...
நியூசிலாந்தின் கடல் பகுதியில், சுமார் 26 அடி நீளமுள்ள பிரம்மாண்ட கடல் புழு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. நியூசிலாந்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஹாத்வே(56), ஆண்ட்ரூ பட்லே(48) ஆகியோர் எரிமலையால் உருவான வெள்ளைத் தீவு பகுதியில் உள்ள கடலுக்குள் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது வழுவழுப்பான நிலையில் வெள்ளை நிறத்துடன் கூடிய பிரம்மாண்ட புழு ஒன்றை அவர்கள் கண்டனர். அந்த புழு சுமார் 26 அடி நீளத்துடன், தலைப்பகுதி தட்டையாகவும், முட்கள் போன்ற அமைப்புடனும்...
கணினி வகைகளுள் சூப்பர் கணினிகளே அதிக வினைத்திறன் கொண்டவையாகும். இவற்றிலும் வேகம் கூடிய கணினிகளை உருவாக்குவதில் உலகின் முன்னணி நாடுகளுக்கிடையே பலத்த போட்டி காணப்படுகின்றது. குறிப்பாக சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் பலத்த போட்டி நிலவுகின்றது. அண்மைக் காலம் வரை முன்னணியில் இருந்த சீனாவை தற்போது அமெரிக்கா பின்னுக்கு தள்ளியுள்ளது. ஒரு செக்கன்களில் 143.5 பீட்டா பிளாப்களை செய்யக்கூடிய இரு சுப்பர் கணினிகளை உருவாக்கியதன் மூலமே இது சாத்தியமாகியுள்ளது. IBM தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட...
கூகுள் குரோம் உலாவிக்கு அடுத்ததாக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் உலாவியாக Firefox விளங்குகின்றது. இவ் உலாவியில் தற்போது புதிய வசதி ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒன்லைன் ஊடாக பொருட்களை கொள்வனவு செய்யும் பயனர்கள் அதிக பயனடைய முடியும். அதாவது தரப்பட்டுள்ள புதிய நீட்சியானது கொள்வனவு செய்ய வேண்டிய பொருட்களின் விலை மாற்றங்களை காண்பிக்கும். எனவே விலை குறைவடையும்போது குறித்த பொருளை கொள்வனவு செய்ய முடியும். தற்போது Amazon, Best Buy, Home Depot, eBay, மற்றும்...
ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு, நீதியும் நியாயமும் நிலைநாட்டப்பட விரும்பும் ஒவ்வொரு இலங்கைப் பிரஜைக்கும், இன்றைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமானதாக அமைய வேண்டுமென அனைவரும் இறைவனை பிரார்த்திக்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊடகப் பிரிவுக்கு இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இந்த நாட்டின் ஜனாதிபதி, தனக்கு இல்லாத அதிகாரங்களை எல்லாம் எழுந்தமானமாக கையில் எடுத்துக்கொண்டு, மனம்போன போக்கிலே செயலாற்றி...
    முஸ்லீங்கள் தமிழ்பேசுகிறார்கள் அப்படியாக இருந்தால் இவர்களும் இந்துக்களா?உலக சைவ திருச்சபையின் தலைவர் அடியார் விபுலானந்தா தினப்புயல் சிறப்பு நேர்காணல்
வவுனியாவில் இன்று 3ஆவது நாளாக கடும் பனிமூட்டம் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலிருந்து கடும் பனிப்பொழிவு காணப்படுவதுடன் குளிரான காலநிலையும் நிலவுகின்றது. இதன் காரணமாக வாகன சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன், மக்களது இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளதுடன் ஏ9 வீதியும் பனிமூட்டமாக காட்சியளித்துள்ளது. பனிமூட்டத்தால் காலை நேரங்களில் இவ்வீதி வழியாக பயணங்களை மேற்கொள்ளும் வாகனங்களின் சாரதிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், பாடசாலை மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் ஆகியோரும்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மேலும் விஸ்தரிப்பது தொடர்பான நடவடிக்கைகளில் கூட்டமைப்பு ஈடுப்படவிருப்பதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். மேலும், இதற்காக கூட்டமைப்பினுள் புதிய கட்சிகள் மற்றும் அமைப்புகளை இணைத்துக் கொள்வது தொடர்பில் ஆராயப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், எதிர்காலத்தில் தேர்தல் ஒன்று நடைபெறும் பட்சத்தில், அதற்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடப்படவுள்ளது...
நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என தெரிவித்துள்ள சட்டமா அதிபரின் கருத்தை ஏற்க முடியாதென முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கொழும்பு, நீதிமன்ற வளாகத்தில் இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றை கலைக்கலாமென உயர்நீதிமன்றில் சட்டமா அதிபர் இன்று குறிப்பிட்டுள்ளார். சட்டமா அதிபரின் இந்த வாதத்தை ஏற்க முடியாதென குறிப்பிட்ட ஹக்கீம், நாடாளுமன்றை கலைத்த ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு...