திருகோணமலை மாவட்ட பாடசாலை மாணவரது தமிழ் மொழி ஆற்றலையும் தமிழ்ப் பண்பாட்டு அறிவையும் மனனத் திறனையும் உயர் எண்ண வளத்தையும் மேம்படுத்தும் நோக்கோடு திருக்குறள் போட்டி நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட மட்டத்திலான இறுதிப் போட்டி நேற்று முன்தினம் திருகோணமலை நகரில் உள்ள ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்றுள்ளது. முற்பகலில் எழுத்துத் தேர்வும் பிற்பகலில் ஓதுதல் தேர்வும் இடம்பெற்றுள்ளன. கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களமும் திருகோணமலை மாவட்ட நலன்புரிச்சங்கமும் இணைந்து...
கிளிநொச்சிக் கரைச்சிப் பிரதேச சபையின் அசமந்தப் போக்கினால் நேற்று இரவு கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு அருகாமையில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் கடை ஒன்று எரிந்ததில் சுமார் எழுபது லட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. கடையில் ஏற்ப்பட்ட மின்சார ஒழுக்கு காரணமாக திடீர் என கடை தீப்பிடித்து எரிந்துள்ளது. உடனடியாக மின்சார சபை, மற்றும் கரைச்சிப் பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் உள்ள தீயணைப்பு பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. மின்சார சபையினர்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் இந்த சந்திப்பை அவர்கள் புறக்கணித்துள்ளனர். புதிய வெளிவிவகார அமைச்சருடன் இந்த சந்திப்பு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து விலக்கிவிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அந்த பதவியில் நியமித்தமையினால் இலங்கை அரசியலில் கொந்தளிப்பு நிலைமை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையிலான...
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சரியானதே என்ற அடிப்படையிலான வாதங்களை சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய உச்ச நீதிமன்றில் முன்வைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் நாடாளுமன்றை கலைத்திருந்தார். இந்த நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்ட ரீதியானதே என்ற அடிப்படையில் ஜனாதிபதியின் தரப்பு நியாயங்களை, சட்ட மா அதிபர் தலைமையிலான குழுவினர் உச்ச நீதிமன்றில் முன்வைக்க உள்ளனர். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சட்டவிரோதமானது எனக் கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களையும் அதற்கு எதிராக...
(மன்னார் நகர் நிருபர்) மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது கடந்த வெள்ளிக்கிழமை 104 வது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வார விடுமுறை என்பதனால் சனி மற்றும் நேற்றைய தினம் இடம் பெறவில்லை. இந்த நிலையில் 105வது தடவை அகழ்வு பணியானது இன்றைய தினம் இடம் பெறும் என எதிர் பார்க்கப்பட்டபோதும் இன்றைய தினம் மனித புதைகுழி அகழ்வு பணியானது இடம்பெறவில்லை என அறிய முடிகின்றது. அத்துடன் இரு...
இலங்கையின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு தொடர்பில் வழங்கப்படவுள்ள தீர்ப்பு குறித்து, ஒட்டுமொத்த இலங்கையை மாத்திரமன்றி, உலகத்தின் கவனத்தையும் உச்சநீதிமன்றத்தின் மீது திருப்பியுள்ளது. ஆயுட்காலம் முடிவடைய முன்னர் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்தமை குறித்து சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. 19வது அரசியலமைப்பு முரணாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, அதற்கு எதிராக 12 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகும் என...
கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இலங்கை அரசியலில் அப்பம் மிகவும் பிரபல்யமடைந்த ஒன்றாகியுள்ளது. மஹிந்த - மைத்திரி ஜனாதிபதி தேர்தலுக்காக பிரிவதற்கு முதல் நாள் அலரி மாளிகையில் அப்பம் சாப்பிட்டமையே இதற்கு காரணமாகும். மைத்திரி - மஹிந்த தற்போது இணைந்த போதிலும் அப்பத்தின் ஆர்வம் இன்னமும் குறையவில்லை. இந்த நிலையில் அலரி மாளிகையில் “மைத்திரி அப்ப கடை” ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அலரி மாளிகையை விட்டு செல்லாத ரணிலுக்காகவும், அங்கு கூடும் உறுப்பினர்களுக்காகவும் அப்பம் சுடும்...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்க தயாராக இருப்பதாக அந்த கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்துடன், பிரதமர் வேட்பாளராகவும் போட்டியிட தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். சர்வதேச செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டால் எந்த பொறுப்பையும் ஏற்க தயார். அத்துடன், தற்போதை கட்சியின் தலைவர் மற்றும் ஏனையவர்கள் ஆதரிப்பார்களாக இருந்தால் எந்த பொறுப்பையும்...
  கடந்த இரு வாரங்களாக தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் பிரளயத்தின் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்களின் கட்சித்தாவல் தமிழ் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் விலைகொடுத்து வாங்கிவிட முடியாது என முன்னாள் இராணுவத்தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா கூறி 48மணி நேரம் கடப்பதற்கு முதல் கனடாவிலிருந்து வந்த கையோடு நேரடியாக ஜனாதிபதி...
  இன அழிப்பு என்ற பதம் எவ்வாறு வல்லரசுகளின் நலன்களுக்கேற்ப மோசடியாக பயன்படுத்தப்படுகிறது, வியட்னாமிலிருந்து ஈராக் வரை அமெரிக்கா போன்ற வல்லரசுகளினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலைகள் எவ்வாறு ஊடகங்களாலும் அதிகாரம் சார் அறிவுஜீவிகளாலும், சர்வதேச என் ஜீ ஓ களாலும் திட்டமிட்டு கவனத்தில் எடுக்கப்படாமல் மறைக்கப்படுகின்றன என்பதையும் ,அதற்கு பின்னால் உள்ள ஆதிக்க அரசியலையும் இன அழிப்பின் அரசியல் வெளிக்கொணர்கிறது. மேற்கத்தைய வல்லரசுகளுக்கு சார்பான அரசுகள் அல்லது அமைப்புகள் பாரிய...