திருகோணமலை - சேருநுவர பகுதியில், ஒருவரை தாக்கி காயமேற்படுத்தி விட்டு தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். 12 வருடங்களிற்கு பிறகு குறித்த நபர் பற்றி குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர். வாழைத்தோட்டத்தை சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் கடந்த 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனிப்பட்ட தகராறுகள் காரணமாக ஒருவரை கடுமையாக தாக்கி...
நீண்ட காலமாக மக்களின் வேண்டுகோளாக காணப்பட்ட வடிகான்கள் சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் இன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வேலைத்திட்டம் காரைதீவு பிரதேசசபை உறுப்பினர் த.மோகனதாஸ் வட்டாரத்திலிருந்து தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திலும் இத்தகைய வடிகான் சுத்தம் செய்யும் வேலைகளை மாரிக்கு முன் செய்து முடிக்க வேண்டுமென சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அமைவாக இன்று இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.        
யாராவது வழங்கும் நிறைவேற்று உத்தரவினை நிராகரிக்குமாறு அனைத்து அரச ஊழியர்களிடம் கேட்டுக்கொள்வதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கேட்டு கொண்டுள்ளார். அரசியலமைப்பின் திருத்தச்சட்டத்தின் கீழ் தங்கள் பொறுப்பை ஏற்றுள்ள அனைத்து நபர்களும், கட்சி அரசியல் குறித்து கருத்திற்கொள்ளாமல் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக முன்நிற்க வேண்டும் என்பதே பொறுப்பாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு முன்னாள் சபாநாயகர் இதனை குறிப்பிட்டுள்ளார். பொது மக்கள் தெரிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமையை பலவந்தமாக பறிப்பதனை...
தந்தை இறந்த செய்தியறிந்த மகள் சோகம் தாங்க முடியாமல் பேராதனையில் தற்கொலை செய்துள்ள சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, வவுனியா - கற்குளம் 4ஐ சேர்ந்த செல்வநாயகம் என்பவர் நேற்றைய தினம் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலை பிரிவில் கற்று வரும் அவரது மகளான மதுசாவிற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக வவுனியா வருவதற்காக பேருந்து...
நாடாளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்தமைக்கு எதிராக பல்வேறு தரப்பினராலும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் சட்டத்தரணிகள், பல கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்தில் திரண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...
துபாய் பொலிசார் பறக்கும் பைக்குகளை பயன்படுத்த பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. துபாய் அரசு Hoversurf S3 2019 எனும் பறக்கும் பைக்குகளை பொலிசாருக்காக வழங்கியுள்ளது. இந்த பைக்குகளை Hoversurf என்ற அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ளது. ஏற்கனவே லம்போர்கினி, ஃபெராரி போன்ற முன்னணி நிறுவனங்களின் சூப்பர் கார்களை துபாய் பொலிசார் பயன்படுத்தி வரும் நிலையில், இனி இந்த பறக்கும் பைக்குகளை பயன்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது. ஸ்கார்பியன் என்று...
ஆப்பிள் நிறுவனம் கடந்த வருடம் iPhone X எனும் புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது. இக் கைப்பேசியானது பயனர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. இதற்கு முக்கியமான காரணமாக ஏனைய ஆப்பிள் கைப்பேசிகளின் அளவினை விடவும் பாவனைக்கு சௌகரியமான அளவில் வடிவமைக்கப்பட்டிருந்தமை காணப்படுகின்றது.. எவ்வாறெனினும் இக் கைப்பேசியின் தொடுதிரை முறையாக இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது பல பயனர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இதனால் ஆப்பிள் நிறுவனம் பயனர்களின் நம்பிக்கையை தக்க வைப்பதற்காக அதிரடி நடவடிக்கையில்...
ஸ்மார்ட் கைப்பேசிகளில் பெரும் குறைபாடாக கருதப்படுவது மின்கலத்தின் பாவனைக் காலம் குறைவாக இருப்பதாகும். அதாவது முழுமையாக சார்ஜ் செய்த பின்னர் குறிப்பிட்ட சில மணித்தியாலங்கள் வரை மாத்திரமே கைப்பேசியினை பயன்படுத்த முடியும். இப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பல்வேறு நிறுவனங்கள் முனைப்புக்காட்டி வருகின்றன. இந்நிலையில் கூகுள் நிறுவனம் புதிய நுட்பம் ஒன்றினை கண்டுபிடித்துள்ளது. அதாவது அப்பிளிக்கேஷன்களை Dark Mode இல் பயன்படுத்துவதன் ஊடாக மின்கலங்களின் பாவனைக் காலத்தை அதிகரிக்க முடியும் என்பதாகும். White Mode இல்...
கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக ஓசோன் படையில் பாதிப்பை ஏற்படுத்தும் பதார்த்தங்களின் அளவு தொடர்ச்சியாக குறைவடைந்து வருவதாக ஜ.நா தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி இரசாயனங்களின் உற்பத்தியைத் தடைசெய்யும் போருட்டு கைச்சாத்திடப்பட்டிருந்த சர்வதேச ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இது சாத்தியமாகியுள்ளது. இது ஓசோன் படையில் பாதிப்பை உண்டுபண்ணும் இரசாயனங்கள் மீதான 1989 ஆம் ஆண்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த மொன்றியல் ஒப்பந்தம். இதன் மூலமாக ஓசோனின் வளிமண்டலப் படையை சிதைவடையச் செய்யும் இரசாயனங்களின் உற்பத்தி நிறுத்திவைக்கபட்டிருந்தது. ஓசோன்...
ஒருவரது பெயர் அவரது பிறப்பில் இருந்து இறப்பு வரை தாக்கத்தை உண்டாக்கும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். ஒருவரது பெயரில் எந்தெந்த எழுத்துக்கள் அதிக முறை இடம் பெற்றால் அதனால் வந்தாஅவர்கள் வாழ்வில் என்னென்ன தாக்கங்கள் ஏற்படலாம் என்பதை பார்க்கலாம். D, M, T இந்த எழுத்துக்கள் ஒருவரது பெயரில் அதிகமாக இடம் பெற்றிருந்தால், அவர்கள் கடினமாக உழைக்கும் குணம் கொண்ட நபர்களாக திகழ்வார்கள். இவர்கள் தொழில் செய்வதில், சொந்தமாக வேலை செய்வதில் அதிக...