மன்னார் நகர் நிருபர்
யுத்தத்துக்கு பின்னர் மதங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை எற்படுத்தும் வகையில் மத தலைவர்கள் மற்றும் மதம் சார்ந்த அங்கத்தவர்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், முரண்பாடுகளையும் தவிர்ப்பதற்கான செயற்பாடுகளின் ஒன்றாக தேசிய சமாதன பேரவையின் அனுசரனையில் LIRC அமைப்பின் எற்பாட்டில் இரண்டு நாள் பயிற்சி பட்டறையானது இன்று ஆரம்பிக்கப்பட்டது.
மதம் சார்ந்த முரண்பாடுகள் அண்மை காலங்கலில் அதிகரித்துள்ளதன் காரணமாக நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்ககூடிய பல்வேறு சமூக விரோத செயற்பாடுகள் பிரதேச மட்டத்தில் அதிகரிப்பதனை...
தமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் போன்ற பகுதிகளுக்கு பயணம் செய்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் ஊடாக வட்டுவாகல் பாலத்திற்கு சென்று, அங்கு வலைவீசி மீன் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களை சந்தித்துள்ளார்.
அத்துடன் அவரும் குறித்த மீனவர்களுடன் இணைந்து வலை வீசியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு பகுதிக்கு சென்று அங்கு சுடர் ஏற்றி வணக்கம்...
கிண்ணியா பாலத்திற்கு கீழ் தூண்டில் மூலம் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் காணாமல் போயிருந்த நிலையில் இன்று மாலை 5 மணியளவில் அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் கிண்ணியா 3 பிரதான வீதியை சேர்ந்த யாக்கூப்ஹாரி முஹீத் என்ற 18 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
கிண்ணியா பாலத்திற்கு கீழே உள்ள தூணில் தூண்டலில் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தவறுதலாக...
வவுனியா வடக்கு, காஞ்சிராமோட்டை மக்கள் மீள்குடியேறிய போதும் அடிப்படை வசதிகள் இன்றி பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காஞ்சிராமோட்டை மற்றும் அதனை அண்டிய காட்டு பூவரசங்குளம், நாவலர் பண்ணை போன்ற கிராமங்களில் 1977 ஆம் ஆண்டு முதல் 300 குடும்பங்கள் வரை வாழ்ந்து வந்தனர்.
1987ஆம் ஆண்டு ஏற்பட்ட அசதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து இக்கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிலர் காணாமல் போயினர். இதனையடுத்து இப்பகுதி...
திருகோணமலையில், இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இரண்டு சந்தேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்க இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது நிலாவெளி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் இருந்து பல போதை மாத்திரைகள் மற்றும் கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள்...
தி/கிண்ணியா மீரா நகர் முஸ்லிம் பாடசாலையில் வகுப்பறையற்ற தகரக் கூடாரத்தில் கற்றல் நடவடிக்கை.!
Thinappuyal News -
கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட தி/கிண்ணியா மீரா நகர் முஸ்லிம் பாடசாலையில் தரம்-7 இல் கல்வி கற்கும் மாணவர்கள் வகுப்பறையின்றி கூடாரத்தில் கல்வி கற்று வருவதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இவ் விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
தளபாட வசதியற்றும் வகுப்பறையற்ற நிலையிலும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். இவர்கள் எவ்வளவு சிரமத்துடன் கல்வி பயில்கின்றனர்.
இப்படி இருந்தால் எப்படி மாணவர்கள் கற்பார்கள் மழை காலங்களில் கூடார வகுப்பறைக்குள் இருந்து கற்றல் நடவடிக்கைகளை...
சிங்களக் கட்சிகள் அதன் தலைவர்கள் யாராக இருந்தாலும் தமிழீழத்திற்கு எதிரானவர்கள் தான். தமிழீழ நலன்களுக்கும் எதிரானவர்கள்தான் என தமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் தமிழ் மக்களுடைய நலன்களை அடிப்படையாக கொண்டு ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு வருகைத்தந்துள்ள திருமாவளவன், யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சிப் பாதைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவே காரணமாகிவிட்டார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள முன்னெடுத்த பொறிமுறையில் தானாகவே சிக்கிக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் மக்களின் ஆணைக்கு எதிராக ஜனாதிபதி மேற்கொள்ளும் பொருத்தமற்ற சூழ்ச்சிகளை சட்டரீதியில் முறியடித்து நாட்டில் சுபீட்சமான...
பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று முற்பகல் 11 அளவில் அவருக்கு கட்சியில் இணைந்தமைக்கான அங்கத்துவ அட்டை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்து ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்ட உறுப்பினர்களுக்கும் அங்கத்துவ அட்டை வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த அங்கத்துவ அட்டை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மும்மொழியிலும் அச்சிடப்பட்டுள்ள குறித்த அட்டையில்...
சகோதர முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சகோதர தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பணத்துக்கு விலைபோக வில்லையெனவும், தமது சமூகத்தின் கோரிக்கைகளை முன்னிறுத்தியே பேரம் பேசியதாகவும் யுதுகம அமைப்பின் உறுப்பினர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
நாட்டை ஏலத்தில் விட்டு முடிந்ததன் பின்னர், கடந்த சில நாட்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஏலத்தில் போட்டனர்....