காலேயில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இலங்கைக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 342 ரன்களும், இலங்கை 203 ரன்களும் எடுத்தன. 139 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து...
முல்லைத்தீவில் தொடர்ச்சியாக பெய்யும் கன மழையினால் 202 குடும்பங்களை சேர்ந்த 647பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனிடம் ஆதவன் செய்தி பிரிவு தொடர்புகொண்டு வினவியது. இதன்போது அவர் தெரிவித்துள்ளதாவது,  “கடந்த மூன்று  நாட்களாக பெய்த அடை மழையினால் ஆறுகள் மற்றும் சிறிய குளங்கள் உடைப்பெடுத்திருந்தன மேலும் இம்மழையினால் 202 குடும்பங்கள்...
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பருப்புக்கடந்தான் கிராம அலுவலர் பிரிவில் உள்ள காட்டுப் பகுதியில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் உள்ளாடையுடன் ஆண் ஒருவரின் சடலத்தை அடம்பன் பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த காட்டுப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலத்தை கண்ட அப்பிரதேச மக்கள் அடம்பன் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அடம்பன் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். குறித்த ஆணின்  சடலம் உள்ளாடையுடன் காணப்படுவதோடு,அவருடைய...
மகளிர் உலகக் கிண்ண டி20 தொடரின் முதல் ஆட்டத்தில், இந்திய அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. மேற்கிந்திய தீவுகளில் மகளிர் உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. தொடக்க வீராங்கனைகளான தானியா பாட்டியா(9), மந்தனா(2) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். பின்னர் வந்த ஜெமிமா ரோட்ரிகஸ்...
நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் நம்மை பற்றி தெளிவாக சொல்ல கூடும். அது ஒரு சிறு உறுப்பாக இருக்கலாம், அல்லது பெரிய உறுப்பாகவும் இருக்கலாம். அந்த வகையில் நம்மை பற்றி நம் நகங்களும் பேசுகிறது என்றால் எவ்வளவு ஆச்சரியமான விஷயமாகும். நமது நகங்கள் ஒவ்வொன்றும் மிக முக்கியமானதாக உள்ளது. விரல்களில் எந்த வித பாதிப்பும் இல்லாதவாறு நம் நகங்கள் தான் பாதுகாக்கிறது. நகங்கள் ஒரு சிறந்த பாதுகாப்பாளனாக திகழ்கிறது. எப்படி...
சிவகார்த்திகேயன் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் அர்ஜுனும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதுடன், அவருக்கு வில்லன் கதாபாத்திரம் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சீமராஜா’ படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் மற்றும் ராஜேஷ்.எம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘இரும்புத்திரை’ பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை முடித்த பின்னரே...
முதலாம் உலகப் போர் முடிவின் நூறாவது ஆண்டை நினைவுகூரும் வகையில் நாளை கனடா முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான இடங்களில் மணிகள் ஒலிக்கப்பட வேண்டுமென கனேடிய அரச படைப்பிரிவுகளும், முன்னாள் படையினர் விவகார அமைச்சும் வேண்டுகோள் விடுத்துள்ளன. முதலாம் உலகப்போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டமை அறிவிக்கப்பட்டவுடன் ஐரோப்பா முழுவதும் உள்ள தேவாலயங்களில் மணிகள் ஒலிக்கப்பட்டன. குறித்த அந்த நிகழ்வினை நினைவுகூரும் வகையிலேயே நாளை கனடாவில் உள்ள தேவாலயங்கள், மத வழிபாட்டு இடங்கள், சமூக மையங்கள்...
லெய்செஸ்டர் சிற்றி கழகத்தைச் ​சேர்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள், அண்மையில் உலங்கு வானூர்த்தி விபத்து இடம்பெற்ற விளையாட்டரங்குக்கு அருகில் அஞ்சலி பேரணியொன்றை நடத்தியுள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த கழகத்தின் உரிமையாளர் விச்சாய் சிறிவத்தனபிரபா உள்ளிட்ட 5 பேருக்கு இதன்போது அஞ்சலி செலுத்தப்பட்டது. சுமார் 5000 ரசிகர்கள் இதில் கலந்து கொண்டதுடன் ஜூபிலி சதுக்கத்திலிருந்து, கிங் பவர் விளையாட்டரங்கம் வரை பேரணியாக சென்றனர். இதனிடையே, மைதானத்திற்கு முன்பாக கழக உரிமையாளர் விச்சாயின் சிலையொன்றை அமைப்பதற்கும் கழகத்தினால் நேற்று...
அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகளுக்கு, இனி தஞ்சம் கோர உரிமை இல்லை என டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள அட்டர்னி ஜெனரலான மேத்யூ விடேகர் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு தலைவர் கிறிஸ்டீன் நீல்சன் ஆகியோரால், வெளியிடப்பட்டுள்ள புதிய விதியின்படி, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறித்த கூட்டறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘நாட்டிற்குள் சட்டவிரோதமாக அல்லது ஆவணங்கள் இன்றி நுழையும் அனைத்து வெளிநாட்டினரின் வருகையை இடைநிறுத்துவது மற்றும் நாட்டின் குடியேற்றம்...
இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவிய அரசியல் நெருக்கடியை தொடர்ந்து நேற்று நள்ளிரவு பாரளுமன்றம் ஜனாதியால் கலைக்கப்பட்டுள்ளது. யாருக்கு பெரும்பான்மை இருக்கின்றது என்பதை நிரூபிக்க உடனடியாக பாராமன்றத்தை கூட்டுமாறு 121 பாராளுமன்ற உறுப்பினர்களும் உலக நாடுகளும் இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக அழுத்தங்களை கொடுத்து வந்தன. இலங்கை அரசியல் அமைப்பின் 19ஆவது சரத்திற்கு அமைய பாராளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னர் கலைக்க முடியாது என்றாலும், ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல்...