கந்தசஸ்டி விரதம் நேற்று நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் சிறப்பாக ஆரம்பமானது. சூரபத்மனை முருகப்பெருமான் சம்காரம் செய்த காலத்தில் கந்தசஸ்டி விரதம் அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்த விரத காலத்தில் அடியார்கள் உபவாசம் இருந்து முருகப்பெருமானை நினைந்து விரதமிருப்பதுடன் ஆலயங்களில் வழிபாடுகளையும் மேற்கொள்வார்கள். இந்த கந்தசஸ்டி விரதத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு, திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கந்தசஸ்டி விரதம் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது. ஆலயத்தில் விசேட பூஜைகள்...
யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் 12 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் ரீதியாகவும், கூரிய ஆயுதங்களாலும் கொடுமைப்படுத்திய சந்தேகத்தின் பேரில் 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம் பாடசாலைக்கு சென்ற சிறுமி மாலை வரை வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் சிறுமியை தேடியுள்ளனர். இந்த நிலையில் ஊரவர்கள் வழங்கிய சில தகவல்களின் அடிப்படையில்,...
வவுனியாவிற்கு விஜயம் செய்த மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் இந்து விவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, நகரசபை உறுப்பினர் க.சுமந்திரன் பொன்னாடை போர்த்தி திலகமிட்டு வரவேற்றார். வவுனியா வைரவ புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு இன்று இரவு அமைச்சர் சென்ற போதே குறித்த நகரசபை உறுப்பினர், ஆலய நிர்வாகத்தினர், ஆதரவாளர்கள் மலர்லாலை அணிவித்து அமோக வரவேற்பளித்தனர். இதன்போது வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஆதரவாளர்கள் கட்சி கொடியுடன் ஊர்வலமாக அமைச்சர் டக்ளஸ்...
பணம் கொடுத்து சொந்த கட்சியின் உறுப்பினர்களை பாதுகாத்துக் கொள்ளும் நிலைக்கு ஐக்கிய தேசியக் கட்சி இன்று தள்ளப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் உறுப்பினர்கள் சிலர் என்னை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கோரியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி தனது உறுப்பினர்களை பாதுகாத்துக்கொள்ள பணம் கொடுத்து...
எந்தவொரு அழுத்தத்திற்கும் அடிபணிந்து பின்வாங்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். என்னால் கொண்டு வரப்பட்ட தீர்வு தீர்மானங்களை எந்தக் காரணத்திற்காகவும் இடையில் நிறுத்துவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதுவரை ஒரேயொரு துருப்புச் சீட்டு மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளது. என்னிடம் பல துருப்புச் சீட்டுக்கள் உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு ஐக்கிய தேசிய கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஆதரவு வழங்கவில்லை என்றால் அரசியலமைப்பு...
முல்லைத்தீவில் நித்தகைகுளம் உடைப்பெடுத்தமையால் அனர்த்தத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரும் மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள நித்தகைகுளம் நேற்று அதிகாலை உடைப்பெடுத்துள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இதில் சிலர் மீட்கப்பட்ட போதும் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை மீட்பதற்கான நடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த சந்தர்ப்பத்தில் அவர்களை விமானப்படையினர்...
நவம்பர் 7 நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் சமூக சேவைகளோடு நடந்து முடிந்தது. அவரை தாண்டி நேற்று அனுஷ்னா ஷெட்டி, வெங்கட் பிரபு ஆகியோருக்கும் பிறந்தநாள். வழக்கம் போல் வெங்கட் பிரபுவிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வந்தனர். அப்போது எடிட்டர் பிரவீன் KL வெங்கட் பிரபுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதோடு மங்காத்தா 2 எப்போது என்று கேட்டுள்ளார். அதற்கு வெங்கட் பிரபு மாஸ் தகவல் கூறுவார் என்று பார்த்தால்...
பிரபல தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் கல்யாணமாம் கல்யாணம். இந்த சீரியலில் அஜித்தை போலவே இருக்கும் தேஜஸ் நாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு சீரியலில் அம்மாவாக நிஹாரிகா என்பவர் நடித்து வந்தார். அவர் ஏதோ பிரச்சனையால் விலக அடுத்து ஸ்ரீத்திகா என்பவர் நடித்தார். இப்போது இவரும் சீரியலில் இருந்து விலகியுள்ளார், காரணம் என்றும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதாவது அவருக்கு மற்றொரு சீரியலில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம். இரண்டிலும்...
கடவுளால் படைக்கப்பட்டு முழுமையாக செயற்படக்கூடிய உயிர் மனிதனாவான். ஒரு மனிதன் மனிதனாக வாழ்வதற்கு பல வழிமுறைகளையும் அறநெறி கருத்துக்களையும் சமயங்கள் போதிக்கின்றன. அதாவது இந்து சமயம் (பகவத்கீதை) கிறிஸ்தவ சமயம் (பைபிள்) இஸ்லாம் சமயம் (குர் ஆன்) பௌத்தம் (மகாவம்சம்) ஆகும். இவை அனைத்தும் மனிதனுக்கு எண்ணிலடங்காத பல நல்ல கருத்துக்களையும் ஒழுக்க விழுமியங்களையும் எடுத்தியம்புகின்றன. ஆனால் ஒரு மனிதன் மனிதனாக வாழ இப்போதனைகளும் கருத்துக்களும் வழிவகுக்கின்றன. இவ்வாறு ஒவ்வொரு...
உலக தரவரிசையில் டாப்–8 இடங்களில் உள்ள வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. உலக டூர் இறுதி சுற்று டென்னிஸ் போட்டி லண்டனில் வருகிற 11–ந்தேதி முதல் 18–ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் விளையாட தகுதி பெற்றிருந்த 2–ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) விலகுவதாக அறிவித்துள்ளார். வலது கால் முட்டியில் அடைந்த காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்....