வவுனியா – இலுப்பைக்குளத்தில் பத்தடி நீளமான முதலை ஒன்று வனஜீவராசி திணைக்களத்தினால் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, இன்று(வியாழக்கிழமை) காலை ஆறு மணியளவில் வவுனியா – இலுப்பைக்குள வீதியில் குறித்த முதலை காணப்பட்டுள்ளது. அப்பகுதியில் குறித்த முதலயை அவதானித்த வயோதிபர் அப்பகுதி இளைஞர்களிற்கு தகவலை வழங்கியுள்ளார். இதனை அடுத்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து முதலையை பிடிப்பதற்கு முற்பட்ட வேளை அவர்களை முதலை தாக்க முற்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த இளைஞர்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும், பொலிஸாருக்கும்...
20க்கு 20 கிரிக்கெட் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த இந்தியர் பட்டியலில் விராட் கோலியை முந்தி சாதனை படைத்தார் ரோஹித் சர்மா. 20 ஓவர் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய வீரர் என்ற பட்டியலில் விராட் கோலி முதல் இடம் பிடித்துள்ளார். இவர் 2,102 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இந்நிலையில், இந்தியா-–மேற்கிந்திய தீவு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உ.பி.யின் லக்னோவில் புதிதாக கட்டப்பட்ட அடல்...
பாரிசில் உள்ள ஈபிள் கோபுரத்தில் முதன் முதலாக பயன்படுத்தப்பட்ட, இரும்பிலான பழைய படிக்கட்டு இம்மாதம் ஏலத்துக்கு வர உள்ளது. கடந்த 1889ஆம் ஆண்டு பிரான்சின் பாரிஸ் நகரில் ஈபிள் கோபுரம் அமைக்கப்பட்டபோது, உருவாக்கப்பட்ட இரும்பிலான படிக்கட்டுகள் தற்போது சோம்ப்ஸ்- எலிசே அருகேயுள்ள கட்டிடம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது. முதன் முதல் ஈபிள் கோபுரத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த படிக்கட்டுகள், இரண்டாவது தளத்தில் இருந்து மூன்றாவது தளத்திற்கு ஏறுவதற்குரிய படிக்கட்டாக இருந்தது. நான்கு மீட்டர்களுக்கு மேற்பட்ட உயரத்தினையும்,...
வீடியோ கேம் ஒன்றை பயன்படுத்தி இளவயது பிள்ளைகளை பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கும் புதிய ஒரு அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கனடா பொலிசார் முயன்று வருகின்றனர். Montreal பகுதியில் இதுவரை நான்கு வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், ஆன்லைன் வீடியோ கேம் ஒன்றை பயன்படுத்தி இளவயது பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோக திட்டம் ஒன்றிற்குள் சிக்க வைக்க முயலும் மனித மிருகங்களைக் குறித்து பொலிசார் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். Fortnite எனப்படும் ஒரு ஆன்லைன் விளையாட்டை...
நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கியதாக நாடளாவிய ரீதியில் இருந்து சுமார் 225 பாடசாலைகளுக்கு 8 மில்லியன் ரூபா பெறுமதியான 7680 கடின பந்துகள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. இலங்கை கிரிக்கெட் நிறுவனமும், இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கமும் இணைந்து ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் இவ்வாறு பாடசாலைகளுக்கு கடின பந்துகளை பகிர்ந்தளிக்கும் செயற்றிட்டத்தை கடந்த 2013ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்துவருகின்றது. இதன் ஓர் அங்கமாக,பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில்...
ரசிகரை நாட்டை விட்டு வெளியேறுமாறு விராட் கோஹ்லி கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரது இந்த செயல் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தனது ரசிகர் ஒருவருக்கு அளித்த பதில் சர்ச்சைக்குள்ளானது. அதாவது, ரசிகர் ஒருவர் தனக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களை விட இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய வீரர்களின் ஆட்டத்தை காணவே பிடிக்கும் என கூறியிருந்தார். இதனைப் பார்த்த கோஹ்லி, அந்த ரசிகரை...
பிரித்தானியாவைச் சேர்ந்த நீச்சல் வீரர் ரோஸ் எட்ஜ்லி, கடந்த 5 மாதங்களாக கடலில் நீந்தியதன் மூலம் கின்னஸ் சாதனையில் இணைய உள்ளார். பிரித்தானியாவில் உள்ள கிரேட் பிரிட்டன் எனும் தீவு கடலில், கடந்த ஜூன் 1ஆம் திகதி முதல் ரோஸ் எட்ஜ்லி(33) நீந்த தொடங்கினார். கின்னஸ் சாதனைக்காக இந்த முயற்சியை தொடங்கிய இவர், தினமும் 6 முதல் 12 மணி நேரம் கடலில் நீந்தியபடி இருந்தார். நீந்தும் நேரம் தவிர மற்ற...
அமெரிக்காவின் அரசு தலைமை வழக்கறிஞராக பதவி வகித்த ஜெஃப் செஸ்ஸன்ஸ் டொனால்ட் ட்ரம்பின் வேண்டுகோளுக்கிணங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், அட்டார்னி ஜெனரல் ஜெஃப் செஷன்ஸின் சேவைக்கு நாங்கள் அவருக்கு நான்றி கூறுகின்றோம். அவரது எதிர்காலத்துக்கு எங்களின் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். இது குறித்து தனது இராஜினாமா கடிதத்தில் செஷன்ஸ், பதவி விலகல் முடிவு எனது சொந்த முடிவு அல்ல. உங்களின்...
ஆப்பிரிக்காவின், கேமரூன் நாட்டில் பாடசாலையொன்றிலிருந்து தீவிரவாதிகளினால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 78 பாடசாலை மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கேமரூனின் வடமேற்கு பகுதியின் தலைநகரான பமெண்டா அருகே நீவின் என்ற கிராமத்தில் உள்ள ஒரு மேல் நிலை பாடசாலையில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகளினால் 10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 78 மாணவர்கள், ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் வாகன சாரியொருவர் கடந்த திங்கட்கிழமை கடத்தப்பட்டனர். கடத்தப்பட்டவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர்? எதற்காக கடத்தப்பட்டார்கள்...
சிம்பாப்வேயில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 47 பேர் உயிரிழந்துள்ளனர். சிம்பாப்வேயின் தலைநகரான ஹராரேயிலிருந்து ருசாபே நகருக்கு செல்லும் சாலையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்து இடம்பெற்றதும் இது பற்றி பொலிஸார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் அதிகாரியொருவர், இந்த விபத்தில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், பலர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்...