யாழ். நகரத்தில் சட்டவிரோதமாகக் குப்பைகள் கொட்டுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வர்ண ஜெயசூரிய அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய கேட்போர் நேற்று இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பான கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், யாழ். நகரத்தின் பிரதான வீதிகளான ஸ்ரான்லி றோட், கே.கே.எஸ் வீதி மற்றும் பிரதான வீதி உட்பட...
ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் அங்குலான பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். இவரிடமிருந்து 75 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் ஹெரோயின் போதைப் பொருளின் பெறுமதி 10 இலட்சம் ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் இவரிடமிருந்து நான்கு அதி சொகுசு வாகனங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை  மாவட்டத்திலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும். நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய...
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீதிகளில் தூங்கும் கட்டாக்காலி மாடுகளால் விபத்துக்கள் ஏற்படக் கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையிடம் சுட்டி காட்டிய போதும் ஆக்கபூர்வமான  நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மழை தொடங்கியுள்ள நிலையில் நெளுக்குளம், இராசேந்திரங்குளம், பாரதிபுரம், குளுமாட்டுச்சந்தி, உக்கிளாங்குளம், கூமாங்குளம் போன்ற வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட...
ஹெரோயின் போதைப் பொருளுடன் கொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரிடமிருந்து 500 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் போதைப்பொருளின் பெறுமதி 6 மில்லியன் ரூபாவாகும் எனவும் இவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில்  கடந்த இருபத்திநான்கு மணித்தியாலத்தில் பெய்த   மழை காரணமாக கிளிநொச்சியில் உள்ள அனைத்துக் குளங்களினதும் நீர்மட்டம் திடீர் என அதிகரித்துள்ளது. கிளிநொச்சியில் பாரிய நீர்ப்பாசனக் குளங்கள் நான்கும் இடை நிலை நீர்ப்பாசனக் குளங்கள் ஐந்தும் உள்ள நிலையில் திடீர் நீர்மட்டம் அதிகரிப்பினால் இடை நிலை நீர்ப்பாசனக் குளங்களான கனகாம்பிகை குளம் , வன்னேரிக்குளம்  என்பன வான் பாய்கிறது காலநிலை தொடர்ந்து இவ்வாறு செல்லுமானால் கிளிநொச்சியில் உள்ள மீதி ஏழு...
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் புதிய காத்தான்குடி-06, அன்வர் பள்ளி வீதியைச் சேர்ந்த ஏ.எல்.எம். அனீஸ் (வயது 39) என்பரே  உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது வீட்டு வளாகத்தில் மின் விளக்கு பொருத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்து மின்சாரத்துடன் தொடர்பு வயர் வீட்டு முற்றத்தில் தேங்கிக் கிடந்த மழைநீரில் தொடர்புபட்டு இவர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. பாதிக்கப்பட்டவரை உடனடியாகவே காத்தான்குடி ஆதார...
வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வவுனியா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு எதிராக இன்று (05) முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியாவில் ஆவா குழுவுக்கு அதரவாக துண்டுப்பிரசுரம் வினியோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு நீதிமன்றத்தினால் இன்று (05) பிணையில் விடுதலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் இம்மானுவேல் தர்சனால் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது. வவுனியா பொலிசார் தகுந்த ஆதாரங்கள் இன்றி கைது செய்து முறையற்ற விதத்தில்...
உகாண்டா நாட்டிலேயே அதிக குழந்தைகளை பெற்றெடுத்த பெண்மணி மரியம் நபடான்ஸி ஆவார். முகோனோ மாவட்டத்தில் வசித்து வரும் இப்பெண்மணி வாழ்நாளில் 18 ஆண்டுகள் பிரசவ காலத்திலேயே கழிந்துவிட்டது. 40 வயதான இவருக்கு 44 குழந்தைகள்! இவற்றில் 6 இரட்டைக் குழந்தைகள், 4 முறை மூன்று குழந்தைகள், 3 முறை நான்கு குழந்தைகள், 8 தனிக் குழந்தைகள் என்று பிரசவித்திருக்கிறார். 44 குழந்தைகளில் தற்போது 38 குழந்தைகள் உயிருடன் இருக்கின்றனர். நரகமாய் அமைந்த வாழ்க்கை சிற்றன்னையின் பராமரிப்பில்...
யாழ். கல்வியங்காடு பகுதியில் தீபாவளி தினத்தன்று வழிபாட்டுக்காக ஆலயங்களுக்கு சென்ற மூன்று பெண்களிடம் இருந்து தாலிக்கொடி உட்பட 18 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்வியங்காடு பேச்சியம்மன் ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு சென்று வீடு திரும்பிய பெண்ணிடம் இருந்து மோட்டார்சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் 13 பவுண் தாலிக் கொடியினை அறுத்து கொண்டு தப்பியோடியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தாலிக் கொடியை பறிகொடுத்த பெண் கோப்பாய்...