இந்தியாவின், தமிழகத்தில் நேரக் கட்டுப்பாட்டினை மீறி தீபாவளி நாளில் பட்டாசு வெடித்த குற்றச்சாட்டின் கீழ் 1534 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இம் முறை தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க இந்திய உச்ச நீதிமன்றம் காற்று மாசுபடுவதை கருத்திற் கொண்டு தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மாத்திரம் அனுமதி வழங்கியது.
இந் நிலையில் தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணிவரையும், இரவு 7 மணிமுதல்...
இலங்கையிலிருந்து மலேசியா கோலாலம்பூருக்கு தனது மலவாயிலில் மறைத்து வைத்து மாணிக்க கற்களை கடத்தி செல்ல முயற்சித்த நபரொருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க பிரிவின் ஊடக பேச்சாளர் சுனில் ஜெயரத்ன தெரிவித்தார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் பேருவளையைச் சேர்ந்த 43 வயதுடைய ஆணொருவர் ஆவார்.
தனது பயணப் பொதியில் மற்றும் மல வாயிலில் மாணிக்க கற்களை மறைத்து வைத்து இவர் விமானத்திற்குள் எடுத்து செல்ல முற்படுகையிலேயே சுங்க பிரிவினரால்...
அஜித்தின் விஸ்வாசம் படம் தமிழ் சினிமா ரசிகர்களின் அடுத்த டார்க்கெட் படம். தல என்றாலே ஸ்பெஷல் தான், அவரையும் ரசிகர்கள் எப்படியெல்லாம் கொண்டாடுவார்கள் என்று சொல்லி மாலாது.
சிவாவுடன் நான்காவது முறையாக அஜித் கூட்டணி அமைத்துள்ளார், படமும் கிராமத்து பின்னணியில் வீரம் பட டச்சில் இருக்கும் என்று தகவல்கள் வருவதால் தல ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.
இந்த நேரத்தில் விஸ்வாசம் படப்பிடிப்பில் ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது. நடன கலைஞர் சரவணன் என்பவர்...
பிரபலங்களின் குழந்தைகள் பற்றி அரிய ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது வழக்கம் தான். அந்த வகையில் விஜய்-அஜித் இருவருமே கேமராவில் தங்களது குழந்தைகளை அதிகம் காட்டுவது இல்லை.
ஆனால் எப்படியோ அவர்களை பற்றிய விஷயங்கள் சமூக வலைதளங்களில் பரவி விடும். அஜித்தின் மகன் ஆத்விக்கின் புகைப்படங்கள் அவ்வளவாக வெளியானது இல்லை. அஜித்தின் குடும்பம் எங்கேயாவது வெளியே செல்லும் போது ரசிகர்கள் புகைப்படம் எடுத்தால் தான் உண்டு.
அப்படி அண்மையில் ரசிகர்களின் பார்வையில் விழுந்திருக்கிறார்...
(மன்னார் நகர் நிருபர்)
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது 102 வது நாளாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. தொடர்ச்சியாக மழை பெய்கின்றபோதும் மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டும், அப்புறப்படுத்தப்பட்டும் வருகின்றது.
மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி T.சரவண ராஜா மேற்பார்வையிலும், சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையிலும் அகழ்வு பணியானது இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் இன்றய தினம் மனித புதைகுழி வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த சட்டவைத்திய அதிகாரி,...
யாழ்.நெடுந்தீவு, கிழக்கு கரையோரப்பகுதிகள் வெகுவாக கடலரிப்புக்குள்ளாகி வருவதனால் கரையோர வீதிகள், குடியிருப்புக்கள் பாதிக்கப்படுவதாக கரையோர மக்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்.நெடுந்தீவு பிரதேசத்தின் கிழக்கு கரையோரப்பகுதிகள் மிக வேகமாக கடலரிப்புக்கு உள்ளாகி வருகின்றன.
இதனால் கரையோர வீதி முழுதாக சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதுடன், வழிபாட்டு இடங்களும் கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளது.
தற்போது பிடாரி அம்மன் கோயில் முதல் காள்வாய் முனை வரைக்குமான பகுதிகள் இவ்வாறு கடலரிப்புக்கு உள்ளாகி வருவதாவும் இதனால் கரையோரப்பகுதிகளில் வாழும் மக்கள்...
வவுனியாவில் நேற்று காலை முதல் பெய்து வரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டம் பல மாதங்களாக கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில் நேற்று காலையில் இருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் தீபாவளி கொண்டாட்டங்களும் களை கட்டவில்லை என்றும், வீதிகளிலும் மக்கள்...
பொதுவாகவே ஏற்றுமதி செய்யப்படும் மீன் வகைகளில் நச்சு தன்மையுள்ள, நச்சு தன்மையற்ற மீன் இனங்கள் என அதிக இருக்க வாய்ப்புள்ளது.
மீன்கள் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை தரும். வைட்டமின் டி, புரத சத்துக்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை அதிகம் உள்ளதால் உடலுக்கு வலிமை தரும். அத்துடன் ஊட்ட சத்து குறைபாடுகள் வராமல் காக்கும்.
இருப்பினும் நச்சு தன்மை கொண்ட இந்த மீன்களை உண்டால் உடலுக்கு பல்வேறு பிரச்சினைகள்...
நூற்றுக்கணக்கான வருடங்களாக மனிதர்களும், நாய்களும் ஒருங்கிணைந்த வாழ்வைப் பின்பற்றி வருகின்றன.
வேட்டையாடுதல், காவல் செய்தல், மோப்பம் பிடித்தல் போன்ற பல்வேறு தேவைகளுக்காக நாய்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
இவ்வாறான தேவைகளை அடிப்படையாகக் கொண்டு ஜப்பானிலுள்ள Tohoku பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நவீன நாய் ரோபோவை உருவாக்கியுள்ளனர்.
இதற்கு மின்விளக்கு, கமெராவுடன் கூடிய விசேட ஆடை ஒன்றை அணிவித்துள்ளனர்.
இவற்றின் உதவியுடன் எந்த இடத்தை சென்றடைய வேண்டும் என்பதை ரோபோ அறிந்துகொள்கின்றது.
பரிசோதனை முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகரமாக செயற்பட்டு விஞ்ஞானிகளை...
இந்த வருடம் ஆப்பிள் நிறுவனம் தனது புத்தம் புதிய கைப்பேசியான iPhone XR இனை அறிமுகம் செய்திருந்தது.
சிறிய அளவிலான தொழில்நுட்ப மாற்றங்களோடு அறிமுகமான இக் கைப்பேசிகள் பயனர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றிருந்தன.
எனினும் இக் கைப்பேசிகளை மேலும் வடிவமைப்பதை ஆப்பிள் நிறுவனம் நிறுத்தவுள்ளதாக நேற்றைய தினம் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்திற்கு Foxconn மற்றும் Pegatron ஆகிய நிறுவனங்களே ஐபோனை அசெம்பிள் செய்து கொடுகின்றன.
இந்நிறுவனங்கள் iPhone XR கைப்பேசியினை அசெம்பிள்...