சமுத்திரங்களில் வாழும் திமிங்கிலங்கள் எளிதில் கண்ணில் படுவது இல்லை.
அவை ஆழமான பகுதிகளில் வாழ்வதே இதற்கு காரணமாகும்.
எனினும் இரை தேடியும், சுவாசிக்கவும் சமுத்திரங்களின் மேற்பகுதிக்கு வரும்.
இதன்போதே காணக்கிடைப்பதுடன், ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படும்.
எனினும் முதன் முறையாக திமிங்கிலங்களை எந்த நேரத்திலும் பார்க்கக்கூடிய மாற்றுவழி ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதன்படி செயற்கைக்கோள்களின் உதவியுடன் அவதானிக்கும்போது திமிங்கிலங்கள் தெளிவாக தென்படுகின்றன என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் மற்றும் பிரித்தானியாவின் அந்தாட்டிக் சர்வே அமைப்பு என்பவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்தே...
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய வீரர் ரோஹித் ஷர்மா அதிரடியாக 111 ஓட்டங்கள் விளாசி, அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
அவர் 61 பந்துகளில் 7 சிக்சர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 111 ஓட்டங்கள் அடித்ததால், சர்வதேச டி20 போட்டிகளில் 2203 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதன்மூலம் சர்வதேச அளவிலும் அதிக ஓட்டங்கள் எடுத்த 2வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில்,...
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இலங்கை வீரர் ரங்கனா ஹெராத் புதிய சாதனை படைத்துள்ளார்.
இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது.
அந்த அணியின் ஜோ ரூட் 35 ஓட்டங்களில் இருந்தபோது, இலங்கை வீரர் ரங்கனா ஹெராத் அவரை போல்டாக்கினார். இது காலே மைதானத்தில் ஹெராத் வீழ்த்தும்...
ஜோசியம், ஜாதகம் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடைய நாடே நம்முடையது. இதில் சிலவற்றை மூட நம்பிக்கைகளாக கருதினாலும் கூட, அதன் மீது பலரும் அதிகளவிலான நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். அனைத்து விதமான புது முயற்சிகளும், நாள் நட்சத்திரம் பார்க்கும் கூட்டமும் இங்கே அதிகம். குழந்தை பிறந்தவுடன், அது பிறந்த தேதி, நாள், நட்சத்திரத்தைப் பொறுத்து தானே குழந்தைக்கு பலரும் பெயரே தேர்ந்தெடுக்கின்றனர்.
ஜாதகத்தை பொறுத்து தான் பல பெயர்கள் வைக்கப்படுகிறது. ஜாதகத்தின் படி...
உயிருக்கு உயிராக நேசித்த காதலனைத் தேடி மலேசிய இளம்பெண் ஒருவர் தமிழகம் வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் பணிபுரியும் மெனேகா என்பவரே தமிழகத்தின் வெல்லூர் பகுதியை சேர்ந்த பசவராஜுவை தேடி தமிழகம் விரைந்தவர்.
மலேசிய நாட்டவரான 34 வயது மெனேகா சிங்கப்பூரில் பணிபுரியும்போது 32 வயதான பசவராஜுவை சந்தித்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தாயாரான மெனேகா பேஸ்புக் வழியாக பசவராஜுவுடன் அறிமுகமாகியுள்ளார்.
பின்னர் இருவரும் ஒரே குடியிருப்பில் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். உறவினர்கள் திருமணத்திற்கு நிர்பந்திப்பதாக...
ஜேர்மனியில் நிறுவனம் ஒன்றில் 100 கழிவறைகள் வரை காணாமல் போன சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜேர்மன் நிறுவனம் ஒன்றில் தொடர்ந்து போர்ட்டபிள் கழிவறைகள் காணாமல் போய்க்கொண்டே இருந்தன.
பொலிஸ் விசாரணையில் அதே நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர், அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர், என இருவர் அந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இருவருக்கும் Duesseldorf மாகாண நீதிமன்றம் நேற்று தண்டனை வழங்கியது.
அந்த நிறுவனத்தில் பணி...
ஒரு சில தெலுங்கு சினிமாக்களில் நடித்துள்ள ஸ்ரீ ரெட்டி, சில காலமாக தெலுங்கு திரைப்பட ஹீரோக்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோர் மீது குற்றம் சாட்டி பேட்டி அளித்து வந்தார்.
தெலுங்கு திரை உலகில் நடிகைகள் ஜாதி பிரச்சனை, பாலியல் தொல்லை ஆகியவற்றை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அரைநிர்வான போராட்டம் நடத்தினார்.
மேலும் பேட்டியலில் அவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல், அவலங்கள் பற்றி அவர் பேசினார். இதனால் பரபலாமான அவருக்கு...
ஆப்கானிஸ்தான் நாட்டில் வடகிழக்கு மாகாணத்தில் பன்சீர் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்து சில நாட்களே ஆன நிலையில் 12 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்னும் சில குழந்தைகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
ஏற்கனவே 12 குழ்ந்தைகள் இறந்துள்ள நிலையில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.இதுகுறுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நோய் மேலும் பரவாமலிருக்கவே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் 12 ம் குழந்தைகள்...
‘உத்தரவு மகாராஜா’ படத்தைத் தயாரித்து நடித்திருக்கும் உதயா, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி ஆகியோரின் படங்களின் வெளியீடுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உதயா நடித்து தயாரித்து இருக்கும் ‘உத்தரவு மகாராஜா’ படம் நவம்பர் 16-ம் திகதி வெளியாகிறது. இதில் பிரபு, உதயா, ஸ்ரீமன், மனோபாலா, பிரியங்கா, ஆடம்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையிலேயே படத்தின் நாயகன் உதயா, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி ஆகியோருக்கு ஒரு கோரிக்கையை...
நாட்டில் மழையுடன் கூடிய கால நிலை நிலவிவருவதால் மட்டக்களப்பில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திலேயே மட்டக்களப்பு பாசிக்குடாவில் 342.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.