பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குயின்ஸ் பெரி தோட்டத்திலுள்ள நீரோடையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (07-11-2018)  காலை மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் 41 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையென அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நபர் தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் செல்லும் வழியில் பாலமொன்றை கடக்க முற்பட்ட போது தவறி வீழ்ந்து மரணம் நிகழ்ந்திருக்கலாமென பிரதேசவாசிகள் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்றிரவு (06-11-2018) இடம்பெற்றுள்ளது நீரோடையில் சடலம் இருப்பதை கண்ட...
பொதுவாக வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் என்று அடிக்கடி சொல்லுவார்கள். இருப்பினும் இது ஓரளவுக்கு உண்மையும் கூட. இதன் சுவை என்பது அது சமைக்கப்படும் முறையை பொறுத்தது. ஏனெனில் வெண்டைக்காய் பிடிக்காதவர்கள் பலர் இருக்கிறார்கள். இதற்கு பதிலாக நாம் தினமும் வெண்டைக்காய் சாறு குடிப்பதனால் நம் உடலில் பல்வேறுப்பட்ட நோய்களை அடியோடு அழிக்க உதவி புரிகின்றது. வெண்டைக்காய் சாறை பருகுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்பதை பார்க்கலாம். தொண்டைப்புண் சாறு...
பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சர்களுக்குப் பதிலாக சீருடைத் துணிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சர்களுக்குப் பதிலாக சீருடைத் துணிகள் வழங்கும் நடவடிக்கை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, பாடப்புத்தகங்கள், மாணவர்களுக்கான காப்புறுதி முறைகள் தொடர்பில் அமைச்சரவையுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஆக்கபூர்வமான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
சர்கார் எதிர்ப்பார்ப்பின் உச்சத்தில் இருந்த படம். தீபாவளியான நேற்று வெளியாகி எல்லா இடத்திலும் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. படம் எப்படி, என்ன கதை எல்லாம் பார்த்தாச்சு, அடுத்து என்ன சர்கார் படத்தின் கலெக்ஷன் விவரங்கள் தான். படத்தின் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் முதல் நாள் சர்கார் எவ்வளவு வசூல் என்ற விவரத்தை ஏற்கெனவே கூறியிருந்தோம். இப்போது சென்னையை பொறுத்தவரையில் முதல் நாளில் மட்டும் ரூ. 2.31 கோடி வசூல்...
சூடான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து குடித்தால் அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களை தடுக்க உதவுகின்றன. மேலும் தினமும் இதை காலையில் வெறும் வயிற்றில் தவறாமல் குடித்து வந்தால் நமது உடலுக்கு தேவையான ஆரோக்கியம் கிடைக்கும். சூடான நீரில் எலுமிச்சை உப்பு கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தினமும் காலை எலுமிச்சை நீரில் உப்பு கலந்து பருகுவதால் நாவில்...
தமிழ் சினிமாவில் மட்டுமில்லாது தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளிலும் கலக்கியவர் நடிகை ரம்பா. இவர் 2010ம் ஆண்டு இந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டு சினிமா பக்கம் வராமல் இருந்தார். பின் நடுவில் பிரச்சனையால் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த ரம்பா இப்போது ஒன்றாகிவிட்டார். அதோடு மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருந்த அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தனது மகனின் புகைப்படங்களை முதன்முதலாக வெளியிட்டுள்ளார். இரண்டு மகள்கள், கணவர்...
விண்டிஸ் கிரிக்கெட் அணி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி-20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, இந்தியா சென்றுள்ள விண்டிஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர்களில் விளையாடுகின்றது. இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியக் கிரிக்கெட் அணி, 2-0 என்ற கணக்கில் முழுமையாக...
இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில்  இங்கிலாந்து அணியின் அறிமுக வீரர் பென்போக்ஸ் சதமடித்துள்ளார். காலியில் இடம்பெறும் முதலாவது டெஸ்டில் அவர் சதம் பெற்றுள்ளார் இரண்டாவது நாளான இன்று பென்போக்ஸ் 202 பந்துகளில் 107 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி திணறிக்கொண்டிருந்தவேளை அவர் சாம் குரான் அடில் ரசீட் ஆகியவர்களுடன் இணைந்து இங்கிலாந்து அணியை பலப்படுத்தினார். சாம் குரானுடன் இணைந்து 88 ஓட்டங்களை பெற்ற பென்போக்ஸ் பட்லருடன் இணைந்து 61 ஓட்டங்களையும் அடில் ரசீத்துடன்...
பெரு நாட்டில் பயணிகள் பஸ் ஒன்றும் லொறியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். பெரு நாட்டின் புனோ பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் பணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தபோது வேகமாக வந்த லொறி வேக கட்டுப்பாட்டை இழந்து பஸ் மீது மோதியே குறித்த விபத்து சம்பவத்துள்ளது. இதனால் ஒரு குழந்தை மற்றும் 12 பெண்கள் உட்பட 18 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் 39 பேர்...
நீர்கொழும்பு பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்தனர். நீர்கொழும்பு, கொச்சிக்கடை, பொருதொட்ட பகுதியில் வைத்தே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்து 25 மில்லியன் ரூபா பெறுமதியான 2.6 கிலோ கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.