ஐக்கிய நாடுகள் அமைப்பின் 73ஆவது பொதுச்சபை கூட்டத் தொடரில் உரையாற்றிய பின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் மனோ கணேசனை சந்தித்துள்ளார். “அமைச்சர் மனோ கணேசன் அவர்களே, என் உரையில் சர்ச்சை எதுவும் இல்லை தானே! இப்போது திருப்திதானே?” என அமைச்சர் மனோ கணேசனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுள்ளதாக அமைச்சர் தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அமைச்சர் மனோ கணேசன் அவர்களே, என்ன, என் உரையில் சர்ச்சை எதுவும்...
5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தியாகி திலீபன் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். இவருடைய 31ஆவது நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இதை முன்னிட்டு யாழ்.நல்லூரில் இவர் உயிரிழந்த இடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இரு இளைஞர்கள் தென்மராட்சி பகுதியிலிருந்து தூக்கு காவடி எடுத்து வந்து தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர். இதை பார்த்த அனைவரது கண்களிலும் கண்ணீர் வடிந்ததுடன், மிகவும் உணர்வுபூர்வமான நிகழ்வாக இது அமைந்துள்ளது. மேலும் இவர் உயிரிழந்த நேரமான...
-மன்னார் நகர் நிருபர்-   தியாக தீபம் திலிபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று புதன்கிழமை(26) மன்னாரில் இரு இடங்களில் அனுஸ்ரிக்கப்பட்டுள்ளது. தியாக தீபம் திலிபன் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் நகர மண்டபத்தின் கேட்ப்போர் கூடத்தில் தியாக தீபம் திலிபனின் 31 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இடம் பெற்றது. காலை 10.48 மணியளவில் தியாக தீபம் திலிபனின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி,மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்...
  சமகால அரசியல் பார்வையில் சமூக ஆர்வலர்கள் இருவரின் காரசாரமான கருத்து - சமகால ஆர்ப்பாட்டங்களின் மூலம் தமது கட்சியை வளர்க்கும் நோக்கிலேயே அரசியல் கட்சித் தலைவர்கள் செயற்படுகிறார்கள். EPDP அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியது தவறு.  வவுனியாவில் முஸ்லீங்கள் பள்ளிவாசலுக்கு அருகில் 40 மேற்பட்ட கடைகளை சட்டவிரோதமாக கட்டிவைத்துள்ளார்கள் என்று ஆர்ப்பாட்டம் நடந்தது கடைசியில் இன முறுகல்தான் ஏற்ப்பட்டது எந்த UC தலைவர்களாலும் அதற்க்கான தீர்வை பெற்றுக்கொடுக்க...
-மன்னார் நகர் நிருபர்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சுமார் 12 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அதி நவீன தொழில் நுற்ப வசதிகளுடன் அமைக்கப்பட்ட விசேட சத்திர சிகிச்சை நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை(25) காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசிலன் வைபவ ரீதியாக திறந்துவைத்தார். அதனைத் தொடர்ந்து OpenE நிறுவனத்தின் பங்களிப்பில் அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட'‘My...
(மன்னார் நகர் நிருபர்) மன்னார் மாவட்ட நீர்பாசன பணிப்பாளர் குமாரதேவன் அவர்களின் தலைமையில் உலக நதிகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு (25)காலை பத்து மணியளவில் மன்னார் மாவட்ட நீர்ப்பாச திணைக்களத்தின் ஏற்பாட்டில் நானாட்டான் அருவி ஆற்றங்கரையில் நதிகளை சுத்தப்படுத்தி பாதுகாப்பது தொடர்பான நிகழ்வு நடைபெற்றது. குறித்த நிகழ்வில் வன்னிமாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை ஆற்றும் போது, ஆறுகள் நதிகள் என்பன இயற்கை நமக்களித்த ...
-மன்னார் நிருபர்-   முக்கிய சேவைகளாக இருக்கின்ற சுகாதாரம்  மற்றும் கல்வி ஆகிய இரு துறைகளிலும் கூட  நிதிகளை மக்களின் தேவைகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்கின்ற போது, சரியான தேவைகளை அறிந்து சரியான முறையில் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை என வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சுமார் 12 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அதி நவீன தொழில் நுற்ப வசதிகளுடன் அமைக்கப்பட்ட விசேட...
வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விதைநெல் அல்லது அதற்கான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தபோதும் இதுவரை அவர்களிடமிருந்து எவ்விதமான பதில்களும் கிடைக்கவில்லை என வட மாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தெரிவித்துள்ளார்.   அத்துடன் கடந்த மூன்று வருடங்களாக வடக்கு மாகாணத்தில் நிலவும் வரட்சி காரணமாக விவசாயச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான பாதிப்புக்களால் தமக்கான விதைநெல் இல்லாத நிலையில் பெருமளவான விவசாயிகள் காணப்படுகின்றன. தற்போது...
எங்கள் பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக் கொள்ள விடுங்கள். இதில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபை அமர்வில் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத் தொடரின் பிரதான அமர்வு நேற்று பிற்பகல் நியூயோர்க் நகரிலுள்ள ஐ. நா தலைமையகத்தில் ஆரம்பமானது. முழு உலகும் எதிர்பார்த்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இவ்வருட பொதுச்சபை கூட்டத்தொடர்...
இந்தியாவின், தனுஷ்கோடியிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு தப்பி வர முயற்சித்த பெண் உட்பட இருவரை கைதுசெய்துள்ளதாக ராமநாதபுரம் சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பைச் சேர்ந்த 42 வயதுடைய ரமணி என்ற பெண் சுற்றுலா விசாவில் தமிழ்நாட்டின் திருச்சியில் தங்கியிருந்தார். இந் நிலையில் குறித்த பெண் இன்று அதிகாலை தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு தப்பிவர முயற்சித்தபோதே ராமநாதபுரம் சுங்கத்துறையினர் இவரை கைதுசெய்துள்ளனர். அத்துடன் இவர் இலங்கைக்கு தப்பிவர உதவி புரிந்த...