அஜித் விஸ்வாசம் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வரும் ஜனவரி 2019 ல் ரிலீஸாகவுள்ளது. இதற்கான வேலைகள் முனைப்புடன் நடந்து வருகின்றன. இந்நிலையில் அவரின் அடுத்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இளம் இயக்குனர் வினோத்துடன் தான் என தகவல் வந்துவிட்டது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் இப்படத்தை தயாரிக்கிறார். மேலும் இப்படத்தில் யுவன் அல்லது ரஹ்மான் இசையமைக்கூடும் என சொல்லப்பட்டது. ஒரு வேளை ரஹ்மான் இணைந்தால் அவரின் 2006 ல்...
பரிஸ் மாஸ்டஸ் டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு, முதலாம் சுற்று போட்டியில், கனடாவின் மிலோஸ் ராயோனிக் போராடி வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். முதலாம் சுற்று போட்டியில், கனடாவின் மிலோஸ் ராயோனிக், பிரான்ஸின் ஜோ வில்பிரைட் சோங்காவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இரசிகர்களுக்கு உச்ச விறுவிறுப்பை தந்த இப்போட்டியில், மூன்று செட்டுகளுமே டை பிரேக் வரை நீடித்தது. இப்போட்டியில் முதல் செட்டை ஜோ வில்பிரைட் சோங்கா, 7-6 என கைப்பற்றினார். இதனைதொடர்ந்து மீண்டெழுந்த மிலோஸ்...
உலகிலேயே மிக உயரமான சிலையான, சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். “இந்தியாவின் இரும்பு மனிதர்” என்று அழைக்கப்படும் முதலாவது உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டுள்ளது. நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் குறித்த சிலை நிறுவப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் படேல், நாட்டை ஒன்றுபடுத்தியதை குறிப்பிடும் வகையில், ‘ஒற்றுமைக்கான சிலை’...
பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையில் நேரடி பஸ் சேவையொன்று எதிர்வரும் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அதன்படி பாகிஸ்தானின் லாகூர் நகரை சீனாவின் கஷ்கர் நகருடன் இணைக்கும் புதிய பஸ் சேவையின் மூலமாக சுமார் 30 மணிநேரம் பயணம் செய்தால் பாகிஸ்தானிலிருந்து சீனாவுக்கும், சீனாவிலிருந்து பாகிஸ்தானுக்கும் செல்லலாம். இந்த பயணத்துக்கான ஒருவழி கட்டணமாக 13 ஆயிரம் ரூபாவும் (இந்திய ரூபா) இருவழி கட்டணமாக 23 ஆயிரம் ரூபாவும் (இந்திய ரூபா)...
இந்தோனேசிய விமானமொன்று கடந்த திங்கட்கிழமை  திடீரென மாயமாகி கடலில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்தனர். விபத்திற்குள்ளான விமானத்தில் இருந்து ஒரு குழந்தை மாத்திரம் தப்பி உயிர் பிழைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பலராலும் பகிரப்பட்ட நிலையில் தற்போது அது தவறான புகைப்படம் என நிரூபணம் ஆகியுள்ளது. விபத்துக்குள்ளாகி பல மணி நேரங்களிற்கு பின் சமூக  ஊடகங்களில் ஆயிரக்கணக்கான முறை ஒரு வயது குழந்தையின் புகைப்படம் ஒன்று...
ஹிக்கடுவை கொலை சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கடந்த செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி ஹிக்கடுவை தபால் காரியாலயத்திற்கு அண்மையில் சைக்கிளில் பயணித்த நபருக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால்  துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது . துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான நபர் உயிரிழந்துள்ளதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமையவே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து டி...
முள்ளிக்குளத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்லும் பிரதான வீதிகளை கடற்படையினர் மீண்டும் இன்று புதன் கிழமை காலை முற்கம்பிகளினால் மூடியுள்ளதாகவும் இதனால் அப் பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை லோரான்ஸ் லியோ தெரிவித்தார். முள்ளிக்குளம் கிராமத்திற்கு கடற்படை முகாமினூடாக செல்லும் பிரதான வீதியை கடந்த 21 ஆம் திகதி திடீர் என கடற்படையினர் முற் கம்பிகள் கொண்ட  வேலியினால் வீதியை இடை மறித்து...
பெருந்தோட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழான வீடுகளது தரம் குறித்து மீளாய்வு செய்ய புதிதாக பதவியேற்றுள்ள மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் வீட்டுத்திட்டத்தின் கீழ் பெருந்தோட்டங்கள் பலவற்றில் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சுப் பதவியை பழனி திகாம்பரம் வகித்தப்போது வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. தற்போது  அமைச்சுப் பொறுப்பை ஆறுமுகம் தொண்டமான் ஏற்றுள்ள நிலையில், குறித்த வீட்டுத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளின் தரத்தை மீளாய்வு செய்ய அவர் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார். இந்திய...
மட்டக்களப்பின் வவுணதீவு பொலிஸ்பிரிவில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வை மேற்கொண்ட இரண்டு உழவு இயந்திரங்களையும், பெக்கோ கனரக வாகனம் ஒன்றையும் வவுணதீவு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கோழியனாறு, முள்ளாமுனை பிரதேசத்தில் மண் ஏற்றப்பட்ட நிலையில்   இரண்டு உழவு இயந்திரங்களும், பெக்கோ வாகனம் ஒன்றையும் அவ் வாகனங்களின் சாரதிகளையும் நேற்று செவ்வாய்கிழமை மாலை  கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.நிசாந்த அப்புகாமி தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட வாகனங்களையும் சாரதிகளையும் மட்டக்களப்பு நீதிமன்றில் இன்று...
நாட்டில் அசாதாரண நிலை தோற்றுவிக்கப்பட்டதையடுத்து அதனை எவ்வாறு கையாளவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது நிலைப்பாடு பற்றி தினப்புயல் இணையம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு முன்னாள் பா.உ பா.அரியநேத்திரனிடம் வினவியபோது, கடந்த கால அரசியல் விடயங்களை எடுத்துக்கொண்டால் கடந்த 72 ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை அரசியல் அமைப்பில் கொண்டுவரும் போது அதனைக் குழப்பும் நோக்கில் தான் சிங்களப் பேரினவாத அரசு செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. குறிப்பாக ஐ.தே.கவின் தலைவராக இருக்கலாம்,...