இன்றைய காலக்கட்டத்தில் மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்த வண்ணமுள்ளது என சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீம் தெரிவித்துள்ளார். நாவிதன்வெளி பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனையை ஒழிப்பது சம்பந்தமான கலந்துரையாடல் நேற்று மாலை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், போதைப்பொருள் பாவனை வியாபாரிகளால் மாணவர்களிடையே வலிந்து திணிக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளை நற்பிரஜைகளாக உருவாக்குவதற்கான கனவுகளோடு தான் பாடசாலைக்கு அனுப்புகின்றனர். ஆனால் மாணவர்களிடையே அண்மைக் காலங்களாக...
கம்பஹா. கொழும்பு பிரதேசங்களில் இரு தொழிற் பயிற்சி நிலையங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இப்பயிற்சி நிலையங்களின் நிர்மாணப் பணிகள், தற்போது இடம்பெற்றுவரும் நிலையில், கட்டுமானப் பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் மதிப்பு, 26 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதோடு, இத்தொகை கொரிய எக்சிம் வங்கியினால் 0.15 வீத வட்டி அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது. இவ்விரண்டு நிலையங்களுக்கான அனைத்து உபகரணங்களையும் இவ்வருட இறுதிக்குள் பெற்றுக் கொடுக்கத் தேவையான முயற்சிகள், தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு...
    வடக்கு இனி விடியும்! 2009இல் மோதல்கள் முடிவுக்கு வந்த நாள் முதல் வடக்கு மக்களின் துயர் துடைக்கவும், அவர்கள் வாழ்வு சிறக்கவும் அயராது உழைத்த ஒரு தலைவன், இப்போது மீண்டு(ம்) வடக்கு அபிவிருத்தி அமைச்சராக விஸ்வரூபமெடுத்து வருகிறார். இது அவர் தனக்காக தான் தேடி - இரந்து - தாவிப் பெற்றுக்கொண்ட சலுகைப் பதவியல்ல. துரோகி, பாவி, கொலைகாரா என்றெல்லாம் தூற்றி ஒதுக்கிய அனைத்துக் குரல்களுக்குள்ளும் அமைதியாக வாழ்ந்து, ஆர்ப்பாட்டமில்லாமல் தமிழ் மக்களின்...
சோளத்தை வேக வைத்து சாப்பிடும் போது அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் அளவு அதிகரிக்கும். இந்த ஆரோக்கியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் சோளத்தை சாப்பிடுவது நல்லதுதான். ஆனால் கடைகளில், இனிப்புச் சோளம் என்றும் மசாலா, வெண்ணெய் கலந்து செய்யப்படும் சோளம் நல்லதல்ல. சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் சோளத்தில் கார்போஹைட்ரெட் அளவு அதிகமாக உள்ள இவை உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து நீரிழிவு நோயை ஏற்படுத்தும். மேலும், சர்க்கரை நோயாளிகள் இதனை உண்ணாமல் இருப்பது...
கனராயன்குளத்தில் முன்னாள் போராளி ஒருவர் மீது பொலிசார் நடத்தியுள்ள தாக்குதல் அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது. காணி பிரச்சினை காரணமாக பொலிசார் பக்கசார்பாக நடந்து கொண்டதுடன், காணி உரிமையாளராகிய முன்னாள் போராளி மீதும், அவருடைய குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்தியதாக முறையிடப்பட்டிருக்கின்றது. வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் கடந்த பல தசாப்தங்களாக நிம்மதியற்ற வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் தமிழ் மக்களையும் அவர்கள் சொத்துக்கள்...
அரசியல் கதையில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் சென்சார் பணிகள் சில நாட்கள் முன்பு தான் முடிந்து U/A சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது சர்கார் படத்தின் ரன்னிங் டைம் பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளது. படம் 2 மணி நேரம் 44 நிமிடங்கள் ஓடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது கத்தி படத்தை விட 3 நிமிடங்கள் குறைவு தான். விஜய்-முருகதாஸ் கூட்டணியில் 3வது படமான இது தீபாவளிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏமாற்றப்பட்டுவிட்டோம் அல்லது ஏமாற்றப்படுகிறோம் என்ற அடிப்படையின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாரியதொரு எதிர்பார்ப்புடன் அமைச்சுப் பதவிகளுக்காக ஏங்கித் தவிப்பதைக் காணமுடிகிறது. அபிவிருத்தியா? அல்லது மக்களின் உரிமைகளா? என்ற அடிப்படையின் கீழ் மக்களது உரிமைகளுக்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குரல் கொடுக்கவேண்டும். ஆனாலும் சோரம்போகும் அரசியலைச் செய்கின்ற தமிழ் அரசியல் தலைமைகள் சோரம்போகத்தான் செய்கிறார்கள். நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி மாற்றம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமிழ்த் தேசியக்...
அஜித் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பில் படு பிஸியாக இருக்கிறார். படப்பிடிப்பில் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிற நேரத்தில் படத்திற்காக போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் வேகமாக நடக்கிறது. தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு செய்தி. சிவாவுடனேயே தொடர்ந்து கூட்டணி அமைத்து வந்த அஜித் இப்போது 59வது படத்தின் மூலம் தீரன் பட புகழ் வினோத்துடன் இணைய இருக்கிறார். போனி கபூர் இப்படத்தை தயாரிக்க படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பெப்ரவரியில்...
கொழும்பு லிப்படன் சுற்றுவட்டத்தில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச நிறுவனங்களுக்குள் பிரவேசிக்க கொழும்பு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் “ஜனநாயகத்தை பாதுகாப்போம் : ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்”  எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசியக்கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம் நண்பகல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பலகை வியாபாரியொருவரின் மனைவி, குழந்தைகளை கொலை செய்யப் போவதாக அச்சுறுத்தல் விடுத்து, 10 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரிய சந்தேக நபர் இருவரை கேகாலை வலய குற்ற விசாரணை அதிகாரிகள் வரகாபொலவில் வைத்து கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் மீரிகம மற்றும் கேகாலை பகுதிகளைச் சேர்ந்த 27 மற்றும் 40 வயதுடைய இரண்டு ஆண்கள் ஆவார். கைதுசெய்யப்பட்டவர்களிடம் கேகாலை வலய குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் சந்தேகநபர்கள்...