சிரியாவில் அமைந்துள்ள டமாஸ்கஸ் என்ற தேசிய அருங்காட்சியகம் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் நடைபெற்று வந்த உள் நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 2011ஆம் ஆண்டு குறித்த அருங்காட்சியகம் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டது.
இந் நிலையில் அங்கு தற்போது அமைதியான சூழல் நிலவுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் குறித்த அருங்காட்சியகம் கடந்த 28ஆம் திகதி மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தடைகளை நீக்க அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Thinappuyal News -
அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் டேவிட் வோர்னர் கமரொன் பான்கிராவ்ட் ஆகியோரிற்கு எதிரான தடைகளை நீக்கவேண்டும் என அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பந்தை சேதப்படுத்தும் நடவடிக்கைகளிற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டு;ப்பாட்டுச்சபையி;ன் கலாச்சாரமும் அமைப்புமுறையும் காரணம் என்பது சுயாதீன விசாரணைமூலம் தெரியவந்துள்ளதன் காரணமாக மூன்று வீரர்கள் மீதான தடையையும் நீக்கவேண்டும் என வீரர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மூன்று வீரர்களும் போதுமான அளவிற்கு தண்டிக்கப்பட்டுள்ளனர் அவர்களை இனி கிரிக்கெட் விளையாட...
இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சோயிப் மலிக்கிற்கும் இன்று காலை ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது.
இந்தியாவின் ஐதராபாத்திலுள்ள தனியார் வைத்தியசாலையில் வைத்தே சானியா மிர்சா ஆண் குழந்தையை ஈன்றெடுத்துள்ளார். இத் தகவலை சோயிப் மாலிக் தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார்.
வைத்தியசாலையில் சானியாவுடன் அவரது பெற்றோர் மற்றும் கணவர் சோயிப் மாலிக் உடனிருந்து கவனித்து வருகின்ற நிலையில், சானியா மிர்சா- சோயிப்...
உலக இறுதி டென்னிஸ் தொடரில் அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸை வீழ்த்திய உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
தரவரிசையில் டொப் – 8 இடங்களைப் பிடித்த வீராங்கனைகள் மோதிய இத் தொடரில் லீக் சுற்றின் முடிவில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ்
ஸ்விடோலினா இறுதிக்கு தகுதி பெற்றனர்.
இந்தப் போட்டியில் முதல் செட்டை 3–6 என்ற கணக்கில் இழந்த ஸ்விடோலினா, அடுத்த 2 செட்களையும் 6-–2, 6–-2 என்ற கணக்கில் கைப்பற்றி சம்பியன்...
எவ்வித தட்டுப்பாடுமின்றி அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தின் தேசிய ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலதிக பௌவுஸர்களும் பயன்படுத்தப்பட்டு நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருவதாக தேசிய ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மேலதிக கொள்வனவைத் தவிர்த்து வழமைபோன்று எரிபொருளைக் கொள்வனவு செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
நேற்று முன்தினம் பிற்பகல் பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைமையகத்தில் இடம்பெற்ற அமைதியின்மையில்...
அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 175.56 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, அண்மைக்காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இலங்கை அரசியலில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற விடயம் புரியாத புதிராகவே உள்ளது.
யார் யாருடைய பக்கம் சேரப் போகின்றார்கள்? என்ன பேசப் போகின்றார்கள் என்பதும் பலத்த எதிர்பார்ப்பாகவே உள்ளது.
அந்த வகையில் நேற்று காலை ரணிலை சந்தித்தவர்கள் மாலை நேரத்தில் மஹிந்தவுடன் இணைந்த சம்பவங்களும் உண்டு. அவர்களுக்கு அமைச்சுப்பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், நல்லாட்சி அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட அமைச்சரவை முழுவதும் கலைக்கப்பட்டு நேற்று புதிய அமைச்சர்கள் சிலர் பதவிப்பிரமாணம் செய்து...
மட்டக்களப்பு,கல்லடி பாலத்திற்கு அருகில் மாணவி ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கல்லடி,உப்போடை பகுதியில் உள்ள பெண்கள் பாடசாலையில் உயர்தரம் பயிலும் கரடியனாறு பகுதியை சேர்ந்த 18வயதுடைய மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவி நாவற்குடாவில் உள்ள வீடு ஒன்றில் இருந்து பாடசாலைக்கு சென்றுவருவதாகவும் குறித்த மாணவியை நேற்று காலை முதல் காணாத நிலையில் நேற்று மாலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவியின் மரணம்...
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது.
குழந்தைகள், விமான அதிகாரிகள் மற்றும் பயணிகள் உட்பட மொத்தமாக 189 பேரைக் கொண்ட குறித்த விமானம் சுமாத்திரா கடலில் வீழ்ந்துள்ளது.
கரையோரப்பகுதியிலிருந்து 15 கிலோமீற்றர் தூரத்தில் 30 மீற்றருக்கு அதிகமான ஆழத்தில் JT610 என்ற லயன் விமானம் நேற்று (திங்கட்கிழமை) காலை கடலுக்குள் வீழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விமானத்தில் பயணித்த பயணிகளில் 24 பேரின் சடலங்கள், மேலும்...
நியூசிலாந்தில் 6.1 றிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வட நியூசிலாந்திலுள்ள தலைநகர் விலிங்டனில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
குறித்த அதிர்வை ஆயிரக்கணக்கான மக்கள் உணர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், எந்தவிதமான சேதங்களும் பதிவிடப்படவில்லையென அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று இடம்பெறவிருந்த நாடாளுமன்ற அமைர்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதோடு தலைநகர விமான சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
குறித்த நிலநடுக்கமானது, மேற்கிலுள்ள நியூபொலிமத் நகரின் நிலத்தடியில் 63 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல்...