கொட்டாவ - மத்தேகொட பகுதியிலுள்ள அரச வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் நகையுடன் மூன்று சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொட்டாவ - மத்தேகொட பகுதியில் இயங்கிவரும் அரச வங்கியொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை மோட்டார் காரில் வந்த இனந்தெரியாத மூவர் துப்பாக்கியை காட்டி பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டு சென்றனர் .
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த கொட்டாவ பொலிஸார் இன்று காலை சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்துள்ளனர்.
கைது...
ஆப்பானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள தேர்தல் ஆணையகத்தின் தலைமையகத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
இதேவேளை 33 மாகாணங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளை எண்ணும் பணிகளை தேர்தல் ஆணையகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகள் ஜனநாயகத்தை தலைகீழாக்கியுள்ளது என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான முன்னாள் அமெரிக்கப் பிரதிநிதியும், சிரேஸ்ட ராஜதந்திரியுமான சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் டுவிட் பதிவு ஒன்றை இட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல்களை உறுதிப்படுத்துவதாக வாக்குறுதி அளித்த ஜனாதிபதி மைத்திரி, போர்க் குற்றச் செயல்கள் மற்றும் காணாமல் போதல்களுக்கு பொறுப்பான மஹிந்த ராஜபக்சவை மீளவும் பிரதமர் பதவியில் அமர்த்தியுள்ளார்.
இலங்கையர்கள் அதிகளவில்...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்றைய தினம் வெலிக்கடை மற்றும் மகசின் ஆகிய சிறைச்சாலைகளுக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் இணைந்து தமிழ் அரசியல் கைதிகள் சிலரின் பெற்றோரும் அங்கு சென்றுள்ளனர்.
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை நேற்றைய தினம் பதவியேற்றுள்ள நிலையில், புதிய அரசாங்கத்தில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாட்டை பாதிப்பிற்குள்ளாக்கியுள்ள அரசியலமைப்பு நெருக்கடிகள் தொடர்பாக ஆராயும் வகையில் அமெரிக்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் ஐ.நா. அலுவலகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் இருவருக்கும், சபாநாயகருக்கும் இடையிலான சந்திப்பு நாடாளுமன்றத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, நாட்டில் தற்போது நிலவியுள்ள அரசியல் நிலைமை...
இலங்கையின் நிலவரங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக, சீனா தெரிவித்துள்ளது.
பீஜிங்கில் நேற்று நடந்த நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லூ காங் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை எல்லாத் தரப்புகளும் பேச்சுக்களின் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்று சீனா நம்புகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
நேற்று நெடுந்தீவு கடல் பகுதியில் வைத்தே இவர்களை கைதுசெய்த கடற்படையினர் இவர்கள் பயணித்த இரண்டு படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்களை கங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து வைத்துள்ள கடற்படையினர், இன்று அவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நகர் நிருபர்-
மன்னார் நகர நுழைவாயிலில் சுமார் 28 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடம் இன்று திங்கட்கிழமை(29) மதியம் மன்னார் நகர உதவி பிரதேசச் செயலாளர் திருமதி சிவசம்பு கணகாம்பிகை அவர்களினால் கூட்டுறவு திணைக்கள அதிகாரியிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான அவசர கலந்துரையாடல் கடந்த சனிக்கிழமை (27) காலை 10 மணியளவில்...
-மன்னார் நகர் நிருபர்-
இரகசிய தகவலின் அடிப்படையில் கொழும்பிலிருந்து மன்னாரிற்கு வருகை வந்த குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று மன்னார் எமிழ் நகர் பகுதியில் உள்ள வீட்டு சமையலறை பகுதியில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்ட போதும் எவ்வித ஆயுதங்களும் மீட்கப்பவில்லை.
குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை(29) மாலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் உள்ள குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார்...
இலங்கையின் தற்போதைய அரசியல் குழப்ப நிலையால் மக்கள் நட்டாற்றில் நிற்கின்றனர். உங்களை ஜனாதிபதியாக்கியமைக்கு நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்த நன்றிக் கடன் இதுவா? என மைத்திரியிடம் கேள்வி எழுப்பியுள்ளார் சம்பந்தன்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேரில் சந்தித்து காரசாரமாக விவாதித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.
நாடாளுமன்றத்துக்கு மதிப்புக் கொடுத்துச் செயற்படுமாறும், நாட்டு மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் செயற்பட வேண்டும் என்றும் மைத்திரிக்கு சம்பந்தன் இடித்துரைத்தும்...