பாராளுமன்றை உடனடியாக கூட்டவும்.. 126 MP க்கள் கையொப்பம் இட்டு சபாநாயகருக்கு கடிதம். பாராளுமன்றை உடனடியாக கூட்டவும் என 126 MP க்கள் கையொப்பம் இட்டு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி வைக்கபட்டுள்ளதாக, தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள அமிர்தகழி மட்டிக்கழி பிரதேசத்தில் வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்த 5 இலட்சத்து 31 ஆயிரம் ரூபா மற்றும் தங்க ஆபரணங்கள் கடந்த  சனிக்கிழமை இரவு கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். மட்டிக்கழி கதிர்காமர் வீதியில் உள்ள குறித்த வீட்டில் சம்பவதினமான கடந்த சனிக்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரியின் முன்பகுதியில் திறப்பை மறந்து வைத்து விட்டு கோவிலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மீண்டும்...
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூம்வூட் தோட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த  இளைஞர் ஒருவர்  109  கஞ்சா பொதியுடன்  இன்று பகல் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் இருந்த இன்னுமொருவர் தப்பியோடிய நிலையில் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை விறதுவை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெவித்தனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் யுத்தத்திற்குப் பின்னரான தமது அரசியல் முன்னெடுப்புக்களை சாதூரியமாக நடத்திக்கொண்டிருக்கும் பொழுது அதனைக் குழப்பும் நோக்கில் பல்வேறு செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அமைச்சுப் பதவிகளுக்காக கோடிக்கணக்கில் பணங்கள் பெற்று இவர்கள் செல்வார்கள் என்பது தமிழ் மக்களுக்குள்ளேயே இருக்கங் கூடிய பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படாத உறுப்பினர்களும் ஏனைய கட்சிக்காரர்களும் கூறுகின்ற பொய்ச்சாட்டு. அமைச்சுப் பதவியினைப் பார்க்கின்ற பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சார்ந்தவர்கள் எவரும் புதிதாக...
புதிய அமைச்சரவையின் விபரம் வெளியானது? புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் சிலர் அமைச்சர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர் என பிரதமர் அலுவலகத்திலிருந்து கசிந்த உறுதிப் படுத்தப்படாத தகவல் தெரிவிக்கின்றன. 1. பாதுகாப்பு அமைச்சர் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2. புத்த சாசனம், சட்டம் மற்றும்...
ஒரு நாட்டில் ஜனநாயக வழிமுறைகளுக்கேற்ப அதனது பாராளுமன்றம் செயற்பட வேண்டும். குறித்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பொறுப்புக்கூறவேண்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களே ஒரு சதிப் புரட்சியை ஏற்படுத்தி இலங்கைத் திருநாட்டை ஒரு குழப்ப சூழ்நிலைக்குள் தள்ளிவிட்டிருக்கின்றார். கடந்த 35 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு யுத்தம் கூட்டு அரசாங்கம் என்ற போர்வையில் ஒரு நிலைப்பாட்டை எட்டியிருந்தவேளை மீண்டும் அதனைக் குழப்பும் நோக்கில் தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்டங்கள் எதனையும் வழங்கக்கூடாது...
உணவுக்குழாயில் பல் சிக்கிக்கொண்டதால் 3 வருடங்களாக உணவு உண்ணாமல் நபர் ஒருவர் வாழ்ந்து வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தீபக் நந்தி (46) என்பவர் ஸ்டேஷனரி கடை ஒன்றினை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு வீட்டில் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, 2 பற்கள் உணவுடன் சேர்த்து வயிற்றுக்குள் சென்றுள்ளது. இதனை அறிந்துகொண்ட தீபக், வெளியில் சொன்னால் அவமானம் எனக்கருதி வீட்டில் யாரிடமும்...
இஞ்சியில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சிப் பொருட்கள் பல்வேறு நோய்களின் தாக்குதல்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. இஞ்சியில் விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய இஞ்சி நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி தலை முடியின் அழககை அதிகரிக்கவும் உதவுகின்றன. குறிப்பாக தலையில் உருவாக கூடிய பொடுகை இது முற்றிலுமாக குறைத்து விடும். பொடுகை போக்கும் இஞ்சி எப்படி? இஞ்சி மற்றும் நெல்லிக்காய் முதலில்...
உட்புற உடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமானால் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை நீக்க வேண்டியது அவசியமாகும். இயற்கையான முறையில் இந்த கழிவுகள் வெளியேறினாலும், அது சீராக நடைபெற சில உணவுகள் நமக்கு பெரிதும் உதவுகின்றன. ஆரோக்கியமற்ற உணவுகளை அளவுக்கு அதிகமாக உண்ணுவதால் ஏற்படும் தாக்கங்களை சமாளிக்க நச்சுப்பண்பை நீக்கும் சில உணவுகள் உள்ளது. இவ்வகை உணவுகளை சாப்பிடுவதால் பலருக்கு பிரச்சினையை ஏற்படுத்தும் உடல் எடையை குறைக்க...
அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், பாகிஸ்தான் அணி 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. பாகிஸ்தான்-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி துபாயில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. தொடக்க வீரர்களான பாபர் அஸாம் 50 ஓட்டங்களும், பர்ஹான் 39 ஓட்டங்களும் குவித்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த சோயிப் மாலிக் 18 ஓட்டங்களில்...