பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு ஆதரவு தெரிவித்து மனித சங்கிலி போராட்டமொன்று இன்று (திங்கட்கிழமை) வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா வைத்தியாலைக்கு முன்பாக ஒன்றிணைந்த அரசியல் கட்சிகளின் பொது அமைப்பினரால் இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் தொடர்பாக அவர்கள் கூறுகையில் ,“தோட்டத்தொழிலாளர்கள் தமது அடிப்படைச்சம்பளம் 1000 ரூபாயை  வலியுறுத்தி போராடி வருகின்றனர். அப்போராட்டமானது இன்றைய சூழலில் நியாயமானதும் சரியானதும் ஆகும். ஆகவே அவர்களுக்கு வவுனியா மாவட்ட ஒன்றிணைந்த அரசியல் கட்சிகளின் பொது அமைப்பினர் எனும்...
உள்ளூர் கிளப் போட்டியின்போது கிண்டல் செய்ததால் கோபமடைந்த டேவிட் வார்னர், பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது பாதியில் வெளியேறினார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு, ஓர் ஆண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. எனினும், உள்ளூர் போட்டிகளில் விளையாட அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்ததால், அவுஸ்திரேலியாவில் நடைபெறும் தொடரில் ராண்ட்விக் பீட்டர்ஷாம் அணிக்காக வார்னர் விளையாடி வருகிறார். இந்நிலையில்,...
அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க மற்றும் கெஹலிய ரம்புக்வெல ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் அரசாங்க ஊடகப் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதை அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளது. ஏற்கனவே தேசிய அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர்களாக அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் கயந்த கருணாதிலக ஆகியோர் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்துக்கது.
ஜாதி பெயரைச் சொல்லி திட்டு வதாகவும், பாலின ரீதியில் துன்புறுத்துவதாகவும் பயிற்சி யாளர் மீது தடகள வீராங்கனை சாந்தி புகார் அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், கத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.சாந்தி. பல்வேறு மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டி யிலும் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் தடகள பயிற்சியாளராக தமிழக அரசால்...
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் பிரதேசத்தில் 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி பாலியல்  துஸ்பிரயோம் செய்த குற்றச்சாட்டில் ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். தரம் 10 இல் கல்வி கற்று வரும் சிறுமியை  குறித்த சிறுவன் ஆசைவார்த்தை காட்டி சிறுமியை கடந்த 18 ஆம் திகதி அழைத்துச் சென்று வாழைச்சேனை பிரதேசத்தில் வீடு...
தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளரான நாகராஜனுக்கு ஆவா குழுவினர் தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக வவுனியா மாவட்ட தலைமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளருமான நாகராஜன் என்பவருடைய கையடக்க தொலைபேசியிற்கு நேற்றைய தினம் (28) இரவு 07.30 மணியளவில் இரண்டு தொலைபேசி இலக்கங்களில் தொடர்புகொண்ட மர்ம நபர்கள் உதைபந்தாட்ட சம்மேளனத்தால்...
நடிகை அனுஷ்கா தற்போது உடல் எடை அதிகம் கூடிவிட்டதால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளார். கடைசியாக அவர் பாகமதி என்கிற படத்தில் தான நடித்திருந்தார். இந்நிலையில் அவர் தற்போது உடல் எடை குறைப்பதற்கான சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அது முடிந்து எடை குறைத்தபிறகு தான் மீண்டும் சினிமாவில் நுழைவேன் என அவர் கூறியுள்ளார். முன்பு மாதிரியான தோற்றத்துக்கு வந்த பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன். "எனக்கு பட...
நம் வீட்டில் எதிர்மறை ஆற்றல் கொண்ட தீய சக்திகள் அதிகமாக இருந்தால், நாம் செய்யத் தொடங்கும் எந்தவொரு செயலாக இருந்தாலும் அதில் தோல்வியே கிடைக்கும். பொதுவாக ஒருவரின் வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகளை அறிந்துக் கொள்வதற்கு ஏராளமான வழிகள் இருக்கிறது. ஆனால் உங்கள் வீட்டில் கெட்ட சக்திகள் இருக்கிறதா என்பதை மிகவும் எளிமையாக அறிந்துக் கொள்ள எளிமையான வழி ஒன்று உள்ளது. தீய சக்திகள் உருவாக காரணம்? வீடு என்பது அனைத்து விதமான...
மின்சாரம் தாக்கிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளமை பெரும் சோபம்தை ஏற்படுத்தியுள்ளது. கேபிள் ரீவி இணைப்பின் ஊடாக மின்சாரம் தாக்கியது என்று தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் மருத்துவமனை வீதியில் நேற்று முற்பகல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 55 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பலரும் இடுப்பு வலி வந்தால் நீண்ட நேரம் அமர்வதால் தான் என சாதாரணமாக எண்ணி விட்டுவிடுவார்கள். ஆனால் அடிக்கடி இடுப்பு வலி வந்தால்அது நம் உடலில் உள்ள ஏதோ ஒரு பிரச்சனையை சுட்டிக் காட்டுகிறது என்று அர்த்தம். ஆகவே இடுப்பு வலியை நீங்கள் சந்தித்தால் உடனே அதற்கான காரணத்தை கண்டறிந்து அதனை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபடுங்கள். இடுப்பு வலி ஏற்டுவதற்கு என்ன காரணம்? சிறுநீர் கழிக்கும் போது கடுமையான இடுப்பு வலியை உணர்ந்தால்,...