இயற்கைக்கு பெரிதும் ஆபத்தாக காணப்படும் பிளாஸ்டிக் பாவனையை குறைப்பதற்கு பல்வேறு நாடுகள், அமைப்புக்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றது. எனினும் இதன் உற்பத்தியானது குறைந்தபாடில்லை. காரணம் நாளாந்தம் பிளாஸ்டிக் பொருட்களுக்கான கேள்வி அதிகரித்து வருகின்றமையாகும். இவ்வாறானதொரு நிலையிலேயே பிளாஸ்டிக்கை உருவாக்கும் புதிய தொழில்நுட்பம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இது வழமையான முறையிலும் பார்க்க குறைந்த செலவில் பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்ய உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட எதேன் சேர்வையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட எதிலீன் இப் புதிய தொழில்நுட்பத்தில்...
தற்போது ஸ்மார்ட் கைப்பேசி உலகில் ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்ததாக சாம்சுங் நிறுவனமே காணப்படுகின்றது. இந்நிறுவனமாது விரைவில் Galaxy S10 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. இக் கைப்பேசியில் ஐந்தாம் தலைமுறை இணைய தொழில்நுட்பத்தினை பயன்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இந்த 5G தொழில்நுட்பம் கொண்ட கைப்பேசிகள் முதன் முறையாக அமெரிக்காவில் மாத்திரமே அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் கைப்பேசியின் முழுமையான சிறப்பம்சங்கள் வெளியிடப்படவில்லை. எனினும் OLED திரையினை கொண்டதாகவும், மூன்று பிரதான...
சர்வதேசத்துடனும், இந்தியவுடனும் கலந்துரையாடிய பின்னரே தமது ஆதரவு யாருக்கு என்பது தொடர்பான தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஐ.நா மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 30 (1) 34(1) என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படவேண்டுமென்று நாங்கள் ராஜபக்ஷவிடமும் ரணில் விக்ரமசிங்கவிடமும்...
குத்துச்சண்டை போட்டிகளில் 17 தங்கப்பதக்கம் குவித்த தினேஷ் குமார் தனது கடனை அடைக்க சாலையோரம் ஐஸ் விற்பனை செய்து வருவது சமூக வலைதளங்களில் விவாதமாகியுள்ளது. இந்தியாவின் ஹரியானா மாநிலம் பிவானி பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ் குமார். குத்துச்சண்டை வீரரான தினேஷ் குமார் நாட்டிற்காக பல போட்டிகளில் விளையாடி பதக்கம் வென்றுள்ளார். குறுகிய காலமே அவா் விளையாடி இருந்தாலும் 17 தங்கப்பதக்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம் என சாதனை படைத்துள்ளார். மேலும் கடந்த...
பாராளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர், ஹீதர் நுவேட்வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இலங்கையின் தற்போதைய  நிலவரங்களை அமெரிக்கா தொடர்ந்தும் கரிசனையுடன் கவனித்து வருகிறது. பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகருக்கு அழைப்பு விடுக்கிறோம். எவர் அரசாங்கத்துக்கு தலைமையேற்பது என்பதை உறுதி செய்யும் பொறுப்புக்களை நிறைவேற்ற, இலங்கைமக்களால்...
பிரான்ஸ் Villeparisis பகுதியில் நபர் ஒருவர், இரும்புக் கம்பியால் கொடூரமாக அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 27ஆம் திகதி இரவு, Villeparisis பகுதியில் நபர் ஒருவருக்கு தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது. அதன் பின்னர், தனது வீட்டில் இருந்து கீழே இறங்கி வந்த குறித்த நபரை, திடீரென பத்துக்கும் மேற்பட்டோர் சுற்றி வளைத்தனர். பின் தாங்கள் கொண்டு வந்த இரும்புக் கம்பியைக் கொண்டு, அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் குறித்த...
பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு அர்ஜுன் ரணதுங்க வருகை தந்ததையடுத்து இடம்பெற்ற அசம்பாவித நிலைமையைத் தொடர்ந்து பெற்றோலிய ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த பணிப்புறக்கணிப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் அர்ஜுன் ரணதுங்கவை, கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தயே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக பெற்றோலிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அர்ஜுன் ரணதுங்கவை, இன்று கைது செய்யாவிடின் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில்...
இந்தோனேசியாவின் ஜகர்டாவிலிருந்து பங்கல் பினாங்குக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் கடலில் வீழ்ந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் ஜகர்டாவிலிருந்து பங்கல் பினாங்குக்கு புறப்பட்ட JT610 ரக லயன் ஏர் விமானம் புறப்பட்ட 13 வது நிமிடத்தில் மாயமானது. இதையடுத்து விமானியை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இந்தோனேசியாவின் தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விமானம் கடலில் வீழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த தகவலை தேடல் மற்றும் மீட்பு...
சைபீரியாவில் பெண் ஒருவர் தமது முன்னாள் கணவரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு புகைப்படம் எடுத்து வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த புகைப்படங்களை தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்த அவர், இப்போது சொல்லுங்கள் நான் மிருகத்தனமாக இருக்குறேனா என கேள்வி கேட்டுள்ளார். சைபீரியாவில் உள்ள Surgut நகரில் கடந்த அக்டோபர் மாதம் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவத்தன்று மது போதையில் இருந்த இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருகட்டத்தில் தமது முன்னாள் மனைவியை...
இலங்கையில் உருவாகியுள்ள அரசியல் சூழ்நிலையை ஆழ்ந்த கவலையுடன் ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் அன்டனியோ கட்டரஸ் அவதானித்து வருகின்றார் என ஐநா தெரிவித்துள்ளது. ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் ஸ்டீபனே துஜாரிக் விடுத்துள்ள அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐநா செயலாளர் நாயகம் இலங்கையில் சமீபத்தில் உருவாகியுள்ள நிலவரத்தை ஆழ்ந்த கவலையுடன் உன்னிப்பாக அவதானித்து வருகின்றார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தை ஜனநாயக விழுமியங்களையும் அரசமைப்பு ஏற்பாடுகளையும் மதிக்குமாறும் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்து...