கிளிநொச்சி மாவட்டக் கரப்பந்தாட்டச் சங்கத்தால் நடத்தப்பட்ட அரச தலைவர் தங்கக் கிண்ணத்துக் கான கரப்பந்தாட்டத் தொடரில் பெண்களுக்கான திறந்த பிரிவில் திருநகர் விளையாட்டுக் கழக அணி சம்பியனானது.
கிளிநொச்சி தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கரப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்ற இந்த இறுதியாட்டத்தில் திருநகர் விளையாட் டுக் கழக அணியை எதிர்த்து குறிஞ்சி விளையாட்டுக் கழக அணி மோதியது.
இதில் 2:0 என்ற செற் கணக்கில் குறிஞ்சி விளையாட்டுக் கழக அணியை வீழ்த்தி...
மேற்கிந்திய அணியுடனான அடுத்த மூன்று போட்டிகளிற்குமான இந்திய அணியில் தனக்கு இடமளிக்கப்படாதது குறித்து சகலதுறை வீரர் கேதார் யாதவ் ஆச்சரியம் வெளியிட்டுள்ளார்.
இந்திய அணிக்காக என்னை ஏன் தெரிவு செய்யவில்லை என்பது எனக்கு தெரியமாலுள்ளது என குறிப்பிட்டுள்ள கேதார் யாதவ் நான் அனைத்து உடற்தகுதி பரிசோதனைகளிலும் என்னை நிரூபித்துள்ளதுடன் இந்திய ஏ அணிக்கான போட்டியிலும் விளையாடியுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு என்னை தெரிவு செய்யாவிட்டால் நான் ரஞ்சி போட்டிக்கான அணியில்...
தமிழ் அமைச்சர் ஒருவருக்காக வீதியை துப்பரவு செய்த மாணவர்கள்! சர்ச்சையை ஏற்படுத்தும் புகைப்படங்கள்
Thinappuyal News -
அமைச்சர் மனோகணேசனின் வருகைக்காக கிளிநொச்சி பூநகரி பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்களை வைத்து வீதியை துப்புரவு செய்தமை தொடர்பில் பலர் அதிருப்தி வெளியிட்டு வருவதுடன் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
பூநகரி பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ வித்தியானந்தா வித்தியாலயத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வுக்காக இன்றைய தினம் அமைச்சர் மனோ கணேசன் அங்கு சென்றிருந்தார்.
இந்நிலையில், அமைச்சரின் வருகைக்காக பாடசாலை மாணவர்களை வைத்து பாடசாலைக்கு...
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நாளை இரவு 7.00 மணிக்கு கொழும்பு, ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள், ஒரு இருபதுக்கு 20 போட்டி இடம்பெறவுள்ளது.
இந் நிலையில் நாளைய களமிறங்கவுள்ள திஸர பெரேரா தலைமையிலான இலங்கை அணிக் குழாமில் டினேஸ் சந்திமல், நிரோஷன் டிக்வெல்ல,...
இறுதி யுத்தத்தின் பின்னர் தனது சொந்த இடத்தில் மீள்குடியேறிய தந்தை ஒருவர் 9 வருடமாக ஆட்டுக்கொட்டிலில் வசித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியை சேர்ந்த 68 வயதுடைய செ.கோபாலகிருஸ்ணன் என்பவரே இவ்வாறு ஆட்டுக்கொட்டிலில் வசித்து வருகின்றார்.
குறித்த தந்தையின் மகன் ஜெகதீஸ்வரன் என்பவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாக இருந்து இறுதி யுத்தத்தின்போது களமாடி, கிளிநொச்சி பகுதியில் வைத்து மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீள்குடியேறிய காலப் பகுதியில் இருந்து தனது மனைவியுடன் ஆட்டுக்கொட்டிலில் வசித்து...
மலையகத்தின் சில ஆசிரியர்கள் மிகவும் மோசமாக நடந்து கொள்கின்றார்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா, வலப்பனை, ஹங்குராக்கெத்த மற்றும் ஹட்டன் ஆகிய கல்வி வலயங்களின் பாடசாலைகளைச் சேர்ந்த சில ஆண் ஆசிரியர்கள் மது போதைக்கு அடிமையாகியுள்ளனர் என சிங்கள நாளிதழ் ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.
சில ஆசிரியர்கள் மாலை வேளையிலும் இரவிலும் கடுமையாக மதுபானம் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.
இவ்வாறு கடுமையாக மதுபானம் அருந்துவதனால் அவர்களிடம் கல்வி பயிலும் மாணவ மாணவியர் பெரும்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சிக்கிய வெளிநாட்டு பெண்! வயிற்றில் இருந்த பெறுமதியான பொருள்
Thinappuyal News -
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பெண்ணின் வயிற்றிலிருந்து போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த பெண் உட்பட இருவர் நேற்று மாலை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 67 வயதான பெண்ணொருவரும், அவருடன் இருந்த 44 வயதான ஆணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் பாகிஸ்தான் நாட்டு பிரஜைகள் என தெரியவருகிறது.
நீர்கொழும்பு வைத்தியசாலையில் குறித்த பெண் அனுமதிக்கப்பட்டு அவரின் வயிற்றில் இருந்து 4.2...
சவுதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் மரணத்திற்கு நீதி கோரி கொழும்பில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் முன்னால் நேற்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கொல்லப்பட்ட சவுதி ஊடகவியலாளர் ஜமாலின் மரணத்திற்கு கண்டனம் வெளியிட்டும், அதற்கு நீதி வேண்டும் என வலிறுத்தியும் அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
சவுதி அரேபிய ஊடகவியலாளரான ஜமால் கசோக்கி, துருக்கியில் உள்ள...
வடக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் முடிவடைந்து, வடக்கின் ஆட்சி அதிகாரம் ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் கைகளுக்கு சென்ற நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் விசேட கூட்டங்களை நடத்தி வருகின்றார்.
அந்த வகையில், யாழ். நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் அலுவலகத்துக்கு நேற்று விஜயம் செய்த ஆளுநர் விசேட கூட்டத்தை நடத்தியிருந்தார்.
வடமாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள், செயலாளர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்து கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப்...
தொடர் போராட்டங்களில் ஈடுப்பட்டு வரும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக கொட்டகலை அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய பயிலுநர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த போராட்டம் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் இன்று காலை ஆரம்பமாகியிருந்தது.
இந்த நிலையில் குறித்த போராட்டத்தில் 300 இற்கும் மேற்பட்ட ஆசிரிய பயிலுநர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், ஆயிரம் ரூபா சம்பள உயர்வை கோரி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களின் போராட்டம் வெற்றி...