வீதிகளின் தரம், பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு இவற்றைக் கருத்தில் கொண்டு உலகில் போக்குவரத்துக்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள சிறந்த வீதிகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலை  உலக பெருளாதார மன்றம் (WORLD ECONOMIC FORUM)வெளியிட்டுள்ளது. அந்தவகையில் 2018ஆம் ஆண்டின் உலகில் சிறந்த வீதி வசதிகள் கொண்ட நாடுகளில் சிங்கப்பூர்க்கு முதல் இடம் கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து ஐரோப்பாவின் ஸ்விட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து நாடுகள் இரண்டாம் மூன்றாம் இடம்பிடித்துள்ளன. ஆசியாவிலிருந்து ஹாங்காங், ஜப்பான், ஓமன், ஐக்கிய அரபு...
பாகிஸ்தான் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 16 பேரை கைதுசெய்துள்ளதாக பாகிஸ்தான் கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் குறித்த 16 மீனவர்கள் பயணித்த மூன்று படகுகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் பாகிஸ்தானிய கடற்படையினர் தெரிவித்துள்ளதுடன் கராச்சி துறைமுகம் பகுதியில் உள்ள காவல் நிலைய பொலிஸார் கைதான மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பாகிஸ்தான் - பலுசிஸ்தான் குவெட்டா நகரில் அமைந்துள்ள தனியார் பாடசாலை ஒன்றில் மர்ம நபர்கள் நேற்று நடாத்திய மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 4 குழந்தைகள் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த 9 முதல் 12 வயதுடைய 3 சிறுவர்களும் ஒரு சிறுமியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆயூர்வேத “மசாஜ்” நிலையமொன்றினை சுற்றி வலைத்த மொனராகலைப் பொலிசார் நிலைய முகாமையாளரையும் நான்கு இளம் பெண்களையும் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்குற்படுத்தப்பட்ட போது ஆயூர்வேத “மசாஜ்” நிலையப் பெயரில் விபசார விடுதி நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வந்தமை தெரியவந்துள்ளது. இது குறித்து மொனராகலை பிரதேச சபை தலைவர் மொனராகலைப் பொலிசாருக்கு வழங்கிய தகவலினடிப்படையிலேயே மேற்படி “மசாஜ்” நிலையம் சுற்றி வலைக்கப்பட்டது. “மசாஜ்” நிலையம் குறிப்பிட்ட பகுதி பிரதேச சபையினால் அனுமதிப்பதிவை...
16 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கர்ப்பமாக்கிய சந்தேகத்தின் பேரில் சிறுமியின் சிறிய தந்தையை இன்று கைதுசெய்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய விடயம் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினருக்கு தெரியவந்ததையடுத்து, அவர்கள் பொலிஸ் நிலையத்துக்கு வழங்கிய முறைப்பாட்டுக்கிணங்க பொலிஸார், குறித்த சிறுமியை அணுகி அவரிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொண்டதன் பின்னரே சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமியை சிகிச்சைக்காக மொனராகலை வைத்திய சாலையில்...
ஆளும் வர்க்கத்தின் செல்லப் பிள்ளைகளாக  என்றென்றும் இருக்க விரும்புகின்ற சிலரின் அப்பட்டமான கீழ்த்தரமான நடவடிக்கைகளாலேயே சிங்கள ஆட்சியாளர்கள் எம்மீது குதிரை விடப் பார்க்கின்றார்கள் என வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் தெரிவித்தார். இதேவேளை, தமிழ் அரசியல்வாதிகளும் அலுவலர்களும் சுயமாகச் சிந்திக்கத் திராணியற்றவர்களாக அரசாங்கத்தின் அடிவருடிகளாக அவர்களைத் திருப்திப்படுத்துகின்ற அநாகரிகச் செயல்களில் ஈடுபட்டு வருவது வேதனைக்குரியது எனவும் அவர் தெரிவித்தார். காரைநகர் பிரதேச சபையின் கசூரினா சுற்றுலா மையத்தில் முதலமைச்சரின் அமைச்சின்...
யாழ்ப்பாணத்தில் நேற்று பெய்த கடும் மழை மற்றும் புயல் காற்று காரணமாக 200 வருடங்கள் பழமையான பாரிய மலை வேம்பு மரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. யாழ். பழைய பூங்கா வீதியில் உள்ள வடமாகாண மின்சாரசபை காரியாலயம் முன்பாக நின்றிருந்த மரமே சரிந்து விழுந்துள்ளது. இதனால் யாழ். மாவட்ட செயலகத்தை அண்மித்த வீதிகள் ஊடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, யாழ். மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரும், சுகாதார ஊழியர்களும் இணைந்து...
வீடியோ சட்டிங், குரல்வழி அழைப்பு மற்றும் கோப்புக்களை பரிமாறல் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக பேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷன் காணப்படுகின்றது. இதனை உலகளவில் சுமார் 1.3 பில்லியன் வரையானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறான நிலையில் குறித்த அப்பிளிக்கேஷனில் சில அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பயனர்கள் இந்த அப்பிளிக்கேஷனை இலகுவாக பயன்படுத்தக்கூடிய வகையில் மாற்றியமைக்கப்படவுள்ளது. இதன்படி சில அம்சங்கள் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை மற்றும் சில அம்சங்கள் தரப்பட்டுள்ள இடங்களில் இருந்து வேறு இடங்களில்...
ஜெனீவா தீர்மானத்தில் காணப்படும் சில விடயங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்துடன் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் அமைச்சரவை கூட்டத்தின் போதே அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தில் காணப்படும் சில விடயங்கள் குறித்து அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார் எதிர்வரும் மார்ச்மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையின்  அமர்வின் போது அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்...
சினிமாவில் படங்கள் நடித்த சில ஜோடிகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிபட்ட ஜோடி தான் விஜய்-திரிஷா. இவர்கள் இருவரும் இணைந்து 4 படங்கள் நடித்துள்ளார்கள், இப்போதும் மறுபடியும் கூட்டணி அமைப்பார்களா என்று ஏக்கம் ரசிகர்களிடம் உள்ளது. 96 படத்தின் மாபெறும் வெற்றியை கொண்டாடி வரும் திரிஷா ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் விஜய் குறித்து அவர் பேசும்போது, விஜய்யுடன் இணைந்து 4 படங்கள் நடித்திருக்கிறேன், அவருடைய அமைதி எனக்கு மிகவும் பிடிக்கும்....