நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார் அதர்வா. அது நல்ல வரவேற்பை பெற்றது.
அதற்கு முன்பு அவர் சோலோ ஹீரோவாக நடித்திருந்த செம போத ஆகாத படம் பெரிய நஷ்டத்தை தான் சந்தித்தது. முதல் இரண்டு ஷோ ரத்தானது, மோசமான விமர்சனங்கள் வந்ததால் படத்திற்கு 5 கோடி ருபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் இந்த படத்தை வாங்கி வெளியிட்ட எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் மதியழகனுக்காக தற்போது...
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
2004-ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பிராவோ இதுவரை 40 டெஸ்ட், 164 ஒருநாள் மற்றும் 66 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
செப்டம்பர் 2016 க்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காத பிராவோ தற்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
ஆனாலும், ஐபிஎல் மற்றும் உள்ளூர் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் சங்கத்துடன் ஏற்பட்ட மோதலால் அவர் அதிகமான...
வியன்னா பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்று போட்டியில், குரேஷியாவின் முன்னணி வீரரான போர்னா கோரிக் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இரண்டாவது சுற்று போட்டியில், குரேஷியாவின் முன்னணி வீரரான போர்னா கோரிக், பிரான்ஸின் லூகாஸ் பியூலியை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், போர்னா கோரிக் முதல் செட்டை 4-6 என்ற செட் கணக்கில் லூகாஸ் பியூலியிடம் இழந்தார்.
இதனைதொடர்ந்து, ஆக்ரோஷமாக மீண்டெழுந்த போர்னா கோரிக், 6-0, 6-4 என்ற...
ரோஹிங்யா முஸ்லிம்களின் படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மாநாட்டில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை தடுக்கும் செயன்முறையில் சீனா தோல்விகண்டுள்ளது.
மியன்மார் இராணுவ வீரர்களைக் கொண்டு ரோஹிங்ய முஸ்லிம்களைக் கொன்று குவித்த குற்றத்தை விசாரணை செய்வதற்காக 15 பேர் கொண்ட குழுவை அமைக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் கலந்துரையாடலொன்று நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது.
மியன்மாரின் விவகாரத்திலுள்ள உண்மைகளை வெளிக்கொண்டுவரும் நிகழ்ச்சித் திட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையினால் தெரிவுசெய்யப்பட்ட தலைவர் மர்சூக்கி தருஸ்மன் தலைமையில்...
2018 / 2019 ஆண்டின் சிவனொலிபாதமலை பருவகாலம் சிவனடிபாதமலை புனித பூமியில் பொலுத்தீன் மற்றும் பிளாஸ்டிக் இல்லாத சுற்றாடலை பாதுகாக்கும் நோக்கில் சகல யாத்திரிகளையும் வருகை தருமாறு நுவரெலியா மாவட்ட அரச அதிபர் ரோகன புஷ்பகுமார கேட்டுக் கொண்டுள்ளார்.
இம்முறை சிவனடிபாதமலை பருவகாலம் ஆரம்பமாவதையொட்டி கலந்துரையாடல் ஒன்றில் நல்லத்தண்ணி நகரின் பொது சுகாதார அதிகாரிகளின் கேட்போர் கூடத்தில் பொது சுகாதார அதிகாரிகள் , நல்லத்தண்ணி பொலிஸார், தேசிய நீர் வடிகால்...
தீபாவளி திருநாளை முன்னிட்டு அட்டன் நிவ்வெளி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் ஏற்பட்ட போக்குவரத்து தடையை நிவர்த்தி செய்யும் நோக்கில் அமைக்கப்பட்டுவரும் பாதையை செப்பனிடும் பணியை பொறியாளர் கே.எம்.திலக்கரத்ன நேரடியாக பார்வையிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்.
சம்பவ இடத்தை புவியியல் நிபுணர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர் அதன்படி அவர்களின் ஆலோசனைக்கு அமைய வீதியை தீபாவளிக்கு முன்னதாக மக்கள் பாவனைக்கு சீரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டவுள்ளதாக தெரிவித்தார்.
வவுனியாவில் பல கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட மலசலகூடத்தில் மது அருந்தும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதுடன் விடுதியாகவும் செயற்பட்டு வருகின்றதைக்காணக்கூடியதாக உள்ளது.
புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள குறித்த மலசலகூடம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவில்லை.
இதனை வவுனியா பழைய பேருந்து நிலையத்திலுள்ள பொது மலசலகூடத்தில் தொழில்புரிபவர்கள் மதுப்பாவனையிலும் சட்டவிரோத நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருவதுடன் விடுதியாகவும் செயற்படுத்திவருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக அமைக்கப்பட்டுள்ள புதிய மலசலகூடத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது.
இதனைத்திறந்து...
வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையினரின் கட்டுப்பாட்டுப்பகுதிகளிலுள்ள வீதியில் கைவிடப்பட்ட கட்டாக்காலி கால்நடைகளை அகற்ற இன்று முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத்தவிசாளர் து.நடராஜசிங்கம் ரவி தெரிவித்துள்ளார்.
வவுனியா மன்னார் வீதி நெளுக்குளம் பகுதியில் வீதிகளில் கைவிடப்பட்ட கட்டாக்காலி மாடுகள் தரித்து நிற்பதால் வாகனங்கள் பயணிப்பதில் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதுடன் வீதி விபத்துக்களும் இடம்பெற்று வருகின்றது.
இவ் விடயம் தொடர்பாக வினவியபோது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கைவிடப்பட்டுள்ள கட்டாக்காலி கால்நடைகளை...
சவுதி அரேபியாவிற்கு இலகுரக கவச வாகனங்களை விற்பனை செய்யும் 15 பில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தை ரத்துசெய்ய கனடா தீர்மானித்துள்ளது.
சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொலைசெய்யப்பட்டதன் பின்னணியில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இந்த அறிவிப்பை நேற்று (புதன்கிழமை) விடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் கருத்து வெளியிட்டிருந்த ஜனாதிபதி ட்ரூடோ, குறித்த ஒப்பந்தம் தொடர்பாக கணிசமான நிதி அபராதங்களை விதிக்கப்போவதாக குறிப்பிட்டிருந்தார்.
எனினும், கஷோக்கியின் கொலை மிருகத்தனமானதென்றும், அதற்கு தகுந்த விளைவுகளை கனேடியர்கள்...
அரச ஊழியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு காண்பது தொடர்பான அறிக்கை எதிர்வரும் 31ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் எஸ்.ரனுக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அறிக்கையின் மூலம் சம்பளம் அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் அமுலிலுள்ள சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்ற...