டாக்ஸி சேவையினை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் முயற்சியில் பல்வேறு நாடுகள் முனைப்புக்காட்டி வருகின்றன. இவற்றுள் சிங்கப்பூரானது மிக வேகமாக செயற்பட்டு வருகின்ற நாடாக காணப்படுகின்றது. இதன் அடிப்படையில் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டில் முதன் முறையாக ஏர் டாக்ஸி சேவையினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்ரோன் விமானங்களின் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட இந்த ஏர் டாக்ஸிக்கள் ஒரே நேரத்தில் இரண்டு நபர்களை ஏற்றிச் செல்லக்கூடியன. அதே நேரத்தில் ஒரே பறப்பில் சுமார் 30 கிலோ...
பல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு உலகின் பிரம்மாண்டமான வீடியோ பகிரும் தளமாக யூடியூப் விளங்கி வருகின்றது. இத்தளமானது காலத்தின் தேவைக்கு ஏற்ப பல புதிய தொழில்நுட்பங்களை உட்புகுத்தி மேம்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு அங்கமாக தற்போது உட்பொதிந்த (Embedded) சப்ஸ்கிரைப் பொத்தானை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வீடியோக்களை பார்வையிட்டுக்கொண்டிருக்கும்போது குறித்த பொத்தான் வீடியோவின் மீது காட்சியளிக்கும். எனவே குறித்த வீடியோ தரவேற்றம் செய்யப்பட்டுள்ள சேனலை பயனர்கள் இலகுவாக சப்ஸ்கிரைப் செய்துகொள்ள...
கொழும்பின் பல பகுதிகளை இணைக்கும் வகையில் இலகு ரயில் சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது. பொது போக்குவரத்தில் ஈடுபடும் மக்களின் நலன் கருதி ரயில் சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பின் ஊடாக ஏழு ரயில் வீதிகள் ஊடாக இந்த சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் மாதவ வைத்யரத்ன தெரிவித்துள்ளார். 07 ரயில் வீதிகளில் ஒரு வீதியை ஜப்பான் நிதியுதவியுடன் ஜெய்க்கா நிறுவனமும், ஏனைய 6...
நிலவும் மழையுடனான காலநிலையினால் தெதுருஒயாவின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. தெதுறு ஓய நீர் நிலையில் இன்றைய தினம் 4 வான்கதவுகள் திறக்கப்பட உள்ளதால் தெதுறு ஓய ஆற்றின் அயலில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். பாரிய அளவு நீர் வர வாய்ப்பில்லை என்பதால் பெரும் சேதங்கள் ஏற்பட சந்தர்ப்பம் இல்லாத போதும் கால்நடைகளை பாதுகாக்கவும், ஆற்றில் குளிப்பதில் அவதானமாக இருக்கவும் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை பஸ்  நிலையத்திற்கு முன்பாகவுள்ள கட்டடத்தின் மீது வேகமா  வந்த வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து நேற்றிரவு 10. 20 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இவ்விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான வேனின் சாரதி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பஸ் நிலையத்திற்கு முன்பாகவிருந்த சிறிய கடைக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நகர் நிருபர்-   குருநாகல் மறைமாவட்டத்தின் கல்கமுவ பங்கிலுள்ள மகா கல்கமுவ என்னும் இடத்தில் உள்ள 'யோசவ் வாஸ்' இன் அற்புத சிலுவை இன்று (23) செவ்வாய்க்கிழமை மன்னார் மறை மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்;கிழமை (23) காலை யாழ்ப்பாணம், மறை மாவட்டத்தின் அருட்பணி எல்லைப் பகுதியான முழங்காவில் பங்கு மன்னார் மறைமாவட்டத்தின் அருட்பணி எல்லைப் பகுதியான தேவன்பிட்டிப் பங்கு ஆகியவற்றின் மையப் பகுதியில் மன்னார் சங்குப்பிட்டி பிரதான பாதையில்...
  தமிழ் மக்களின் தனித்துவத்தின்பால் பற்றுள்ளவர்கள் அனைவரும் வேறுபாடுகளைக் களைந்து, மனித உரிமைக் கோட்பாடுகளை மனதில் நிறுத்தி, கொள்கை அடிப்படையில் ஓரணியில் திரள வேண்டும். காலாதி காலமாக நாம் வலியுறுத்தி வந்த கொள்கைகளின் அடிப்படையில் பிரிக்கப்படாத வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றை அடைவதற்கு நீங்கள் யாவரும் முன்வரவேண்டும் என்று அழைக்கின்றேன். அது முடியாது என்று முணுமுணுக்கும் முக்கியஸ்தர்களின் முனகல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு அறைகூவல்...
  சி. வி. விக்னேஸ்வரன் கொழும்பு புதுக்கடையில்  அக்டோபர் 23, 1939 பிறந்தவர் விக்னேஸ்வரன். இவரது பெற்றோர் கனகசபாபதி விசுவலிங்கம், ஆதிநாயகி யாழ்ப்பாணம், மானிப்பாயில் பிறந்தவர்கள். தந்தை ஒரு அரச ஊழியர், இலங்கையின் பல மாவட்டங்களிலும் பணியாற்றியவர். விக்னேசுவரனுக்கு இரு சகோதரிகள். தனது ஆரம்பக் கல்வியை குருநாகல்கிறைஸ்ட்ச்சேர்ச் கல்லூரியிலும், பின்னர் அனுராதபுரம் திருக்குடும்ப மடப் பள்ளியிலும் பயின்றார். தனது 11வது அகவையில் விக்னேஸ்வரன் கொழும்பு றோயல் கல்லூரியில் இணைந்து உயர் கல்வி பெற்றார் லண்டன் பல்கலைக்கழக இளங்கலைப் பட்டம் பெற்று, கொழும்பு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார்....
சிலாபம் கடலில் மீன்பிடிக்கச் சென்றவரின் வலையில் சிக்கிய டொல்பின் மீனை வெட்டிக் கொன்று உணவிற்காக விற்பனைக்கு கொண்டு செல்கையில் குறித்த நபர் மீனவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவனரால் கைது செய்யப்பட்டுள்ளார் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் சிலாபம் கடற்கரையோரப் பகுதியில் வசிக்கும் மீனவர் ஆவார். சுமார் 25 கிலோ எடையுடைய வெட்டிய நிலையிலிருந்த டொல்பின் மீனும், மீன்பிடிக்காக பயன்படுத்தப்பட்ட படகும் இயந்திரமும் கைப்பற்றப்பட்டதாகவும் சந்தேகநபர் சிலாபம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருகோணமலை பன்குளம் பாடசாலை மாணவி அவரது காதலனால் ஏமாற்றப்பட்டு கொலை செய்து ஏரிக்கப்பட்ட வழக்கில் கொலை செய்யப்பட்ட மாணவியின் காதலனுக்கு மரண தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்பளித்துள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் திகதி  திருகோணமலை பன்குளம் பாடசாலை மாணவியான டில்ஷானி காணாமல்போன நிலையில் அவரது உடல் எச்சங்கள் எரிக்கப்பட்ட நிலையில் காட்டுப் பகுதியில் நீர் குட்டையொன்றில் இருந்து...