சினிமாவில் சூப்பர் ஸ்டார் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அப்படி பல கலைஞர்களை வைத்தும் சொல்லலாம். அந்த வகையில் வெறுப்பவர்கள் யாரும் இல்லாமல் ரசிகர்கள் எல்லோராலும் கொண்டாடப்படுபவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. இவரின் ஒவ்வொரு காமெடிகளும் தான் இப்போது உள்ள மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு உதவுகிறது. இன்று காலை வடிவேலுவின் மகள் கலைவாணிக்கு, ராமலிங்கம் என்பவருடன் மதுரையில் திருமணம் நடந்துள்ளது. அவர்களின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் டீசர் சில மணிநேரத்திற்கு முன் வெளியானது. பயங்கர அரசியல் வசனங்களும் ஸ்டைலான விஜய்யையும் டீசரில் பார்க்க முடிந்தது. அதிலும் குறிப்பாக சண்டைக்காட்சிகள் தான் தாறுமாறாக இருந்தது. ஆனால், கடைசியில் விஜய் ஒருவரை தோளில் சுமந்து அடிப்பது போல இருக்கும் காட்சி இதிலிருந்து தான் எடுக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சுற்றி வருகிறது. அல்லு அர்ஜுனின் படமான அந்த சண்டை காட்சியில் வேறுபாடுகள் அவ்வளவாக தெரியவில்லை. அந்த...
விஜய் நடித்து அடுத்ததாக திரைக்கு வர இருக்கும் சர்கார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தை வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவுள்ளது, சன்பிக்சர்ஸ் நிறுவனம். இந்நிலையில் இந்த படத்தில் டீசர் சற்று நேரத்திற்கு முன் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. தற்சமயம் எங்கு பார்த்தாலும் இந்த படத்தின் பேச்சாக தான் உள்ளது. அப்படிப்பட்ட இந்த டீசரில் என்னென்ன விஷயங்கள் ஒளிந்துள்ளன, தெரியுமா... 1. ஆரம்பத்தில் வரும் அந்த பயங்கரமான பெண் குரல்...
வெளிநாடுகளில் கழிவுப் பொருட்களை இறக்குமதி செய்வதை சீனா தடைசெய்துள்ள நிலையில், அது பிரித்தானியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனைய நாடுகளும் இந்த நடைமுறையை விரைவில் மேற்கொள்ளுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், கழிவுப் பொருட்களை மீள்சுழற்சி செய்வதற்கான செலவு பிரித்தானிய உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக பிளாஸ்டிக் மற்றும் கலப்பு கடதாசிகளின் இறக்குமதியை சீனா தடைசெய்தமை, நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றதென உள்ளூராட்சி மன்றங்கள் குறிப்பிட்டுள்ளன. உள்ளூராட்சி மன்றங்களின் சங்கத்தின் கருத்துக்கணிப்பின் பிரகாரம், கடந்த வருடத்தில் மாத்திரம் மீள்சுழற்சிக்கான...
கனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டதை அடுத்து பல்லாயிரக்கணக்கான கஞ்சா குற்றவாளிகள் விடுதலையாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கஞ்சாவை பயன்படுத்துவதற்கும், அதனை விற்பனை செய்வதற்கும் அனுமதியளிக்கும் சட்டம் கனடாவில் நடப்பிற்கு வந்துள்ளது. கஞ்சா தொடர்பிலான சிறு குற்றங்களில் தண்டனை பெற்றுள்ளோருக்கு பொது மன்னிப்பினை வழங்குவதை விரைவுபடுத்தவுள்ளதாக லிபரல் அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், இந்த எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டின் தரவுகளின்படி, கஞ்சா போதைப் பொருளை தம்முடன் வைத்திருந்ததாக ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான கனேடியர்கள் மீது குற்றச்சாட்டுக்ள...
மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான குடியேற்றவாசிகள் மெக்ஸிகோவின் தெற்கு எல்லையில் உள்ள நுழைவாயிலை உடைத்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றுள்ளனர். குவாட்டமாலா எல்லை தடுப்புக்களை உடைத்து நுழைந்த குடியேற்றவாசிகள், ராணுவம் இல்லாத பகுதியில் கலவர தடுப்பு பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். குடியேற்றவாசிகளை அமெரிக்காவிற்குள் நுழைய விடாமல் தடுத்து வைத்தமைக்காக நேற்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மெக்ஸிகோவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். வன்முறை மற்றும் வறுமையால் தாங்கள் உயிர்த் தப்பி வருவதாக ஹொண்டுராஸை...
ஆப்கானிஸ்தானில் பலத்த பாதுகாப்பு மற்றும் தாலிபான்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாடாளுமன்ற பொது தேர்தலில் மக்கள் வாக்களித்து வருகின்றனர். நாடாளுமன்றத்தின் 250 ஆசனங்களுக்காக பல பெண்கள் உட்பட 2,500 பேர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். பாதுகாப்பு காரணங்களால் 30 சதவீத வாக்குச்சாவடிகள் மூடப்பட்டுள்ளன. தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்ட காலப்பகுதியில் இருந்து இதுவரை 10 வேட்பாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தநிலையில், நேற்று கந்தஹார் மாகாணத்தில் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதால், அங்கு வாக்கெடுப்பு நடவடிக்கைகள்...
எமது சமூகத்தின் முன்னேற்றத்தில் இதுவரைகாலமும் தமிழ் அரசியல் தலைவர்கள் செய்த பிழைகளை நான் ஒருபொதும் செய்யமாட்டேன் என, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். நல்லூரில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “நான் அரசுடன் இணைந்து கொண்டு அபிவிருத்திகளை மேற்கொள்ளாமல் இருக்கின்றேன் என பலரும் குற்றம் சுமத்துகின்றனர். ஆனால் என்னை பொறுத்தவரை தமிழ் மக்களுடைய உரிமைகளையே முதலில் உறுதிசெய்ய...
சிறுபான்மையினர் எனக்கு எதிராக செயற்பட எந்தவித நியாயமும் இல்லையென, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனநாயக ரீதியான, சிறுபான்மையினரின் நம்பிக்கையை வென்ற ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் என கூட்டு எதிரணி கூறிவருகின்றமை குறித்து வினவிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “நாம் சிறுபான்மையினரைக் காப்பாற்றுவதற்கே யுத்தம் செய்தோம். அவர்களுக்கு எதிராக அல்ல. நான் இராணுவத்தில் 20 வருடங்கள் சேவையாற்றியுள்ளேன். இராணுவம் தான்...
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (சனிக்கிழமை) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். இதன்போது இருநாட்டு உறவுகளை மேலும் கட்டியெழுப்புதல், தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் பிரதமர் இன்று சந்திக்கவுள்ளார். அந்தவகையில் இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை...