இந்திய அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது ஏமாற்றம் அளிப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார். இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் 21ம் திகதி துவங்குகிறது. இந்த தொடரில் வழக்கம் போல இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் சேர்க்கப்படவில்லை. சகால், குல்தீப் ஆகியோரின் வருகையால்,...
வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான 42 ஆவது வருடாந்த அணிக்கு ஏழு பேர் கொண்ட ஹொக்கி போட்டி 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு பி.சரவனமுத்து விளையாட்டு அரங்கில் இடம்பெறும் என சங்கத்தின் தலைவர் மஞ்சுல விஜயமான்ன தெரிவித்தார். இப் போட்டி தொடர்பான செய்தியாளர் மாநாடு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: இப்போட்டிக்கு பிரதம அதிதியாக இலங்கை இரானுவ ஹொக்கி சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவும் அதிதியாக...
உலகில் அழிந்துவரும்  இனங்களில்,  சிங்கள இனம் மூன்றாம் இடத்தில் காணப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். அரநாயக்க பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் அமெரிக்க நிபுணர் ஒருவர் தலைமையிலான குழுவினரால் நடத்தப்பட்ட ஆய்வின்போதே இவ்விடயம் கண்டறியப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி அமெரிக்காவின் செவ் இந்தியர்கள், எஸ்கிமோக்கள் மற்றும் சிங்களம் ஆகிய இனங்களே உலகில் அழிவடைந்து வரும் இனங்களாக...
இந்தியாவின் ‘றோ’ அமைப்பு தன்னை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக எவ்வித கருத்தையும் கூறவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக கொலை சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படுவது திரிவுப்படுத்தப்பட்ட ஒன்றெனவும் அவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி விரைவான மறுதலிப்பை பாராட்டுவதாகவும்  பிரதமர் நரேந்திர மோடி மேலும் தெரிவித்துள்ளார். குறித்த விடயம்...
வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் தனது 2018 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் யா/ அல்லைப்பிட்டி றோ.க.வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஆறு மாணவர்களுக்கும், யா/ அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 21 மாணவர்களுக்குமாக மொத்தம் 27 மாணவர்களுக்கு ரூபா நான்கு இலட்சத்து ஐந்நூறு பெறுமதியான துவிச்சக்கர வண்டிகளும்,  யா/ அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்திற்கு  ரூபா எழுபத்து ஐந்து ஆயிரம் பெறுமதியான கதிரைகளும் கொள்வனவு...
கனடா வர்த்தக ரீதியாக கஞ்சா போதைப் பொருளை விநியோகிக்கும் முதலாவது நாடாக உருப்பெற்றுள்ளது. நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) தொடக்கம் Weed எனப்படும் கஞ்சா மூலிகை, கேளிக்கை மற்றும் பொது நுகர்வுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த நடவடிக்கை குறித்து டொரொண்டோ மற்றும் வான்கூவர் போன்ற பெரு நகரங்களில் எதிர்ப்பு குரல்களும் வலுப்பெற்று வருகின்றமை கவனிக்கத்தக்கது. அந்த நகரங்களில் கஞ்சா போதைப் பொருளை விநியோகிக்கும் எந்தவொரு வியாபார நிலையமும் திறந்துவைக்கப்படவில்லை. ஆனால், கனடாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள...
உலகமயமாக்கலின் விளைவே கிரைமிய கல்லூரி தாக்குதலென ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையங்களில் சமூக மாற்றங்கள் தொடர்பாக அன்றாடம் தெரியவருகின்றதென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி புட்டின், குறிப்பாக அமெரிக்காவில் பாடசாலைகளிலேயே இவ்வாறான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் ஆரம்பித்துவிடுகின்றன என சுட்டிக்காட்டினார். கிரைமியாவிலுள்ள கல்லூரியொன்றில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், துப்பாக்கிதாரியான கல்லூரி மாணவன் உள்ளடங்களாக 21 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 15 மாணவர்களும் 5 ஆசிரியர்களும் உள்ளடங்குகின்றனர். 18...
அழகிய இயற்கை வனப்பையும், செழுமையையும் கொண்டிருந்த ஆப்கானிஸ்தான் இன்று வறண்ட கரடு முரடான தளத்தை உரிமையாக்கிக் கொண்டிருக்கின்றது. மோசமான வறட்சி ஆப்கானிஸ்தானில் பலரின் வாழ்க்கையை, அவர்களின் எதிர்காலத்தை மிக மோசமாக சிதைத்திருக்கிறது, குறிப்பாக பலரை இடம்பெயரச் செய்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களிடையே பெரும் மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியுள்ளது. அரச தரப்பினருக்கும், தலிபான்களுக்கும் இடையேயான யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்தவர்களை விட வறட்சியின் காரணமாக தங்களின் வசிப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு சென்றவர்களே அதிகமாக உள்ளனர்....
விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள 96 படம் அனைத்து இளைஞர்களையும் கவர்ந்துள்ளது. படம் ரசிகர்களின் பள்ளி பருவ காதலை நினைவு படுத்துவதாக பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆவதாகவும், அதில் சமந்தா-நானி ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இது ரீமேக் ஆகவாய்ப்பில்லை என சமந்தா கூறியுள்ளார். அவரே ட்விட்டரில் த்ரிஷாவின் நடிப்பை பாராட்டி தள்ளியுள்ளார். நடிப்பதற்கு மிக கடினமான கேரக்டர்...
சர்கார் டீஸருக்காகத்தான் விஜய் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் வெயிட்டிங். மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் புதிய சாதனைகள் அது படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் தற்போது டீசரின் சில நொடிகள் லீக் ஆகி இணையத்தில் உலா வருகிறது. மேலும் இது யூத் படத்தில் வரும் பழைய வசனம் தான் என்பதால் இது போலியானதோ என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. "இந்த உலகத்துல காத்து, தண்ணி, வானம் - இந்த மூணும் எல்லாருக்கும் பொது....