விஜய்யின் சர்கார் தான் இன்று தமிழ் சினிமாவின் ஹாட் விஷயம். மாலை தான் டீஸர் வெளியாக இருக்கிறது ஆனால் காலை முதலில் இருந்தே ரசிகர்கள் தங்களது எதிர்ப்பார்ப்பை வெளிக்காட்டி வருகின்றனர்.
பிரபலங்கள் பலரும் இன்று சர்கார் டீஸர், ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என பதிவு செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் ரசிகர்களின் ஆவலை பார்த்த சில திரையரங்குகள் விஜய்யின் சர்கார் டீஸரை திரையிட முடிவு செய்துள்ளனர்.
எந்தெந்த திரையரங்குகளில் சர்கார் டீஸர்...
சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடிய 'வாயாடி பெத்த புள்ள" பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் அவர் தயாரித்துள்ள முதல் படம் 'கனா'. நடிகர், பாடகர், பாடலாசிரியர் எனப் பலமுகங்கள் கொண்ட அருண்ராஜா காமராஜ், இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இவர், சிவகார்த்திகேயனின் கல்லூரித் தோழர்.
கிரிக்கெட் வீரராக ஆசைப்படும் மகள் - அவருடைய ஆசையை நிறைவேற்றி வைக்கப் பாடுபடும் அப்பா....
நமது வீட்டின் முதன்மையான மின் சாதனங்களில் ஃபிரிட்ஜூம் அடங்கும். நாம் வெட்டிய காய்கறி மீந்தால் கூட அதனை ஃபிரிட்ஜில் வைத்து அடுத்த முறை பயன்படுத்தி கொள்வோம். காய்கறிகள், பழங்கள், உணவு பொருட்கள், ஸ்னாக்ஸ்கள் இப்படி பல வகையான பொருட்களை நாம் இப்போதெல்லாம் ஃபிரிட்ஜில் தான் வைக்கின்றோம். ஆனால், ஃபிரிட்ஜில் வைக்க கூடாத பலவகையான பொருட்களும் இருக்கின்றன.
உதாரணத்துக்கு தக்காளி, உருளை கிழங்கு, வெங்காயம், பூண்டு போன்றவை இந்த வரிசையில் அடங்கும்....
பிக் பாஸ் முதல் சீஸனில் டைட்டில் வின்னர் என்னவோ ஆர்வ்தான். ஆனால் அந்த ஷோ வழியாக அதிகப் புகழ் ப்ளஸ் அதன் தொடர்ச்சியாக விளம்பரப் படங்கள் மற்றும் வெளிநாடுகளில் கலைநிகழ்ச்சிகள் மூலம் பணம் என கிடைத்ததெல்லாம் ஓவியாவிற்கு தான்.
பிக் பாஸ் முதல் சீஸன்1 முடிவடைந்து ஒருவருடம் ஆகிவிட்ட நிலையிலும் இன்று வரை ஓவியாவின் கால்ஷீட் பிஸி. முன்னணி இயக்குநர்கள், ஹீரோக்களுடன் வொர்க் பண்ணுகிற மாதிரி தெரியலையே எனக் கேட்காதீர்கள்.
மேடம்...
வவுனியா, ஓமந்தை பொலிசாரின் நடவடிக்கையின்போது இன்று அதிகாலை 1670 போதை வில்லைகளுடன் திருகோணமலையைச் சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 1.30 மணியவில் யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை சென்றதனியார் பேருந்தை ஓமந்தை பகுதியில் வழிமறித்த பொலிசார் அதில் சென்ற இளைஞர்கள் இருவரை சோதனைக்குட்படுத்திய போது சட்டவிரோத போதை வில்லைகளை தமது உடமையில் வைத்திருத்த 23, 25 வயதுடைய திருகோணமலையைச் சேர்ந்த இருவரைக் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து...
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ விஷேட மேல் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜராகியுள்ளார்.
டீ.ஏ. ராஜபக்ஷ சிலை மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உட்பட 7 பேரிற்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்காக அவர் விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
ஜனாதிபதி விருது பெற்ற சாரணரும், சிறந்த சமூக வேவையாளருமான சாய்ந்தமருது -11, அல்-ஹிலால் வீதியில், இல. 406 ஏ எனும் முகவரியில் வசிக்கும் பீ.எம். ஆஷிக்(வயது 30) என்பவர் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்.
இவரின் சிறுநீரகங்கள் அவசரமாக மாற்ற வேண்டியுள்ளது. இதற்கு பெருந்தொகைப் பணம் தேவையாகவும் உள்ளது. இவரின் குடும்பம் மிகவும் சாதாரண குடும்பம் என்பதால் பணத்தைப் புரட்டுவதற்காக பலவழிகளிலும் முயற்சி செய்து வருகின்றனர்.
சமூக செயற்பாடுகளில் தன்னை முழுமையாக...
நாடு முழுவதும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த காலநிலை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்குமெனவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) பெரும்பாலான பகுதிகளில் பி.ப 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் வாய்ப்பு அதிகமாக காணப்படுவதாகவும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
வடக்கு, மற்றும் வடமேல் மாகாண கரையோரப் பகுதிகளில் காலை...
வழக்கு தாக்கல் செய்யப்படாதுள்ள அரசியல் கைதிகள் சிலரை விடுதலை செய்வது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசியல் கைதிகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் கைது செய்யப்பட்டவர்களில் தண்டனைகள் வழங்கப்பட்ட கைதிகள்...
பயங்கரவாத குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கை மாணவன் மொஹமட் நிஷாம்தீன் அக்குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் இதற்கு முன்னர் அவுஸ்திரேலிய நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பயங்கரவாத குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 25 வயதான மொஹமட் நிஷாம்தீன், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் சார்பாக சிட்னி நகரை குண்டு வைத்துத் தகர்த்தல் மற்றும் அவுஸ்ரேலியாவின் முன்னணி அரசியல்வாதிகளை படுகொலை செய்தல் ஆகிய குற்றச்செயல்களுக்கான கடந்த...