எரிபொருள் விலை தொடர்பில் அடுத்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள சூத்திர ம திப்பீட்டின்படி எரிபொருளின் விலை குறைவடையும் சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை 6 டொலர்களினால் குறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பினால் ஏற்பட்ட எரிபொருள் விலையேற்றமானது பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் குறைவாகவே காணப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்துடன் முகப்புத்தகத்தில் பதிவிடப்பட்ட வாழ்த்துச் செய்தியை லைக் செய்து பகிர்வு செய்த குற்றச்சாட்டில் கைதான தமிழ் இளைஞன் ஒருவர் 10 மாதங்களுக்குப் பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனை பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன நேற்று அனுமதியளித்துள்ளார்.
பிரபாகரனின் புகைப்படத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காக இரத்தினபுரியைச் சேர்ந்த இரு இளைஞர்களை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைதுசெய்து, சிறையில்...
சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் கொலை செய்யப்பட்டு 18 வருடங்கள் கடந்துள்ளது.2000 ம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதி இரவு 10 மணியளவில் ஆயுதம் தாங்கிய குழுவினர் துப்பாக்கி சூடு நடத்தி, கைக்குண்டு வீசி நிமலராஜனை அவரது வீட்டில் வைத்தே படுகொலை செய்தனர். அப்போது நிமலராஜன் வீரசேகரி பத்திரிகைக்கு செய்தியொன்றை எழுதிக் கொண்டிருந்தார்.
1983ம் ஆண்டு இனக்கலவரத்தில் தாக்குதலுக்கு உள்ளான தமிழ் மக்களில் நிமலராஜனும் அவரது குடும்பத்தினரும் அடங்குகின்றனர். அரசாங்க அச்சகத்தில்...
மன்னார் நகர் நிருபர்
புளுஸ் அபிவிருத்தி அமைப்பினால் காலை 08.00 மணியளவில் மன் கணேசபுரம் ஆரம்ப பாடசாலையில் பாடசாலை மாணவர்களுக்கு உதவி வழங்கும் விசேட நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி.கவிதா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மன்னார், மடு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி. S.S.செபஸ்ரியான் அவர்கள் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினராக மடு கல்வி வலயத்தினை புதிதாய் பொறுப்பேற்க இருக்கும் திரு.சத்தியபாலன் மற்றும் மாகாண கல்வி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ஆனந்தராஜ்...
-மன்னார் நகர் நிருபர்-
வடக்கில் முப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்களின் சுமார் 87 ஏக்கர் காணிகளை விடுவிக்க புதன் கிழமை(17) அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை புதைகுழி பகுதியின் அருகில் அமைந்திருந்த இராணுவத்தின் வசம் காணப்பட்ட 5 ஏக்கர் காணிகள் புதன் கிழமை மாலை மன்னார் பிரதேசச் செயலாளரிம் கையளிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேசச்செயலக காணி அலுவலகர் க.வசந்தன் தெரிவித்துள்ளார்.
1990 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தின்...
மன்னார் நகர் நிருபர்
மன்னார் அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் மற்றும் மடுக்கல்வி வலய அதிகாரிகள் இணைந்து மன்னார் மற்றும் மடு வலய கல்வி பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வு பெற இருக்கும் திருமதி.சுகந்தி செபஸ்ரியன் அவர்களுக்காக ஏற்பாடு செய்திருந்த மணிவிழா நிகழ்வானது 18-10-2018 நேற்று புதன்கிழமை மாலை மன்னார் பிரதான பாலத்தில் இருந்து ஆரம்பமாகி தேசிய பாடசாலைகளின் பான்ட் இசையுடன் விருந்தினர்களுடன் அழைத்துவரப்பட்டு சிறப்பாக இன்னியம் முழங்க விழாமேடையில் தமிழ்...
மன்னார் நகர் நிருபர்
மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 'தேக்கம்' கிராம மாணவர்கள் தமக்கு உரிய முறையில் பேரூந்து சேவைகள் இடம் பெறுவதில்லை எனவும் இதானல் தாம் தாமதித்தே பாடசாலைக்கு செல்வதாகவும் கூறி குறித்த கிராம மாணவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் மன்னார்-மதவாச்சி பிரதான வீதி மாதா கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியில் பேரூந்தை இடை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த மாணவர்களின் போராட்டத்திற்கு பலனாக இன்று (19) வெள்ளிக்கிழமை...
விஜய்யின் சர்கார் படத்திற்கும் கத்தி, துப்பாக்கி படத்திற்கும் இவ்வளவு தொடர்பு உள்ளதா!
Thinappuyal News -
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ளது சர்கார் படம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் நாளை பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக உள்ளது.
இதனால் தளபதி ரசிகர்களின் கொண்டாட்டம் கடந்த சில தினங்களாகவே உச்சத்தில் இருந்தது. அதுவும் இன்று மேலும் அதிகமாகவே உள்ளது.
இந்நிலையில் ஏ.ஆர்.எம் இயக்கத்தில் தளபதி ஏற்கனவே நடித்திருந்த கத்தி, துப்பாக்கி படங்களுக்கும் இந்த சர்கார் படத்திற்கும் பாடலின் வரிகள் மூலம் அழகாக தொடர்புப்படுத்தியுள்ளதை பாடலாசிரியர் விவேக் சுட்டி...
சிங்களமக்களை பொறுத்தமட்டிலும் தமிழ் மக்களை பொறுத்தமட்டிலும் தேசியத்தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் அதுதான் இதுவரை பயத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் அதிரடிக்கருத்து
Thinappuyal News -
வடமாகாண சபையை MP சுமந்திரனே உங்களை ரவுடிக்கும்பலாக பயன்படுத்தி முதலமைச்சர் உற்பட பலருக்கு வேட்டு வைத்தாக கூறப்படுகிறது இது உண்மையா?-கேசவன் சயந்தன் வட மாகாணசபை உறுப்பினர் தினப்புயல் களம் நேர்காணலின் போது- part- 1
வடமாகாண சபையின் ஆளும் கட்சியில் இருப்பவர்கள் அரசியலில் சழைத்தவர்கள் அல்ல ஊழல் நிறைந்த வடமாகாண சபையாக கான்பித்தது சரியாக நடத்முடியாமல் போனதற்கு முதல் அமைச்சர் விக்னேஸ்வரனே பெறுப்பேற்கவேண்டும்-part-2
யாழ்ப்பாணத்தில் இயங்கி வருகின்ற ஆவா குழூவிற்று நீங்கள்...
விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் கவுதம்மேனன் - சிம்பு - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறது.
`விண்ணைத்தாண்டி வருவாயா', அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து கவுதம் மேனன் - சிம்பு மூன்றாவது முறையாக இணைவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்கள்.
அந்த படம் `விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்பட்டது. இந்தப்படத்தில் நடிக்க முதலில் மாதவனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், முதல் பாகத்தில் நடித்த சிம்புவே...