யாழ்ப்பாணம் - கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியைச் சேர்ந்த 25 மாணவர்கள் அவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வைரஸ் காய்ச்சல் காரணமாகவே இவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. யாழ். சுகாதார பிரிவினர் நேற்று கல்லூரியில் மேற்கொண்ட பரிசோதனையின் போது குறித்த மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. பின்னர், குறித்த மாணவர்களை உடனடியாக கல்லூரியில் இருந்து வெளியேற்றுமாறு சுகாதார பிரிவினர் கல்லூரி நிர்வாகத்திற்கு அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து, வைரஸ் காய்ச்சலால்...
வவுனியா - செட்டிகுளம் பகுதியில் அண்மையில் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் வழங்கிவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்வதற்கு முயன்றுள்ள தாயும் பிள்ளைகளும் அதிஷ்டவசமாக காப்பாற்றப்பட்டனர். இதையடுத்து விஷம் வழங்கி தற்கொலைக்கு முயன்ற தாயாருக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனைகள் இடம்பெற்று வருவதாக வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எஸ்.எம்.என்.தென்னக்கோன் இன்று வவுனியாவில் தற்கொலைகளுக்கு எதிராக இடம்பெற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். இது...
யாழ் பல்கலைக்கழகத்தின்  வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி ரி. மங்களேஸ்வரனின் பதவிக்காலம் 3 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. வவுனியா வளாகத்தின் வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக செயற்பட்டு வரும் கலாநிதி ரி. மங்களேஸ்வரனின் சேவைக்காலம் அண்மையில் முடிவடைந்த நிலையில் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரனினால் 3வருடங்களுக்கான கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. வவுனியா வளாகத்தின் வளர்ச்சிக்கு பல்துறைகளினாலும் தனது பங்களிப்பை மேற்கொண்டு வரும் கலாநிதி ரி. மங்களேஸ்வரன் வவுனியா வளாகத்தினை வன்னி பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு...
வாகன நகரசபைக்கு புதிய வாகனம் ஒன்று கொள்வனவு செய்ய வேண்டும் என தவிசாளர் இ.கௌதமன் சபையில் கருத்து தெரிவித்தையடுத்து சபையில் நீண்ட விவாதம் ஏற்பட்டது. வவுனியா நகரசபையின் இம் மாதத்திற்கான அமர்வு இன்று காலை தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது வவுனியா நகரசபையில் வாகனப் பற்றாக்குறை உள்ளதாகவும், தவிசாளர், உபதவிசாளர், செயலாளர் ஆகியோர் பாவிப்பதற்கு இரு வாகனங்கள் உள்ள போதும் அதில் ஒன்று அடிக்கடி பழுதடைவதால் புதிய வாகனம் ஒன்றை...
வழக்குத் தாக்கல் செய்யப்படாதுள்ள 102 தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தான், கடந்தவாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடியபோது இது குறித்து விளக்கமளிக்கப்பட்டதாக அவர் கூறினார். தமது விடுதலையை வலியுறுத்தி அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இது தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத்...
ஆர்ஜென்டீனாவின் புவனர்ஸ் அயேர்ஸில் நடைபெற்றுவரும் 3வது கோடைக்கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் நேற்றுமுன்தினம் (16) நடைபெற்ற பெண்களுக்கான 200 மீற்றர் இரண்டாம் நிலை ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கையின் நட்சத்திர இளம் குறுந்துர ஓட்ட வீராங்கனையான ஷெலிண்டா ஜென்சன் முதலிடத்தைப் பெற்று அசத்தினார். போட்டியை 24.07 செக்கன்களில் நிறைவுசெய்தஅவர், 1994ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை சார்பாக கனிஷ்ட வீரங்கனையொருவரால் 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் நிலைநாட்டப்பட்ட 3ஆவது அதி...
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்கள் உள்ளூர் போட்டியில் 571 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நார்த்தென் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் பெண்கள் கிரிக்கெட் போட்டியில் நார்த்தென் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணியும், போர்ட் அடிலெய்ட் அணியும் மோதின. நாணயச்சுழற்சியில் வென்ற நார்த்தென் டிஸ்டிரிக்ட்ஸ் அணி அதிரடியாக ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதமடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 249 ஓட்டங்கள் பெற்றனர். மெக் பர்லின் 80 பந்துகளில் 136...
அர்ஜென்டினா - பிரேசில் அணிகள் மோதிய நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி, சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. அர்ஜென்டினா அணியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி இடம்பெறாத நிலையில், பிரேசில் அணிக்காக நெய்மர் களமிறங்கினார். நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிட ஆட்டத்திலும் கோல் ஏதும் விழாமல் இரு அணிகளும் சமநிலை வகித்தன. காயம் காரணமாக வீணான நேரத்தை ஈடு செய்வதற்காக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் கடைசி விநாடிகளில் (93வது...
மன்னார் மாவட்டத்தினைச் சேர்ந்த இளம் கலைஞர்களினால் “தலைமன்னார் கருவாச்சி“ என்ற காணொளி பாடல் வெளியிடப்பட்டுள்ளது. தவநோத் என்ற இளம் எழுத்தாளரினால் இந்த காணொளி பாடலிற்கான வரிகள் எழுதப்பட்டுள்ளதுடன், ரொசான் என்ற வளர்ந்து வரும் இசையமைப்பாளர் இதற்கு இசையமைத்துள்ளார். https://youtu.be/ILiTFjPPbRs
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான சாத்தியமான வழிமுறையொன்றை அடுத்தவாரம் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளின் போது விசேட கூட்டமொன்றின் ஊடாக கண்டறியவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் நேற்று உறுதியளித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், எம். ஏ சுமந்திரன், வைத்தியர் எஸ்.சிவமோகன் மற்றும் கவீந்திரன்...