முகத்தில் சில பேருக்கு பள்ளம் மேடாக இருக்கும். இதற்கு காரணம் சருமத்தில் உள்ள துளைகளானது விரிந்துக் கொண்டே போவதால் அந்த இடங்களில் அழுக்குகள் மற்றும் எண்ணெய்கள் அதிகமாக சேர்கிறது. இதனால் அழகான முகத்தில் பள்ளம், மேடுகள் உருவாகின்றன. இவ்வாறு உருவாவதால் அவை முக அழகையே கெடுக்கும் வகையில் உள்ளது. ஆவி பிடிப்பதின் அவசியம் சருமத்தை சுத்தப்படுத்த ஆவிப் பிடிப்பது ஒரு சிறந்த வழியாகும். ஆவி பிடிப்பதன் மூலம், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள்...
யாழ்.திருநெல்வேலி பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி கிழக்கை சேர்ந்த 48 வயதுடைய யேசுதாசன் நிமல்ராஜ் எனும் நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் திருமணம் முடிக்காத நிலையில் தனிமையில் வசித்து வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை முதல் அவரின் நடமாட்டத்தை அயலவர்கள் அவதானிக்கவில்லை. இந்நிலையில் இந்த வீட்டில் இருந்து நேற்றைய தினம் புதன்கிழமை துர்நாற்றம் வீசியதை அடுத்து கோப்பாய் காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. அந்த தகவலின்...
நாடு முழுவதிலும் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய நிலைமை மேலும் தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்றைய வானிலை தொடர்பில் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்ததாவது, குறிப்பாக 20 மற்றும் 21ஆம் திகதிகளில் ஓரளவு அதிகரித்துக் காணப்படும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு, கிழக்கு, மேல் மற்றும் வட மேல் கரையோரப்...
வெற்றிமாறனின் கனவு படமான வடசென்னை படம் ஒரு வழியாக மக்களின் பார்வைக்கு வந்துவிட்டது. படத்தை பார்த்த அனைவரும் படக்குழுவை கொண்டாடி வருகின்றனர். USA வில் கூட படத்திற்கு மக்கள் நல்ல ஆதரவு தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இப்போது சென்னை மக்களும் வடசென்னையை கொண்டாடுகிறார்கள். முதல் நாளில் சென்னையில் மட்டும் படம் ரூ. 81 லட்சம் வசூலித்துள்ளது. இன்னும் 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்பதால் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை நடக்கும்...
தற்போது சீரியல் மோகம் பலரையும் ஈர்த்து விட்டது. டப்பிங் சீரியலை கூட யாரும் விட்டு வைப்பதாக தெரியவில்லை. அதில் நடிப்பவர்களுக்கும் வரவேற்பு கூடிவிட்டது. சுந்தர்.சி தயாரிப்பில் தற்போது நந்தினி சீரியல் போய்க்கொண்டிருக்கிறது. இதில் நித்யா ராம், ராகுல், சச்சு, ராணி கவிதா, விஜயகுமார் என பலர் நடிக்கிறார்கள். இதில் நந்தினி வீட்டில் கொலுவைக்கிறார்களாம். இதில் 9 நாளும் 9 கதைகள் சொல்லுபடியாக இருக்கும். இதற்காக பெரிய செட் போட்டிருக்கிறார்கள். அத்துடன் இதில்...
விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளிவந்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கின்ற 96திரைப்படம் தெலுங்கில் வெளிவரயிலுக்கின்றது. இந்த திரைப்படத்தின் தெலுங்கு உரிமையை தில் ராஜ் பெற்றுள்ளார். இந்நிலையில் தெலுங்கிலும் திரிஷாவே நடிப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சமந்தா நடிப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. 96 திரைப்படம் தற்போது வெளியாகி பெரும் வெற்றி நடைபோடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கஞ்சா போதைப்பொருளை சட்டபூர்வமாக்கிய தினத்தை கனடாவின் போதைப் பொருட்பாவனைக்கு எதிரான சமூக செயற்பாட்டாளர்கள் கறுப்பு தினமாகக் கருதியுள்ளனர். கனடிய நாடு முழுவதும் நேற்றைய (புதன்கிழமை) தினம் மீள் உருவாக்கத்திற்கு உகந்த கஞ்சா போதைப் பொருட்களை விற்பனை, கொள்வனவு செய்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதை அந்நாட்டு அரசாங்கம் சட்டபூர்வமாக்கியுள்ளது. இதனையிட்டு, போதைப் பொருட்பாவனைக்கு எதிரான சமூக செயற்பாட்டாளர்கள் குறித்த சட்டபூர்வ தினத்தை கனடிய மக்களின் கறுப்பு தினமாகக் கருதி அனுஷ்டித்துள்ளனர். போதைப் பொருட்பாவனையின் ஊடாக கனடிய...
இங்கிலாந்து சிறைச்சாலைகளில் இருந்து கடந்த மூன்று வாரங்களில் நான்கு சிறைக்கைதிகள் தவறுதலாக விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதிமுதல் 28ஆம் திகதிக்கு உட்பட்ட காலத்தில் HMP Norwich, HMP Onley, HMP Styal மற்றும் HMP Isis ஆகிய சிறைகளிலிருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் சிறைச்சாலைகளிலிருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறெனினும் இவர்கள் அனைவரும் மீள கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள நீதியமைச்சின் பேச்சாளர், அவர்கள் எவ்வளவு காலம் வெளியில்...
சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டதற்கு உறுதியான ஆதாரங்கள் இருப்பின் சமர்ப்பிக்குமாறு அமெரிக்கா அரசாங்கம், துருக்கியைக் கேட்டுக்கொண்டுள்ளது. துருக்கியின் இஸ்தான்புல் நகரத்திலுள்ள சவுதி தூதரகத்தில் ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டாரென துருக்கி தெரிவித்தமைக்கு காணொளி அல்லது ஏதேனும் உறுதியான ஆதாரங்களை வெளிப்படுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போது, அமெரிக்க ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சவுதி அரேபிய அரசாங்கமே குறித்த கொலையை மேற்கொண்டுள்ளது என...
ஹெய்டியில் அரசாங்த்திற்கு எதிராக மக்கள் திரண்டு மேற்கொண்ட பாரிய ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார்  தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எண்ணெய் உற்பத்தித் திட்டத்திற்காக வெனிசுவேலா நாடு ஹெய்டி அராங்கத்திற்கு வழங்கிய நிதியை அந்நாட்டு நிர்வாக உறுப்பினர்கள் தங்கள் சொந்த தேவைகளுக்குப் பயன்படுத்துவதை எதிர்த்து, நேற்று (புதன்கிழமை) ஹெய்டி மக்கள் தலைநகர் போட்டவ் பிரின்ஸில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களைக் களைக்கும் முகமாக அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸ் படையினரின் தலையீடு காரணமாக...