இரண்டு அரச வங்கிகள் மற்றும் முதலீட்டு சபையின் பணிப்பாளர் சபைகள் கலைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவை கலைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதற்கமைய இலங்கை வங்கி, மக்கள் வங்கி, மற்றும் இலங்கை முதலீட்டு சபை என்பவற்றின் பணிப்பாளர் சபைகளைக் கலைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தரவிட்டிருந்ததாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் கவனம் செலுத்தியே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும்...
அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு துணைபோகின்றது என மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் அரசாங்கம் நஷ்டஈடு வழங்காமல் இருக்கின்றது. தனது நாட்டுக்கு எதிராக ஆயுதப்போராட்டம் மேற்கொண்ட பயங்கரவாதிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் நாடு உலகில்...
யாழ்.மல்லாகம் நீதிமன்றத்திற்கு அருகில் ஹெராயின் போதை பொருளுடன் நடமாடிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மல்லாகம் நீதிமன்ற வீதியில் நேற்று(புதன்கிழமை) மாலை இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடுவதாக மல்லாகம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. குறித்த தகவலின் பிரகாரம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற போது, சந்தேகநபர் தப்பியோடியுள்ளார். இதனையடுத்து பொலிஸார் குறித்த நபரை விரட்டி சென்று கைது செய்து சோதனையிட்ட போது அவரது ஆடையில் இருந்து 665 மில்லிகிராம் போதை...
நாட்டை மீண்டும் அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச்செல்ல, அனைத்துப் புத்திஜீவிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கேட்டக்கொண்டுள்ளார். கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கோரியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனயின் இந்த பொறியியலாளர் மாநாடு போன்று இதற்கு முன்னர் எங்கும் இடம்பெற்றதில்லை. அதுவும் புதியக் கட்சி என்றவகையில், இதனை நடத்துவதில் நாம்...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம் இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்படுகிறது. நாளை அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இதன்போது இலங்கை இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இடம்பெறுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளது. அத்துடன் இலங்கை மற்றும் இந்திய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் இந்தியா செல்லும் பிரதமர் ரணில், அங்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடனும், அந்த நாட்டின் வர்த்தக மற்றும்...
காரை நகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து பிறேக் இன்மை காரணமாக அதன் முன்புறமாக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த உந்துருளியை மோதிய சம்பவம் யாழ் நகரில் முட்டாஸ் கடைச் சந்திக்கு அருகில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளனர். இந்த தரமற்ற சாரதியின் செயற்பாட்டால் உந்துருளியில் பயணித்த மாணவியையும் அவரைப் பாடசாலைக்கு ஏற்றிச் சென்ற தந்தையாரும் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம்...
கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிகள் இருவரின் மோசமான செயற்பாடு குறித்து தகவல் வெளியாகி உள்ளது. பாடசாலை மாணவிகளான இருவர், தமது காதலர்களுடன் தகாத நடவடிகையில் ஈடுபட்ட போது மாணவகளில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை செல்வதாக கூறி விட்டை விட்டு சென்ற மாணவிகள் இருவர், காதலர்களுடன் மீகொட பொலிஸ் பிரிவிலுள்ள ஒரு மாணவியின் வீட்டிற்கு சென்று தகாத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் ஒரு மாணவி மற்றும்...
இலங்கையில் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளை தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் அடையாளம் கண்டுள்ளது. நாடு முழுவதும் 15 ஆயிரம் இடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளதாக நிலையத்தின் பதில் இயக்குனர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக இலங்கையில் வீடு நிர்மாணிக்கும் போது உரிய ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் வீடுகள் நிர்மாணிக்கப்பட்ட இடங்களில் மண் சரிவு...
இலங்கையில் புதிய வகை எரிபொருள் ஒன்றை அறிமுகம் செய்ய பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. குறைந்த செலவில் முச்சக்கரவண்டிகளுக்கு பயன்படுத்தக் கூடிய வகையில் புதிய எரிபொருள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதற்கமைய ஒக்டேன் 87 அல்லது குறைந்த ஒக்டேன் ரக எரிபொருள் வகை ஒன்றை அடுத்த மாதம் சந்தையில் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையை விடவும் மிகவும் குறைந்த விலையில் புதிய எரிபொருள் விநியோகம் செய்யப்படவுள்ளது. புதிய எரிபொருள் முச்சக்கர...
13 மில்லின் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் ஹைபிரிட் சுதா என்றழைக்கப்படும் சமீர என்பவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் கொழும்பு குற்றவியல் அதிகாரிகளினால் பாதுக்கை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.