வவுனியாவில் சின்னக்குளம், நேரியகுளம் பகுதியில் நேற்றைய தினம் துப்பாக்கி ரவையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு 10 மணியளவில் கஞ்சா வியாபாரம் செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சின்னக்குளம் நேரியகுளம் பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற செட்டிக்குளம் பொலிஸார் வீட்டினை சோதனை செய்த போது கிணற்றின் அருகே இருந்து ரி - 56 ரக துப்பாக்கி ரவைகள் 22 வைத்திருந்ததன் குற்றச்சாட்டில் 52 வயதான மரியம்பிள்ளை ஜேசுதாஸ் ...
திருகோணமலை நகராட்சி மன்றத்திற்கு சொந்தமான மக்கெய்சர் விளையாட்டரங்கின் அமைந்திருந்த உடற்பயிற்சிக் கூடம் இன்று அதிகாலை ஏற்பட்ட தீயினால் எரிந்து நாசமானது.
இன்று காலை ஏற்பட்ட புகை காரணமாக சம்பவ இடத்திற்கு சென்ற பார்வையிட்ட நகரசபை அதிகாரிகள் தீ பரவியதை அறிந்து தமது தீயனைப்பு பிரிவின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டக்குள் கொண்டு வரபட்டது.
இருப்பினும் பல இலட்சம் பெருமதியான உடற்பயிற்சி உபகரணங்கள் இந்த தீயில் எரிந்துள்ளது.
மக்கெய்சர் விளையாட்டரங்கு புனரமைப்பு காரணமாக நீண்ட காலம்...
மின் துண்டிப்பில் ஆர்வம் காட்டும் இலங்கை மின்சார சபையினர் புதிய இணைப்புக்களை வழங்குவதில் இழுத்தடிப்பு செய்வதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அண்மை நாட்களாக கிளிநாச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மின்துண்டிப்புக்கள் இலங்கை மின்சார சபையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மின்சார சபையினால் முறையாக காலத்திற்கு காலம் மின் வாசிப்பு பட்டியல் வழங்கப்படாதவர்கள் இவ்வாறான செயற்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மின் வாசிப்பு மாதத்தின் குறித்த காலப்பகுதிக்குள் வாசிக்கப்பட்டு மின்பாவணைக்கான கட்டண விபரம் மக்கள் மத்தியில் கொடுக்கப்படாது,...
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமது அரசியல் எதிர்காலம் குறித்த அறிவிப்பை எதிர்வரும் 24ம் திகதி வெளியிடவுள்ளார்.
அன்றைய தினம் தமிழ் மக்கள் பேரவையின் மக்கள் கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
இது தற்கால சூழ்நிலையில் தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் ரீதியான செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அதன் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன்போது சீ.வி.விக்னேஸ்வரன், இதுநாள் வரையில் வடமாகாண சபையினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் பிரேரணைகளின்...
2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் என்று தான் நம்புவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் அரசியல் கைதிகள் தொடர்பிலான விசாரணைகள் உரிய முறையில் நடத்தப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
சிகிச்சைக்கு வரும் பெண்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மருத்துவருக்கு ஏற்பட்ட நிலை
Thinappuyal News -
சிகிச்சைக்கு வரும் பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட விசேட மருத்துவர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மருத்துவருக்கு இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன அந்த தண்டனையை 25 வருடங்களுக்கு ஒத்திவைத்துள்ளார்.
இந்த ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 25000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் இழப்பீட்டை வழங்குமாறும் நீதிபதி...
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் சலூன் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
தாளங்குடாவைச் சேர்ந்த 18 வயதுடைய வசீகரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி ரெலிக்கோம் வீதியில் உள்ள சலூனில் கடமையற்றி வந்த குறித்த இளைஞர் சம்பவதினமான இன்று வழமைபோல கடையில் தனது வேலையைச் செய்துவந்துள்ள நிலையில் பகல் ஒரு மணியளவில் கடையின் பின்பகுதிக்கு...
முல்லைத்தீவு, குமுழமுனை பொதுச் சந்தையின் புனரமைப்புப்பணிகள் இன்று காலை 9மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த குமுழமுனைப்பிரதேச சபை உறுப்பினர் இ.கவாஸ்கரின் முயற்சியினால் சபைக்கு கொண்டுவரப்பட்ட பிரேரணைகள் அடிப்படையில் குமுழமுனையின் பொதுச்சந்தையில் அடிப்படைத் தேவைகள் காணப்படுவதாகவும் அதனை நிறைவேற்றுவதற்கு பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் இன்று காலை புனரமைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வசதியற்ற நிலையில் காணப்பட்டுள்ள குமுழமுனை பொதுச்சந்தை மக்களின் நீண்டநாள் தேவையை நிறைவேற்றுவதற்கான பணிகளில் சந்தையைச் சுற்றி வேலிகள் அமைக்கப்பட்டு இரண்டு நுழைவாயிக்ளுக்கும் பிரதான...
பதுளை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறைக்கைதி ஒருவர் தப்பிச் சென்ற சம்பவமொன்று பதுளை அரசினர் மருத்துவ மனையில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.பதுளை பிரதான சிறைச்சாலையில் ஆறு வருடங்களை சிறைவாசம் அனுபவித்து வந்த நீர்கொழும்பைச் சேர்ந்த 38 வயது நிரம்பிய சிறைக் கைதியே தப்பிச் சென்றுள்ளார்.
சிறைவாசம் அனுபவித்து வந்த இந் நபர் திடீர் நோய்வாய்ப்பட்டதையடுத்து பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இயற்கை கடனை...
இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட காணிகளில் 78 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அந்த வகையில் மன்னாரில் 23 ஏக்கர் காணியும், முல்லைத்தீவில் 53 ஏக்கர் காணியும், திருகோணமலையில் 3 ஏக்கர் காணியும் விடுவிக்கப்படுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.