அட்டாளைச்சேனை நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் சஜா கடற்கரை வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கிக் கொண்டனர்.
அணிக்கு 9 பேர் 8 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட அம்பாறை மாவட்டத்திலுள்ள 22 முன்னணிக்கழகங்கள் பங்கு கொண்ட இச்சுற்றுப்போட்டி அட்டாளைச்சேனை கோணாவத்தை கடற்கரை மைதானத்தில் நேற்று முன்தினம் மாலை(13) ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் ஜே.அர்சாத் தலைமையில் நடைபெற்றது.
இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு அட்டாளைச்சேனை நியு ஸ்டார் விளையாட்டுக்கழகமும் அக்கரைப்பற்று டீன்ஸ் ஸ்டார் விளையாட்டுக் கழகமும் தெரிவாகியது.
நாணயச் சுழச்சியில் வெற்றி பெற்ற நியு...
கிண்ணியா அல்- − அக்ஸா தேசிய பாடசாலை உதைபந்தாட்ட சாதனையாளர்களுக்கான ஊர்வலம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றது.
இதில் கிண்ணியா அல் − -அக்ஸா தேசிய பாடசாலையில் இவ்வருடம் உதைபந்தாட்ட பயிற்சிற்காக ரோட்டு பாசிலோனா ஊடாக ஸ்பெயின் (பார்சிலோனா) சென்றுவந்த மாணவனான கே.எம்.ஹாதிம், 12 வயதிற்கு கீழ் உதைபந்தாட்டதில் முதன்மை மாணவராக தெரிவு செய்யப்பட்டார் அவரையும் தென்னாசிய பாடசாலைகளுக்கு இடையிலான 46 வது ஆசியன் கிண்ண 18 வயது உதைபந்தாட்ட போட்டிற்கு...
இலங்கை -- இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று பல்லேகலை சர்வதேச மைதானத்தில் இடம்பெறுகிறது.
இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா தொடைப் பகுதியில் ஏற்பட்டிருக்கும் உபாதை காரணமாக இன்று 17 ஆம் திகதி பல்லேகலையில் நடைபெறவுள்ள இங்கிலாந்துடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்க மாட்டார் என தெரியவருகிறது.
“இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது அவரது பின்தொடை பகுதியில் சிறு உபாதை ஒன்று ஏற்பட்டுள்ளது....
02:00 என்ற கோல் கணக்கில் வென்று வடக்கின் கில்லாடியானது பாடும்மீன் அணி. மூன்றாவது முறை வடக்கின் கில்லாடியாகவும் கிண்ணத்தைக் கைப்பற்றி குருநகர் பாடும்மீன் அணி சாதனை படைத்தது.
அரியாலை சரஸ்வதி விளையாட்டுக்கழகம், தமது நூற்றாண்டு விழாவையொட்டி 'வடக்கின் கில்லாடி யார்' என்னும் கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியொன்றை அரியாலை கால்ப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நடத்தி வந்தது.
வருடாவருடம் யாழின் கில்லாடி என நடத்தப்பட்டு வந்த இந்தச் சுற்றுப்போட்டியானது, இந்த வருடம் வடக்கின் கில்லாடியாக மாற்றப்பட்டு,...
இலங்கை அணியின் முன்னாள் வீரரான சனத் ஜெயசூர்யா மீது ஐ.சி.சி ஊழல் புகார் பதிவு செய்துள்ளது.
ஊழல் தடுப்பு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, விசாரணை சார்ந்த முக்கிய ஆவணங்களை அழித்தது போன்ற பிரிவுகளின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐசிசி., வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயசூர்யா 14 நாட்களுக்குள் ஊழல் தடுப்புபிரிவின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இது தொடர்பாக வேறு எவ்வித விளக்கமும் தற்போதைக்கு தெரிவிக்க முடியாது என...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று பாதுகாப்பு அமைச்சின் குழுக் கூட்டம் இடம்பெறவுள்ளது.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்தக் கூட்டம் இடம்பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் பங்கேற்குமாறு வடக்கு கிழக்கைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக் கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாகவும், வடக்கு கிழக்கு நிலவரம் குறித்தும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை...
அஜித், சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அஜித் அவ்வப்போது ரசிகர்களுடன் எடுக்கும் புகைப்படங்கள் மட்டும் அதிகம் வெளியாகி வருகிறது.
இந்த நேரத்தில் படத்தில் சின்ன ரோலில் நடிக்கும் சுரேகாவாணி படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
நான் விஸ்வாசம் படப்பிடிப்பு தளத்தில் உள்ளேன், இங்கே தான் அஜித் இருக்கிறார், அவரை நான் சந்திக்க போகிறேன் என பேசியுள்ளார்.
https://twitter.com/ThalaAjith_FC/status/1052193515898191872
கஞ்சாவை சட்டபூர்வமாக்கிய உலக நாடுகளில் கனடா இரண்டாம் இடத்தை பிடித்துக்கொண்டுள்ளது.
போதைப் பொருட்களை சட்ட பூர்வமாக்கிய முதல் நாடு உருகுவேயாகும்.
உருகுவே கடந்த வருடம் போதைப் பொருளை சட்டபூர்வமாக அனுமதித்தமை குறிப்பிடத்தக்கது.
மீள் உருவாக்கத்தை மேற்கொள்ளக் கூடிய கஞ்சாவை சட்டபூர்வமாக்க கோரி கடந்த சில மாதங்களாகவே கனடாவின் பல இடங்களில் மக்கள் அரசிற்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.
இந் நிலையிலேயே இன்று முதல் அரசாங்கத்தின் அனுமதியுடன் நாடு முழுவதும் கஞ்சாவை விற்க வாங்க முடியும்...
ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளார்அனந்தி சசிதரன்
Thinappuyal News -
எதிர்வரும் 25 ஆம் திகதி வடமாகாண சபை கலையவுள்ள நிலையில் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளார். தமது கொள்கையுடன் இணைய விரும்பும் அனைவருக்கும் அவர் அழைப்பும் விடுத்துள்ளார்.
வடமாகாண சபையின் பதவிக்காலம் இம்மாதம் 25 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது. இந்நிலையில் வடக்கு மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் தமது புதிய கட்சி குறித்து அறிவிப்பு விடுத்துள்ளார்.
ஈழத் தமிழர்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை கொல்வதற்கான சதிமுயற்சிகளிற்கு இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரோ காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவின் இந்து நாளிதழ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.இது தொடர்பில் இந்து நாளிதழ் மேலும் தெரிவித்துள்ளதாவது
நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் சிறிசேன இந்திய இலங்கை உறவுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்திய புலனாய்வு அமைப்பு என்னை கொலை செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது என தெரிவித்துள்ள சிறிசேன இந்திய பிரதமர் நரேந்திர...