கிளிநொச்சியில் இன்றைய தினம் (16.10.2018) வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் உலக வெண் பிரம்பு பாதுகாப்பு நாள் தின நிகழ்வு இடம்பெற்றது. இதில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு அங்கு உரையாற்றுகையில், 1996 தொடக்கம் 2002 காலப்பகுதியில் வன்னியில் மாவட்ட வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய பொழுது இங்குள்ள பலரை நான் சந்தித்திருந்தேன். மீண்டும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு உங்களை சந்திப்பதில்...
இலங்கையின் புகழ்பெற்ற எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் தனது 66 ஆவது வயதில் நேற்று காலமாகியுள்ளார். ஈழத்தின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவராக, சிறந்த நாவலாசிரியராக, இலக்கிய படைப்பாளியாகத் திகழ்ந்த இவர், பல்வேறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு இலக்கியம், எழுத்து, பிற செயற்பாடுகளின் வழியாக பங்களிப்புகளைச் செய்து வந்தவர். ஈழப்போராட்டத்தின் பின்னணியிலான வாழ்வியல் சூழலை பிரதிபலிக்கும் இலக்கியங்களை படைத்தார். முள்முடி மன்னர்கள், இருள் இரவில் அல்ல, மருத்துவர்களின் மரணம், என்றாவது...
-மன்னார் நகர் நிருபர்-   இடம்பெயர்ந்து மீள் குடியேறிய முள்ளிக்குளம் மக்கள் தங்களுக்கு விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட காணியில் பாதுகாப்பு கருதி தற்காலிக கொட்டகைகளை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினர் குறித்த நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளதாக பாதீக்கப்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மழை வெள்ளத்தினால் கடுமையாக பாதீக்கப்பட்டுள்ளதோடு,காட்டு யானைகளினால் அந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர்...
விடுதலைப் புலிகள் அமைப்பின் போர் கப்பலை, பொதுமக்கள் பார்வையிட இராணுவத்தினர் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் திகதி யோர்தான் நாட்டுக்கு சொந்தமான போர் கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு கடற்பரப்பில் கரை ஒதுங்கியுள்ளது. பின்னர் குறித்த கப்பல் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது இலங்கைப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதேவேளை, விடுதலைப் புலிகளின்...
யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்கள் உணர்த்தி நிற்பது என்ன? தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலையும், அதில் குளிர்காயும் தமிழ் அரசியல் தலைமைகளும் தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் பல்வேறு தரப்பட்ட தரப்பினராலும் அடையாள உண்ணாவிரதம், உண்ணாவிரதம், சத்தியாக்கிரகப்போராட்டம், மௌனப் போராட்டம் என பல பல போராட்டங்களை பல அரசியல் சார்ந்த கட்சிகள், அமைப்புக்கள் என நடத்தி முடித்திருக்கின்றன. தொடர்ந்தும் நடக்கின்றன. இவர்களது போராட்டங்கள் என்பது 'எட்டாக் கனிக்கு கொட்டாவி விட்ட கதை'...
(நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்)  அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா பகுதியில் காரொன்று விபத்துக்குள்ளானதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். தியசிரிகம பகுதியிலிருந்து அட்டன் நோக்கி சென்ற கார் 15.10.2018 மாலை 5.30 மணியளவில்  பாதையை விட்டு விலகி 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. சாரதியின் கட்டுப்பாட்டை மீறீ காசல்ரி நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் டிக்கோயா ஆற்றுக்கரையில் வீழ்ந்துள்ளது. காரை செலுத்திய சாரதிக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்ததுடன் மேலதிக...
வீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்தர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் கதிராமன் மகேஸ்வரன் (வயது 52) எனும் 4 பிள்ளைகளின் தந்தை ஆவார். மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை சந்திவெளி எனுமிடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் குறித்த நபர் சைக்களில் சென்றுகொண்டிருந்தபோது தனியார் பஸ்ஸுல்  மோதுண்டு படுகாயமடைந்தனர். அதன்பின்னர் உடனடியாக சிகிச்சைக்காக சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில்...
வவுனியாவில் இன்று அதிகாலை டிப்பர் வாகனச்சாரதி ஒருவர் மின்சாரம் தாக்கி உயரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா மணிப்புரம் பகுதிக்கு தனது டிப்பர் வாகனத்தில் மண் ஏற்றிச் சென்ற செட்டிகுளம் வீரபுரம் பகுதியைச் சேர்ந்த அன்ரன் ஜெகதீஸ்வரன் (ரமேஷ்) 43 வயது என்பவர், இன்று அதிகாலை 3 மணியளவில் டிப்பர் வாகனத்திலுள்ள மண்ணை வீட்டிற்குள் பறித்துவிட்டு உயற்றிய பெட்டியுடன் டிப்பர் வாகனத்தை வீட்டிற்கு வெளியே செலுத்தியுள்ளார்....
    “கல்முனையில் வாழும் தமிழர்களை திட்டமிட்டமுறையில் அழித்தொழிக்க வேண்டும் என்பதில், முஸ்லிம் அரசியல்வாதிகள் குறியாக இருந்து வருவதாக, இங்குள்ள மக்களே என்னிடம் கூறுகின்றனர்” என்று, கல்முனை ஸ்ரீ சுபத்திரராம மஹா விகாரையின் விகாராதிபதி ரன்முதுகல சங்கரட்ண தேரர் தெரிவித்தார். கனேடிய அரசின் நிதியுதவியுடன் கல்முனை மாநகரில் 3400 கோடி ரூபா நிதியில் மலசலகூடக் கழிவகற்றல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அப்பகுதி வாழும் தமிழர்களுடனான சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் கூறினார். அங்கு அவர்...
வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம், இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவுக்கு வருகின்றது. அது, கடந்த ஐந்து ஆண்டுகளாக “வடக்கின் முதலமைச்சர்” என்கிற அடையாளத்தோடும் அங்கிகாரத்தோடும் வலம்வரும் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தன்னுடைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகள், தெரிவுகள் தொடர்பில் உறுதியான நிலைப்பாடொன்றை எடுக்க வேண்டிய நெருக்கடியை வழங்கியிருக்கின்றது. மக்கள் பிரதிநிதிகளோ, போராளிகளோ யாராக இருந்தாலும், அவர்கள் அதிகாரத்தில் இருக்கும் வரைக்கும்தான் மரியாதை. அதிகாரத்தை (அல்லது பதவியை) இழந்து “முன்னாள்” என்கிற அடையாளத்தைப்...