எல்லை நிர்ணய மீளாய்வு குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னரே மாகாண சபைத் தேர்தலை எம்முறையில் நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வர முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். மாகாண சபை தேர்தல் தொடர்பிலான கட்சி தலைவர்களின் சந்திப்பு இன்று தேர்தல்கள் ஆணையகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், மாகாண...
மட்டக்களப்பு புறநகரில் மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பத்திற்காக கரித்தாஸ் இலங்கை-செடெக் அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்ட வீடு இன்று காலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கை-செடெக் அமைப்பு இந்த ஆண்டு தனது 50ஆவது ஆண்டு நிறைவினை அனுஸ்டிக்கின்றது. இதற்கு அமைவாக மாவட்டம் தோறும் ஒரு வறிய குடும்பம் தெரிவுசெய்யப்பட்டு சகல வசதிகளும் கொண்ட வீடு ஒன்றினை நிர்மாணித்து வழங்கி வருகின்றது. இதன்கீழ் செடக் ஹரித்தாஸ் ஸ்ரீலங்கா அமைப்பின் உதவியுடன் மட்டக்களப்பு ஹரிதாஸ் எகட் 11 இலட்சம்...
யுத்த காலத்தில் தமது வாழ்விடங்களையும், விவசாயக் காணிகளையும் இழந்த திருகோணமலை மாவட்டத்திலுள்ள குச்சவெளி சேருவில பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பொது மக்களின் காணிகள் யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னரும் உரிமையாளர்களுக்கு மீண்டும் வழங்குவதிலும் அல்லது அவர்கள் பயிர்ச்செய்கை மேற்கொண்ட காணிகளை விடுவிப்பதிலும் இதுவரை காலமாக நிலவிய இழுபறி நிலைக்கு நிரந்தரத்தீர்வை எட்டும் விதத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஏற்பாட்டில் காணி அமைச்சர் கயந்த...
புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் தமிழ் அரசியல் கைதிகள் அல்ல. தமிழ் மக்களுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஸைகளுக்கு எதிராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கே உண்மையில் புனர்வாழ்வு கொடுக்கவேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை எம்.சக்திவேல் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைத் தொடர்பில் இன்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்த பின்னர் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்...
ஆட்கடத்தல், புகலிட கோரிக்கையாளர்களின் படகுகளை அவுஸ்திரேலியா எல்லைக்குள் நுழைவதை தடுக்கும் விதமாக அவுஸ்திரேலிய எல்லைப்படை வான் மற்றும் கடல் கண்காணிப்பை அதிகரித்துள்ளது. இதனை சுட்டிக்காட்டியிருக்கும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில், “2013ல் கடுமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது முதல் ஆட்கடத்தல் முயற்சிகள் கண்டறியப்பட்டு, இடைமறிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான முயற்சிகள் குறைந்தும் உள்ளன. இந்த கொள்கை நடைமுறைக்கு வந்தததிலிருந்து 33 ஆட்கடத்தல் படகுகள் கடலிலேயே மறிக்கப்பட்டுள்ளன, 827 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். கணக்கிலடங்கா பலர், அவுஸ்திரேலியாவை...
பிரித்தானியாவில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த அனைவரும் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தில் உரையாற்றுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சென்றிருந்த நிலையில், அவருக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் 28, 34, 50 மற்றும் 54 வயதான ஆண்களே இவ்வாறு கைது...
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் பலரது வீடுகளுக்கான மின்சாரத்தை எவ்வித முன்னறிவித்தலுமின்றி மாலை 5.00 மணியளவில் இலங்கை மின்சார சபை தடைசெய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் பரீட்சை எழுதும் மாணவர்கள், கைக்குழந்தைகளுடன் வாழ்வோர் எனப் பலரும் பெரிதும் சிரமப்படுகின்றனர். இலங்கை மின்சார சபை தமிழர் வாழும் பகுதிகளுக்கு வருடக்கணக்கில் மின்கட்டணச் சிட்டைகளை அனுப்பாமல் விட்டு பெருமளவு பணம் மின்சாரக் கட்டணமாகச் சேர்ந்தவுடன் அதனை அப்படியே கட்டுமாறு அடாவடியாகச் செயற்பட்டு வருகின்றது. அதே போலத்தான் கிளிநொச்சியில்...
கிங் கங்கையில் பாய்ந்து தாயொருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மகனுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வென்னப்புவு, தும்மலதெனிய பிரதேசத்தில் கிங் ஓய பாலத்தில் இருந்து குதித்து குறித்த தாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வடக்கு தும்மலதெனிய பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான தாய் ஒருவரே தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்து கொண்டவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டதாக...
சமகாலத்தில் இலங்கை முகங்கொடுத்துள்ள மோசமான நெருக்கடி நிலை குறித்து உலக நாடுகள் கவனம் செலுத்தியுள்ளன. டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் தொடர்ச்சியாக பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையினால் இலங்கை சர்வதேசத்தின் அவதானத்திற்குள்ளாகியுள்ளது. இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா உட்பட வளர்ந்து வரும் பொருளாதார சந்தையின் பரிவர்த்தனை விகித நெருக்கடியின் அடிப்படையில் சர்வதேச நாடுகள் கவனம் செலுத்தியுள்ளன. இது தொடர்பான தகவல்களை பொருளாதாரம் தொடர்பான சர்வதேச நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. பரிவர்த்தனை விகித நெருக்கடி காரணமாக முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளதாக...
முச்சக்கரவண்டி கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருளுக்கான விலை உயர்வினை தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் முச்சக்கரவண்டிகளின் கட்டணங்கள் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கிலோமீற்றருக்காக தற்போது அறவீடு செய்யப்படும் 60 ரூபா என்ற தொகையில் மாற்றம் இருக்காது எனவும், இரண்டாம் கிலோமீற்றர் முதல் அறவீடு செய்யப்படும் தொகை 40 ரூபாவிலிருந்து 50 ரூபாவாக உயர்த்தப்பட உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பாடசாலை வான் சேவைகளின் கட்டணங்களும் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.