நடிகை த்ரிஷா மற்றும் தெலுங்கு நடிகர் ராணா காதலிப்பதாக பல வருடங்களுக்கு முன்பிருந்தே கிசுகிசு உள்ளது. அதன்பின் அவர்கள் பிறந்துவிட்டதாகவும் பேசப்பட்டது.
இந்நிலையில் தற்போது அவர்கள் மீண்டும் ஜோடிசேர்ந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி-த்ரிஷா ஜோடியாக நடித்துள்ள 96 படம் ஹிட் ஆகியுள்ள நிலையில் அதே கதையை தெலுங்கில் ரீமேக் செய்து அதில் நடிக்க ராணா விருப்பம் தெரிவித்துள்ளாராம். ஹீரோயினாக த்ரிஷாவே அதிலும் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
சினிமாவில் எத்தனையே பேர் நடிகர்கள் என்று இருக்கிறார்கள். ஆனால் உண்மையில் நடிப்பை உள்வாங்கி அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து நம்மை ஆச்சரியப்படுத்தியவர்கள் சிலரே உள்ளனர்.
அந்த வரிசையில் எம்.எஸ். பாஸ்கர் அவர்களை கூறலாம். இவருடைய மகன் ஆதித்யா 99 என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
இப்படத்திற்காக பாராட்டுக்களை பெற்று வரும் இவரின் ஒரு புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.
குறும்படத்திற்காக அப்படி நடித்தாரா என்பது தெரியவில்லை, அச்சு அசலாக பெண் வேடம் போட்டது ஒரு...
2.0 முடிந்தபிறகு ஷங்கர் அடுத்து இயக்கவுள்ள இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு எப்போதோ வந்துவிட்டது, ஆனாலும் இன்னும் ஷூட்டிங் துவங்காமல் முதற்கட்ட பணிகள் மட்டும் நடந்துவருகின்றன.
இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தான் 2.0 படத்திலும் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்ஷய் குமாருக்கு வட இந்தியாவில் ரசிகர்கள் அதிகம், அதனால் ஹிந்தியிலும் இந்தியன் 2...
இலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
இன்றைய போட்டியில் வெறும் 15 ஓவர்கள் மாத்திரம் வீசப்பட்ட நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.
தொடர்ந்து சுமார் 4 மணித்தியாலங்கள் போட்டி மழையால் தடைப்பட, இரவு எட்டு மணியளவில் மைதானம் போட்டிக்காக தயார்படுத்தப்பட்டது.
எனினும் மைதானத்தை ஆராய்ந்த நடுவர்கள் மைதானத்தின் சில பகுதிகளில் ஈரத்தன்மை (Wet) அதிகமாக இருப்பதால் போட்டியை கைவிடுவதாக அறிவித்தனர்.
தம்புள்ளை...
சிறப்பான பந்துவீச்சு மத்திய வரிசை துடுப்பாட்டம் கைகொடுக்க கிண்ணம் வென்ற சென்றலைட்ஸ்
மயூரனின் சிறப்பான பந்துவீச்சு, ஜெரிக்துசாந்தின் சகலதுறையாட்டம் மற்றும் டர்வினின் அதிரடி துடுப்பாட்டம் என்பன கைகொடுக்க ஜொலிஸ்ரார்ஸ் வெற்றிக்கிண்ணத்தை சென்றலைட்ஸ் அணி தம்வசப்படுத்தினர்.
தொடரின் சிறந்த வீரனாக கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியின் ஜெயரூபன் தெரிவு செய்யப்பட்டார்.
ஜொலிஸ்ரார்ஸ் விளையாட்டுக்கழகம், யாழ்.மாவட்ட துடுப்பாட்டச் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கிடையில் 30 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட சுற்றுப்போட்டியொன்றை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி...
தீபாவளி பருவ காலத்தில் யாழ். சாவகச்சேரி பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாபார நோக்குடன் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் வியாபாரிகளால் உள்ளூர் வியாபாரிகளுக்கு நட்டம் ஏற்படுவதாக சாவகச்சேரி வணிகர் மன்றம் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாதென நகரசபையிடம் வணிகர் கழகம் கோரிக்கை விடுத்தது.
குறித்த கோரிக்கை சாவகச்சேரி நகரசபைக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டதையடுத்து நகர் பகுதியில் வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி வழங்குவதில்லை எனவும், அவ்வாறு...
அம்பாந்தோட்டையில் சீனாவின் கடற்படை தளம் – அமெரிக்காவிற்கு தெளிவுபடுத்தியது இலங்கை
Thinappuyal News -
இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா தனது கடற்படை தளத்தை அமைக்கலாம் என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள இலங்கை இது குறித்து அமெரிக்காவிற்கு தெளிவுபடுத்தியுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலுவலகம் இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையிலேயே இந்த விடயம் இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் சீனாவின் கடற்படை தளம் உருவாகலாம் என சிலர் கற்பனை செய்கின்றனர் என தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம் அம்பாந்தோட்டை துறைமுகம் என்பது இலங்கையின் துறைமுக அதிகார சபைக்கும் சீனா மேர்ச்சன்ட்...
(மன்னார் நகர் நிருபர்)
மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது தொடர்சியாக இடம் பெற்றுக்கொண்டு வருகின்றது. தெடர்ச்சியாக மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டும் அப்புறப்படுத்தப்படும் வருகின்றது.
மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி T.சரவணா ராஜா மேற்பார்வையிலூம் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையிலும் இடம் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் அகழ்வு பணியின் ஆரம்ப நாட்களில் சந்தேகத்திற்க்கு இடமான பொலித்தீன் பக்கெட் ஒன்று குறித்த வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவ் பொலிதீன் பாக்கெட்...
பாணந்துரை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 6 வாகனங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் வாகனங்களை வாடகைக்கு வாங்கி அதனை விற்பனை செய்து வந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது, கைப்பற்றப்பட்ட வாகனங்களில் பெறுமதி 300 இலட்சம் ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கைது செய்யப்பட்டநபர் வௌிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாகத் தெரிவித்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டார்.
சந்தேகநபர் இன்று (11) பாணந்துரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிஷெல்ஸ் நாட்டு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் அனைவரையும் விடுவித்துக் கொள்வதற்கான இயலுமை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அந்நாட்டு ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இந்த விடயம் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அகில இலங்கை நன்னீர் மற்றும் நீரியல்வள உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இலங்கை தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
நமது நாட்டிலிருந்து...