ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான காலத்தில் 29,309 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலை குற்றத்திற்காக தண்டனை பெற்ற ஒருவர் இதில் அடங்குவதாகவும் நாடாளுமன்றத்தில் வைத்து நேற்று தெரியவந்துள்ளது. வாய்மொழிமூலமான பதில் எதிர்பார்த்து, நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ, எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கயந்த கருணாதிலக்க இந்த விபரங்களை கூறியுள்ளார். பாலியல் குற்றம், சிறார்களுடன் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றங்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு...
இலங்கையில் மிகவும் ஏழ்மையான ஒருவர் அவுஸ்திரேலியாவில் மிகப் பெரிய பணக்காரரான விதம் குறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குருணாகல், நிக்கவரெட்டிய பகுதியை சேர்ந்த சந்திரா திஸாநாயக்க அப்பிள் கம்பனியின் கிளை நிறுவனத்தில் பிரதான பதவியை பெற்றுள்ளார். தனது திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் அவுஸ்திரேலியாவில் செயற்படும் அப்பிள் நிறுவனத்தின் உரிமையாளராக சந்திரா மாறியுள்ளார். இணையத்தளம் ஊடாக வருடாந்தம் 8 பில்லியன் டொலர் பெறுமதியான கையடக்க தொலைபேசிகளை அவர் விற்பனை செய்து வருகின்றார். சந்திரா...
>வவுனியா பொலிஸாருக்கு பக்கபலமாக இருந்து பல குற்றங்களுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காட்டிய கூப்பர் எனும் மோப்ப நாய் உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும், மின்சாரம் தாக்கியதாலேயே இரண்டரை வயதுடைய கூப்பர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இந்த நிலையில் கூப்பரை அழைத்து சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் உயிரிழந்த மோப்பநாய் மருத்துவ பரிசோதனைக்காக கால் நடைவைத்திய அதிகாரியிடம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான...
உலகின் பலமான கடவுக்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Passport Index) என்ற இணையத்தளதினால் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் தரப்படுத்தலுக்கு அமைய இலங்கையின் கடவுச்சீட்டிற்கு 83வது இடம் கிடைத்துள்ளது. இலங்கை கடவுச்சீட்டை வைத்துள்ள நபர் ஒருவர் விசா இன்றி உலகின் 47 நாடுகளுக்கு பயணிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது. குறித்த நாடுகளுக்கு சென்ற பின்னர் On Arrival Visa விசா பெற்றுக் கொள்ளும் வசதி 30 நாடுகளுக்கு மாத்திரமே...
போருக்கான அறிகுறிகள் இல்லையெனில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசு ஏன் தயங்குகின்றது? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சபையில் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாது நல்லிணக்கம் பற்றி கதைப்பதில் எவ்வித பயனும் இல்லை. அரசியல் தீர்வை வழங்காது, வடபகுதியில் தங்கத்தால் வீதி போட்டால்கூட எவ்வித மாற்றமும் ஏற்படபோவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலவரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில்...
இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுபயணம் மேற்கொண்டு ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று தம்புல்லாவில் நடைபெறுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்து ஆசியக்கிண்ண தொடரில் படுதோல்வியடைந்து இலங்கை அணி வெளியேறிய நிலையில் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதே சமயத்தில் சொந்த ஊரில் விளையாடுவது...
30 வயதை தாண்டினாலே பெண்கள் தங்கள் அழகு குறித்து கவலைப்படுவதுண்டு. ஏனெனில் 30 வயது ஆகிவிட்டாலே பெண்களுக்கு முகச் சுருக்கம் ஏற்பட்டு விடுகின்றது. இதனை தடுக்க அழகு நிலையங்களுக்கு போய் அழகுபடுத்துவதை விட வீட்டிலே நாம் எளிய வழிகளைக் கையாளுவோம். முகசுருக்கம் வரமால் இருக்க கடைபிடிக்க வேண்டியவை தினமும் குறைந்தது 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடியுங்கள். நீர்ச்சத்து அதிகம் நிறைந்த இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, புடலங்காய், பூசணி,...
இந்திய வீரர் டோனிக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டதால் தேர்வு குழு அதிருப்தி அடைந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. அண்மையில் முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா 7வது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. இதன் லீக் சுற்றில் ஹாங்காங், பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியதால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா, சிகர் தவான், புவனேஸ்வர் குமார், பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால்...
உணவு உண்ட பின் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் ஜீரணமடைய செய்து உடலுக்கு சுறுசுறுப்பை தருகிறது. மேலும் 100 கிராம் அத்திப்பழத்தில் 107 கலோரிகள் உள்ளன, குறிப்பாக கொழுப்பு சத்து (0.1கிராம்) உள்ளது. இதில் கால்சியம், இரும்புசத்து, மெக்னீசியம், விட்டமின் B-12 ஆகியவை அதிக அளவில் கிடைகின்றன. தினமும் இரண்டு பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப்...
அமெரிக்காவில் சாலை விபத்தில் கொல்லப்பட்ட காதலனின் கல்லறையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் அன்று திருமண உடையில் இளம்பெண் தேம்பி அழுத சம்பவம் உறவினர்களை கண்கலங்க வைத்துள்ளது. குறித்த சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி நடந்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மது போதையில் இருந்த சாரதியால் ஏற்பட்ட சாலை விபத்தில் 27 வயதான Kendall Murphy என்ற இளைஞர் கொல்லப்பட்டார். இவருக்கும் Jessica Padgett என்ற இளம்பெண்ணுக்கும்...